என்ன சிவாஜி இப்படி ஆகிடுச்சு? 24 மணி நேரத்தில் Elon Musk இழந்தது எவ்வளவு கோடி தெரியுமா? எல்லா பக்கமும் அடி!
எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) கட்டம் சரி இல்லை என்பது போல தெரிகிறது. "கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடி" என்பது போல அவருக்கு எல்லா பக்கத்தில் இருந்தும் அடிகள் விழுந்துள்ளது. அதுவும் 24 மணி நேரத்திற்குள் பல கோடிகள் இழப்பு ஏற்படும் அளவிற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் ஏற்பட்ட, அதாவது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ட்விட்டர் (Twitter) மற்றும் டெஸ்லாவில் (Tesla) ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து ஒரே நாளில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான "செல்வத்தை" இழந்துள்ளார் எலான் மஸ்க்; அதாவது சுமார் 1200 கோடிகளை இழந்துள்ளார்!

ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்ஸ் இன்டெக்ஸின்படி (Bloomberg's Billionaires Index), இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரையிலாக எலான் மஸ்க்கின் செல்வத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும். நினைவூட்டும் வண்ணம், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு, முதல் காலாண்டு முடிவுகளுக்கு (First quarter results) பிறகு 9.8 சதவீதம் சரிந்தது.
அறியாதோர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இவி தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் வாகனங்களின் விலைகளை தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் மூலம் டெஸ்லாவின் செயல்பாட்டு வருமானம் (Operating Income) 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 24 சதவீதம் குறைந்து $2.7 பில்லியனாக இருந்தது.
அதே நாளில், எலான் மஸ்க்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) ஸ்டார்ஷிப் விண்கலமானது (Starship Spacecraft) அதன் முதல் சோதனை ஓட்டத்தின் (First test flight) போது வெடித்து சிதறியது; இது விண்ணில் செலுத்தப்பட்ட 4 நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அதாவது அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸில் (Starbase) உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஆனது சுற்றுப்பாதைக்குள் செல்வதற்கு முன்பே வெடித்து சிதறியது. இந்த 2 நிகழ்வுமே கடந்த ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 20 க்குள்ளான 24 மணி நேரத்தில் நடந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமா? மேற்குறிப்பிட்ட அதே 24 மணிநேரத்தில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டர் நிறுவனத்திலும் கடும் குழப்பம் நிலவியது. ட்விட்டர் ப்ளூ திட்டத்திற்கு (Twitter Blue Plan) சந்தா பணம் செலுத்தாத நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ப்ளூ டிக்குகள் திடீரென அகற்றப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இப்படியாக எலான் மஸ்க், எல்லா பக்கங்களில் இருந்தும் அடிகள் வாங்கினாலும் கூட, அவரது சொத்து மதிப்பில் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி அடைந்து இருந்தாழும் கூட, பிரெஞ்சு அதிபரான பெர்னார்ட் அர்னால்ட்க்கு அடுத்தபடியாக எலான் மஸ்க் தான் இன்னுமும் உலகின் இரண்டாவது பணக்காரராக இருக்கிறார் என்று 'தி வெர்ஜ்' தெரிவித்துள்ளது.
"மேலும் கீழும்" செல்வது எலான் மஸ்க்கிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. அதன் பின்னர், வரலாற்றில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்தை இழந்த முதல் நபர் என்கிற பெயரும் எலான் மஸ்க்கிற்கு கிடைத்தது.


Click it and Unblock the Notifications








