பெண்ணிடம் பிரசவத்தை சொன்ன Apple Watch.. அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வு!

|

ஆப்பிள் வாட்ச் ஆனது அசாதாரண இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவைகளை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆப்பிள் வாட்ச் உயிரை காப்பாற்றியது என்ற நிகழ்வை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். அதன்படி இங்கு ஒரு பெண்ணிடம் அவரது மருத்துவ பரிசோதனைக்கு முன்பே அவர் கர்ப்பமாக இருப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் உடனான அனுபவம்

ஆப்பிள் வாட்ச் உடனான அனுபவம்

34 வயதான பெண் ஒருவர் ஆப்பிள் வாட்ச் உடனான தனது அனுபவத்தை Reddit தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார். அதில் அவரது ஆப்பிள் வாட்ச் 15 நாட்களுக்கும் மேலாக தனது அதிகரித்த இதயத் துடிப்புக் குறித்து எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது ஓய்வெடுக்கும் நேரத்தின் போது இதயத்துடிப்பு 57 ஆக இருக்கும் எனவும் ஆனால் சமீபத்தில் தனது இதயத் துடிப்பு 72 ஆக அதிகரித்தது எனவும் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான உணவு..

ஆரோக்கியமான உணவு..

தான் ஜிம்மிற்கு சென்று ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதாகவும் உடலில் அதிக அக்கறையுடன் கவனமாக இருந்தது வருவதாகவும் தெரிவித்தார்.

தனது 18 மாத குழந்தை தன்னிடம் தாய்ப்பால் குடித்து வருகிறார் இதன்காரணமாக கூட இதயத்துடிப்பு அதிகமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதயத் துடிப்பு அதிகமாகவே இருந்துள்ளது.

ஆன்லைனில் சோதித்து பார்த்த பெண்

ஆன்லைனில் சோதித்து பார்த்த பெண்

இதையடுத்து அந்த பெண் முதலில் கோவிட் பரிசோதனை செய்துள்ளார். இதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

பின் சளி மற்றும் காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்தார். ஆனால் அதிலும் எந்த சிக்கலும் இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது.

பின் ஏன் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கிறது என சாத்தியமான காரணங்கள் குறித்து ஆன்லைனில் சோதித்து பார்த்துள்ளார். அதில், கர்ப்பக் காலத்தில் பெண்களின் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் எதுவும் இல்லை

அறிகுறிகள் எதுவும் இல்லை

இதையடுத்து பிரசவத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 4 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்ததால், இதுதொடர்பான எந்த அறிகுறிகளும் அவருக்கு தென்படவில்லை என கூறப்படுகிறது.

துல்லியமாக கண்டறியும் ஆப்பிள் வாட்ச்

துல்லியமாக கண்டறியும் ஆப்பிள் வாட்ச்

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவரது உடலில் உள்ள அசாதாரணமான ஒன்றை துல்லியமாக கண்டறிந்து ஆப்பிள் வாட்ச் எச்சரித்தது தான்.

கர்ப்பத்தை கண்டறிந்ததற்காக தனது ஆப்பிள் வாட்சை அந்த பெண் வெகுவாக பாராட்டினார். அதேபோல் ஆப்பிள் வாட்ச் இல் உள்ள இதயத் துடிப்பு விழிப்பூட்டல்களை அனைவரும் கவனிக்கும் படி பரிந்துரை செய்துள்ளார்.

24 மணிநேரமும் இதயத் துடிப்பு கண்காணிப்பு

24 மணிநேரமும் இதயத் துடிப்பு கண்காணிப்பு

பொதுவாக ஸ்மார்ட்வாட்ச் இல் பல்வேறு ஆரோக்கிய அம்சங்கள் இருக்கும் என்பது அறிந்ததே. அனைத்திலும் தனித்து நிற்கும் ஆப்பிள், இதிலும் மேம்பட்ட அம்சங்களோடு தனித்தே இருக்கிறது.

ஆப்பிள் வாட்சில் ஈசிஜி சென்சார் ஆதரவு இருக்கிறது. இந்த ஈசிஜி சென்சார் இதய துடிப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் உயிரைக் காப்பாற்றியதாக பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்றை பார்க்கலாம். இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் லாஸ்ட். 54 வயதான இவரின் இதயத்துடிப்பை கண்காணித்த ஆப்பிள் வாட்ச் அவருக்கு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறது. அதுவும் ஒரு முறை இரண்டு முறை அல்ல, 3000 முறைக்கும் மேல் எச்சரிக்கை எழுப்பி இருக்கிறது.

3000 முறை எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் வாட்ச்

3000 முறை எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் வாட்ச்

வாட்ச் இல் உள்ள ஈசிஜி ஹார்ட் சென்சார் கிட்டத்தட்ட 3000 முறை அவரது குறைந்த இதயத் துடிப்பு குறித்து எச்சரிக்கைகளை அவருக்கு அனுப்பி உள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர இதய அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின் அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தனது உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்சிற்கு அவர் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Woman Praised Apple Watch For Detect and Informed about Pregnancy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X