Home
News

சென்னை to பெங்களூரு இனி வெறும் 25 நிமிடம் தானா? உலகமே இன்னும் ரெடி ஆகல ஆனா இந்தியா ரெடி!

சென்னை to பெங்களூரு விமானம் மூலம் சென்றாலே 45 நிமிடங்கள் ஆகும். ஆனால், இனி சென்னை to பெங்களூரு வெறும் 20 நிமிடத்தில் பயணிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க.. இது நிஜமாக போகிறது. இதற்கான வேலையை இந்தியா இப்போது துவங்கிவிட்டது.

குறைந்த பயண நேரம் மற்றும் குறைந்த செலவில் பயணம் என்ற காரணத்திற்காக மக்கள் ரயில் சேவையை தேர்வு செய்கின்றனர். அந்த வரிசையில் பல எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. குறிப்பாகப் பெங்களூரு மற்றும் சென்னை இடையே பல ரயில்கள் இயக்கப்படுகிறது. சமீபத்தில், வந்தே பாரத் ரயில் சேவையும் இந்த வழி பாதையில் இயக்கப்படுகிறது.

சென்னை to பெங்களூரு இனி வெறும் 25 நிமிடம் தானா? புல்லட்டை விட ஃபாஸ்ட்!

இந்த வந்தே பாரத் ரயில் சேவை மூலம், பெங்களூரு டு சென்னையை வெறும் 04:30 மணி நேரத்தில் நம்மால் பயணிக்க முடியும். இதேபோல், மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் மிகவும் வேகமாக புல்லட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, மிகவும் அதிநவீன தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் (Hyperloop) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே இப்போதே துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஹைப்பர் லூப் என்பது நிலத்திற்கு அடியே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் ஒரு கேப்ஸுல் போன்ற பெட்டிகளை அதிவேகத்தில் பயணிக்கச் செய்வதே ஹைப்பர்லூப் தொழில்நுட்பமாகும். ஆனால், இந்த தொழில்நுட்பம் இன்னும் சோதனை கட்டத்தில் மட்டுமே இருக்கிறது.

சென்னை to பெங்களூரு இனி வெறும் 25 நிமிடம் தானா? புல்லட்டை விட ஃபாஸ்ட்!

உலகத்தின் எந்தவொரு நாட்டிலும், இன்னும் இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் செயல்பாட்டில் வரவில்லை. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான தி போரிங் நிறுவனம் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தைத் தனியாக ஒரு சுரங்கம் அமைத்து சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில், இந்தியா இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேவின் தகவல் படி, இந்த ஹைப்பர்லூப் தொழில்நுப்டம் சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - புனே இடையிலாகவும் ஒரு ஹைப்பர்லூப் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சோதனைக்கு அனுமதியைப் பெற்ற மகாராஷ்டிரா அரசு சைலெண்டாக ஹைப்பர்லூப் ஆராய்ச்சியில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை to பெங்களூரு இனி வெறும் 25 நிமிடம் தானா? புல்லட்டை விட ஃபாஸ்ட்!

மறுபுறம் சென்னை ஐஐடி உதவியுடன் இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை விரைவில் இயக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடி ஏரோநாட்டிக் மாணவர்களின் ஆராய்ச்சியுடன் இந்த திட்டத்தை இந்திய ரயில்வே விரைவில் செய்து முடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான டெண்டர், சோதனை, கட்டுமானம் என அனைத்தும் கணக்கிட்டபடி சரியாக நடந்தால், வரும் 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு ஹைப்பர்லூப் சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைப்பர்லூப் சேவை மட்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டால், மக்களின் பயண நேரம் இன்னும் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. ஹைப்பர்லூப் ரயில்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்பாக, இந்தியா புல்லட் ரயில் திட்டங்களை இந்த வழிப் பாதைகளில் இயக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வேயின் திட்டப்படி, ஹைப்பர்லூப் சேவை களமிறங்கினால் சென்னை to பெங்களூரு வெறும் 25 நிமிடத்தில் பயணிக்கலாம்.

அதேபோல், சென்னை to புனே இடையிலான பயண நேரம் வெறும் 35 நிமிடங்களாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை டு மதுரை வெறும் 30 நிமிடத்திற்குள் பயணிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை இந்தியா எவ்வளவு விரைவில் நடைமுறைப்படுத்தும் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இந்த ரயில் சேவை பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்பதைக் கீழே பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
With India's Hyperloop One Technology Chennai to Bengaluru Travel Time Is Now Only 25 Minutes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X