ஐடி ஊழியர்களுக்குக் குஷி கொடுத்த புதிய அறிவிப்பு.. எல்லாரும் ஹேப்பி தான் அண்ணாச்சி..

|

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய புதை அப்டேட் செய்தியை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஐடி ஊழியர்கள் ஏராளமானோர் வேலை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, யாருக்கெல்லாம் இந்த சம்பள உயர்வு கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

ஐடி ஊழியர்களுக்கு குஷி

ஐடி ஊழியர்களுக்கு குஷி

கொரோனா தொற்று காலகட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஐடி ஊழியர்களின் நிலைமை கொஞ்சம் திண்டாட்டம் அடைந்தது என்றே தான் கூறவேண்டும். ஆனால், அதற்குப் பின்னர் சில காலத்திலேயே சில ஐடி நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களின் மனம் குளிரும் வகையில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிட துவங்கியது.

யாரும் எதிர்பார்த்திடாத வகையில் சம்பள உயர்வு

யாரும் எதிர்பார்த்திடாத வகையில் சம்பள உயர்வு

இந்த வகையில் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்கள் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு அறிவித்து அனைவரையும் நெகிழச்செய்தது. ஐடி சந்தையில் இந்த ஆண்டு தேவை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து வேலையில் அமர்த்தி வருகிறது.

SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..

பிரவீண் ராவ் வெளியிட்ட 'அந்த' அறிவுப்பு

பிரவீண் ராவ் வெளியிட்ட 'அந்த' அறிவுப்பு

இருப்பினும், முந்தைய ஆண்டை காட்டிலும் கொரோனா ஊரடங்கில் நிறுவனங்களில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான பிரவீண் ராவ் சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இந்த முறை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு

18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு

இதேபோல், விப்ரோ நிறுவனமும் சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு வரும் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் 80 சதவீத ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சுமார் 18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

இரண்டாம் கட்ட ஊதிய உயர்வு

இரண்டாம் கட்ட ஊதிய உயர்வு

இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் 19,230 பணியாளர்களையும் வெளிநாட்டுப் பிரிவுகளில் 1,941 பணியாளர்களையும் புதிதாக நியமனம் செய்திருக்கிறது. இதற்கு முன்பே கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Wipro and Infosys announces about hike in pay to 80 percent of eligible staff in September : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X