ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்

|

குழந்தையின் ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தராத காரணத்தால் கணவருடன் சண்டையிட்டு மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்லூரிகளும் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது.

ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம்

ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம்

பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பள்ளியில் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் உள்ள 29 வயதான ஜோதி என்பவர் அவரது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் இல்லாத காரணத்தால் தனது கணவரிடம் ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார்.

கணவன் மறுப்பு தெரிவித்தார்

கணவன் மறுப்பு தெரிவித்தார்

குழந்தைகளின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்கி தருமாறு ஜோதி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததாகவும், ஊரடங்கு முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.

கணவன் மனைவி இடையே சண்டை

கணவன் மனைவி இடையே சண்டை

கணவரின் வார்த்தையை ஏற்க மறுத்ததால் அவருக்கும் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் ஜோதி மன கஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து ஜோதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு

காவல்துறையினர் வழக்கு பதிவு

இதையடுத்து 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் ஆன்லைன் பாடத்திற்கு செல்போன் வாங்கி தராத காரணத்தால் மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source: republicworld.com

Best Mobiles in India

English summary
woman allegedly committed suicide for husband refuses to buy smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X