Home
News

சார்ஜ் செய்தபடி லேப்டாப்பில் வேலை செய்தபோது மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியர் படுகாயம்

லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை எப்போதும் கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சார்ஜ் செய்தபடியே இந்த சாதனங்களை பயன்படுத்துவது தவறு. இந்நிலையில் சார்ஜ் செய்தபடியே லேப்டாப்பை பயன்படுத்தியபோது தீப்பிடித்ததில் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் கடப்பா

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் மேக்கவாரி கிராமத்தை சேர்நதவர் சுமலதா. இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி செய்துவருகிறது. மேலும் கடந்த இண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஒர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில்
வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்.

மின்சாரம் சுமலதா

சுமலதா தன்னுடைய லேப்டாப்பை சார்ஜ் போட்ட நிலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லேப்டாப் சார்ஜ்
10 சதவீதத்திற்கும் குறைந்து அதிலிருந்து ஹை வோல்டேஜ் மின்சாரம் சுமலதா மீது பாய்ந்தது.

40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த

குறிப்பாக 40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த சுமலதாவை பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக
அனுமதித்துள்ளனர். மேலும் மருத்துமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருவிகளில் எத்தனைப் பாதுகாப்பு

குறிப்பாக கருவிகளில் எத்தனைப் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை பயன்படுத்தும் போது நாம் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதோடு அவற்றை சரியாக பராமரிப்பதும் அவசியம் ஆகும்.

ல் லேப்டாப் சாதனங்களை 8 மணி

அதேபோல் லேப்டாப் சாதனங்களை 8 மணி நேரத்திற்கு மேல் ஓட விடாதீர்கள். தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், லேப்டாப் அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால்,அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும். மடிக்கணினியின் ஆயுள் நீடிக்க வேண்டுமென்றால், உபயோகிக்காத நேரத்தில் ஷட் டௌன் செய்யவும்.

லேப்டாப் சாதனங்களை வருடத்திற்கு ஒரு

லேப்டாப் சாதனங்களை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும். நம்மில் சில பேர் ஆரோக்கியமாக இருந்தும் வருடத்திற்கு ஒரு முறை நம் உடல்நலத்தை பரிசோதிக்க மருத்துவரை அணுகுவோம். அதே போல் லேப்டாப் சாதனங்களையும் குறிப்பிட்ட காலத்தில் வல்லுனரால் சோதித்து பார்க்கப்பட வேண்டும்.

அதிக வெப்பமும் லேப்டாப் பேட்டரியை

குறிப்பாக அதிக வெப்பமும் லேப்டாப் பேட்டரியை பாதிப்படைய செய்யும். குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் லேப்டாப்பை வைத்துகொள்ளவும். முடிந்தவரை லேப் டெஸ்க் வைத்து பயன்படுத்தவும். அதேபோல் லேப்டாப் சாதனங்களில் ஒரே நேரத்தில் பல மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
woman techie injured in laptop blast in Andhra Pradesh: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X