யூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட அமெரிக்க பெண்.!

அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மனி எவ்வித மருத்துவ உதவியும் இன்றி யூடியூப், வலைத்தளங்களின் உதவியுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.

|

அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மனி எவ்வித மருத்துவ உதவியும் இன்றி யூடியூப், வலைத்தளங்களின் உதவியுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். டியா ஃப்ரீமேன் என்ற பெண் தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

யூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்.!

விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்ற போது துருக்கியில் உள்ள தங்கும் விடுதி அறையில் தனக்கு கிடைத்த டவல்கள், ஷூ லேஸ், தேநீர் கோப்பை, மற்றும் சிறிய கத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். எவ்வித மருத்துவ உதவியும் இன்றி விடுதி அறையின் குளியலறை பெட்டியில் குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி

ஜனவரி

ஜனவரி மாத வாக்கில் தனது பிரசவத்தை அறிந்து கொண்ட டியா, முன்னதாக ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தார். பிரவசத்திற்கு நேரம் இருப்பதை காரணமாக கொண்டு இரண்டு வார சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என நினைத்து டியா பயணத்தை தொடர்ந்தார்.

விமான நிலைய சோதனை மையத்தில்

விமான நிலைய சோதனை மையத்தில்

பயணத்தின் போது விமான நிலைய சோதனை மையத்தில் காத்திருந்த போது டியாவுக்கு வயிற்று வலி அதிகரித்திருக்கிறது. உடனடியாக ஓய்வு எடுக்க முடிவு செய்து இஸ்தான்புல் நகரின் தங்கும் விடுதிக்கு டியா விரைந்தார். பின் தங்கும் விடுதி அறையில் இருந்தபடி பிரசவ வலிக்கான அறிகுறிகளை இணையத்தில் தேடி, இறுதியில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார்.

மொழி

மொழி

பல்வேறு காரணங்களுக்காக மருத்துவ உதவியை நாடாத டியா, மொழி தெரியாத நாட்டில் தனது காப்பீடு ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் அடைந்தார்."நாட்டின் அவசர எண் கூட எனக்கு தெரியவில்லை, பின் அதனை நான் கூகுள் செய்திருக்கலாம் என நினைத்தேன்," என அவர் தெரிவித்தார்.

வீடியோ

வீடியோ

தங்கும் விடுதி அறையினுள், டியா எப்படி குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என கூகுள் செய்திருக்கிறார் தனது தேடலுக்கு வீடியோ மூலம் பதில் பெற்றிருக்கிறார். வீடியோ லோடு ஆகும் நேரத்தில் பாத் டப்-இல் பாதி அளவு நீரை நிரப்பி அதில் சாய்ந்தவாறு படுத்துக் கொண்டார், பின் சில நிமிடங்களில் தனது குழந்தை பிறந்து நீரில் மிதந்தது.

குழந்தையின் பாலினம் தெரியாத நிலையில் அதனை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் குழந்தையை கையில் எடுத்தார். குழந்தையை தொப்புள் கொடி சுற்றியிருந்ததை கண்டு மீண்டும் இணையத்தின் கதவை கீபோர்டு வழியே தட்டினார். இணைய வழிகாட்டுதலுடன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார்.

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

தொப்புள் கொடியை வெட்ட கிளாம்ப் மற்றும் கத்திரிக்கோள் தேவைப்பட்ட சமயத்தில், அறையில் கிடைத்த தேநீர் கோப்பையில் சுடுநீர் வைத்து, ஷூ லேஸ் மற்றும் சிறிய கத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்ததும் அறையிலேயே குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் பசியாற்றிவிட்டு, குளியலறையை சுத்தம் செய்திருக்கிறார். பிரசவம் ஆன பெண் சில மணி நேரங்களில் குளியலறையை சுத்தம் செய்வது பயங்கரமான அனுபவமாக இருந்தது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

செய்தியாளர்கள்

செய்தியாளர்கள்

பின் குழந்தையுடன் ஓய்வெடுத்த டியா, மறுநாள் காலையில் குழந்தையுடன் விமான நிலையம் சென்றிருக்கிறார். பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையுடன் டியாவை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து மருத்துவ குழுவினரை அழைத்திருக்கின்றனர்.

மருத்துவ குழு விரைவதற்குள் இந்த விவகாரம் துருக்கி நாட்டு செய்தியாளர்களுக்கும் கிடைத்ததால், விமான நிலையத்தில் டியா தங்க வைக்கப்பட்டு இருந்த அறையை செய்தியாளர்கள் சுற்றி வளைத்துவிட்டனர்.

அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம் செல்லும் வழியில் விமான நிலைய அதிகாரிகளிடம் தனது குழந்தையின் நடுப்பெயர் சேவியர் என சூட்டியிருப்பதாக டியா தெரிவித்துள்ளார். குழந்தையை துருக்கியில் பிறந்ததால், நடுப்பெயரை துருக்கி மொழியில் சூட்டியதாக டியா தெரிவித்திருக்கிறார். சேவியர் பெயருடன் விமான நிலைய அதிகாரிகள் தங்கள் பங்கிற்கு அடா என பரிந்துரைத்திருக்கின்றனர். துருக்கி மொழியில் அடா என்றால் பரிசு என பொருள் ஆகும்.

சேவியர் அடா ஃப்ரீமேன் மற்றும் அவரின் தாயார் அமெரிக்க தூதரகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சேவியருக்கான பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, அமெரிக்க நாட்டு பிறப்பு சான்றிதழை பெற்றிருக்கிறார். இதனை டியா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மருத்துவமனைக்கு சென்ற டியா

மருத்துவமனைக்கு சென்ற டியா

இறுதியில் மருத்துவமனைக்கு சென்ற டியா மற்றும் அவரது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் இரண்டு வாரங்களுக்கு விமான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து டியா துருக்கியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டியாவின் இரண்டு வார தங்கும் செலவை துருக்கி நாட்டு விமான நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.


வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கர்களின் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டியா ஃப்ரீமேன்

டியா ஃப்ரீமேன்

டியா ஃப்ரீமேன் கர்ப்பமானது முதல் குழந்தை பிறக்கும் வரை அவரது பெற்றோருக்கு தெரியாது. குழந்தை பிறந்ததும் டியாவின் பெற்றோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டது.

இணையத்தள வசதியுடன் பெண்மனி தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டு, அதனை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Woman delivers her own baby in hotel room using YouTube videos: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X