ஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை!

|

புதுடெல்லி: விரைவில், நாடு முழுவதும் உள்ள மக்கள் யுபிஐ (UPI) சேவையைப் பயன்படுத்தி ஏடிஎம் எந்திரங்களிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான புதிய யுபிஐ கியூஆர்(UPI-QR) சேவை தற்பொழுது முதல் முறையாக மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய யுபிஐ சேவை

பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய யுபிஐ சேவை

ஆன்லைன் கட்டண முறைமை வழங்குநரான ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து பேங்க் ஆஃப் இந்தியா (BOI), இந்த புதிய யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வங்கி பயனர்கள் யுபிஐ கியூஆர் அடிப்படையிலான சேவையின் மூலம் ஏடிஎம் எந்திரத்திலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் யுபிஐ கியூஆர் சேவை

இந்தியாவின் முதல் யுபிஐ கியூஆர் சேவை

இந்தியாவின் முதல் யுபிஐ கியூஆர் அடிப்படையிலான ஏடிஎம் சேவை, இந்த புதிய யுபிஐ சேவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பேங்க் ஆஃப் இந்தியா இந்த சேவையை, அதன் ஏடிஎம்களில் கிடைக்கும் படி மும்பையில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்? பதில் இதுதான்.!சந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்? பதில் இதுதான்.!

ஏடிஎம் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

ஏடிஎம் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

அதிகரித்து வரும் ஏடிஎம் மோசடிகள் மற்றும் ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங் போன்றவற்றால் மக்கள் ஏடிஎம் பயன்படுத்த அச்சம் கொண்டுள்ளனர். மக்களின் கவலையை கவனத்தில் கொண்டு, இந்த புதிய சேவையின் மூலம், ஏடிஎம் கார்டு இல்லாமல் பாதுகாப்பான யுபிஐ கியூஆர் அடிப்படையிலான சேவையின் மூலம் மக்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

22 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை கண்டறிந்த கூகுள் மேப்ஸ்.!22 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை கண்டறிந்த கூகுள் மேப்ஸ்.!

கியூஆர் ஸ்கேன் செய்தால் போதும்

கியூஆர் ஸ்கேன் செய்தால் போதும்

வங்கியின் ஒருங்கிணைந்த UPI பயன்பாட்டுச் செயலி மூலம், ஏடிஎம்மில் உள்ள கியூஆர் குறியீட்டைப் ஸ்கேன் செய்து பயனர்கள் பாதுகாப்பாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய சேவையைப் பயன்படுத்த, நீங்கள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளராக இருக்க வேண்டும். அதேபோல் மற்ற வங்கிகளும் இந்த சேவையை விரைவில் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில் மனிதர்கள் ஓட்டப்போகும் நாசா ரோவர் இதுதான்! இஸ்ரோ-ககன்யான் திட்டத்தில் இதுபோன்ற ரோவர் உண்டா?நிலவில் மனிதர்கள் ஓட்டப்போகும் நாசா ரோவர் இதுதான்! இஸ்ரோ-ககன்யான் திட்டத்தில் இதுபோன்ற ரோவர் உண்டா?

நடைமுறையில் களமிறங்கிய யுபிஐ சேவை

நடைமுறையில் களமிறங்கிய யுபிஐ சேவை

இந்த புதிய சேவை தற்போது மும்பையில் உள்ள சில வங்கியின் ஏடிஎம்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மூன்று அல்லது ஆறு மாத காலத்திற்குள் இந்தியா முழுவதிலும் இந்த யுபிஐ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

பட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 ரூ.2000 வரை பணம் எடுக்கலாம்

ரூ.2000 வரை பணம் எடுக்கலாம்

தற்பொழுது இந்த சேவையைப் பயன்படுத்தி பயனர்கள் ரூ.2000 வரை ஏடிஎம் எந்திரங்களிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் சேவைப் போலவே, இந்த புதிய சேவைக்கான கட்டணமும் ஒன்று தான் என்று பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Withdraw Money From ATM's Using UPI QR Scanning : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X