Home
News

WhatsApp ஃபிராடு கும்பலுக்கே விபூதி அடித்த இளம்பெண்.. அசால்ட் பண்ணிய சம்பவம்!

இந்திய வாட்ஸ்அப் (WhatsApp) யூசர்களுக்கு இன்டர்நேஷனல் நம்பர்களில் (International Numbers) இருந்து ஒரு மோசடி கும்பல், மெசேஜ் (Messages) செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாட்ஸ்அப் ஃபேக் இன்டர்நேஷனல் மெசேஜ் ( WhatsApp Fake International Messages) பெற்ற ஒரு பெண், அந்த மோசடி கும்பலை அசால்ட்டாக கையாண்டு டிமிக்கி கொடுத்துள்ளார். இது குறித்த விவரம் இதோ.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம் அதிகப்படியான பண மோசடி சம்பவம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சைபர் கிரைம் (Cyber Crime) கும்பல் ஒன்று வாட்ஸ்அப் மூலம் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அசால்ட் சம்பவம்.. WhatsApp ஃபிராடு கும்பலுக்கே விபூதி அடித்த இளம்பெண்!

இந்த சைபர் கிரைம் கும்பல், போலியான வாட்ஸ்அப் நம்பரில் இருந்து ஒருவருக்கு கால் செய்தோ, மெசேஜ் செய்தோ பார்ட் டைம் ஜாப் வாய்ப்பு உள்ளது. யூடியூப் வீடியோவுக்கு லைக் போட்டால் போதும், பிடிஎஃப் பைல்களை பார்த்து டைப் செய்து கொடுத்தால் போதும், உங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி வருகிறது.

இதனை நம்பி பலர் தங்களது வங்கி தகவல்கள் (Bank Details), தனிப்பட்ட ஆடியோக்கள் (Audios), வீடியோக்கள் (Videos), போட்டோக்களை (Photos) பறிகொடுத்துள்ளனர். அதேபோல பணமும் திருடப்படுகிறது. இந்த கும்பல் இந்திய மொபைல் நம்பர்களை பயன்படுத்தாமல், மலேசியா (+60), எத்தியோப்பியா (+251), கென்யா (+254), வியட்நாம் (+84), இந்தோனேசியா (+62), பெரு (+51) உள்ளிட்ட நாடுகளின் நம்பர்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி வட மாநிலத்தை சேர்ந்த பலரிடம் பார்ட் டைம் ஜாப் இருக்கிறது என்ற சொல்லி கால் மூலமும், மெசேஜ் மூலம் மோசடி கும்பல் கைவரிசை காட்டி பணத்தை திருடியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ்அப் மோசடி கும்பலுக்கே விபூதி அடித்து தப்பித்துள்ளார்.

இந்த பெண்ணும், அந்த மோசடி கும்பலும் வாட்ஸ்அப்பில் செய்த சாட் குறித்த ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள சால்ட் (Salt) என்னும் ஃபைன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் உதிதா பால் (Udita Pal). இவருக்கு இன்டர்நேஷனல் நம்பரில் இருந்து அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்துள்ளார்.

அதில் தங்களிடம் பார்ட் டைம் ஜாப் வாய்ப்பு இருப்பதாவும், யூடியூப் வீடியோவை பார்ப்பதற்கும், அதை சப்ஸ்கிரைப் செய்வதற்கும் பணம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த உதிதா பால் "சரி நான் செய்கிறேன்" என்று பதிலளித்துள்ளார். அதன்பின் ஒரு யூடியூப் வீடியோவை அந்த நபருக்கு உதிதா பால் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அந்த மோசடி நபர் பதிலளிக்காமல், வாட்ஸ்அப் சாட் செய்வதையே நிறுத்திக்கொண்டுள்ளார். ஏனென்றால் உதிதா பால் அனுப்பியது, "ஆன்லைனில் மோசடி செய்ய முயற்சித்து மாட்டிக்கொண்ட முட்டாள்" என்று பதிவிடப்பட்ட வீடியோவாகும். இப்படி உதிதா பால், அந்த கும்பலிடம் இருந்து தப்பித்ததோடு, அவர்களை கிண்டல் செய்தும் வந்துள்ளார். ஆகவே மக்கள் யாரும் வாட்ஸ்அப்பில் வரும் பார்ட் டைம் ஜாப் வாய்ப்பை நம்ப வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Woman tricked scammers who tried her by offering fake job via WhatsApp chat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X