நத்திங் என்னங்க Nothing! அதுலாம் சும்மா! டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் கலைக்கட்டும் Wings Phantom 345!
டிரான்ஸ்பரென்ட் கேட்ஜெட்களை உலகிற்கு முதலில் அறிமுகம் செய்து, மக்களின் மனதை கவர்ந்த பெரும் Nothing நிறுவனத்தையே சாரும். இருப்பினும், எல்லோராலும் Nothing Ear (1) மற்றும் (2) சாதனங்களை வாங்க முடியவில்லை. கரணம் இதன் விலை அதிகம். ஆனால், இனி அப்படியில்லை.
நிலைமை மாறிவிட்டது. நத்திங் நிறுவனத்தின் டிரான்ஸ்பரென்ட் இயர்பட்ஸ் சாதனங்கள் அறிமுகமான பிறகு, எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் சில நிறுவனங்கள் டிரான்ஸ்பரென்ட் வடிவமைப்புகளை ஒத்து வெளிவர துவங்கியுள்ளது. இந்த வரிசையில், மக்களின் தேவையை அறிந்து மிகவும் மலிவான விலையில் ஒரு புது டிரான்ஸ்பரென்ட் இயர்பட்ஸ் சாதனத்தை விங்ஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

Wings Phantom 345 TWS Earbuds என்ற பெயரில் நிறுவனம் இப்போது ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பாண்டம் தொடரின் ஒரு பகுதியாக விங்ஸ் இந்த புதிய TWS இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Wings Phantom 345 இயர்பட்ஸ்கள், நத்திங் இயர் (1) அல்லது நத்திங் இயர் (2) போன்றவற்றின் வெளிப்படையான கேஸ் வடிவில் உள்ளது. ஆனால், இதில் சில அருமையான வேறுபாடுகள் இருப்பதை நாம் கட்டாயம் கவனிக்கவேண்டும்.
விங்ஸ் பாண்டம் 345 இயர்பட்ஸ் சாதனம் ஒரு வெளிப்படையான கண்ணாடி கேஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது அதன் உட்புறங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. ஹை-டெக் லுக்கை இந்த இயர்பட்ஸ் சாதனம் கொண்டுள்ளது. ஆனால், Wings Phantom 345 இயர்பட்கள் நத்திங்கின் அதே வடிவமைப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதன் டிரான்ஸ்பரென்ட் சார்ஜிங் கேஸில் கார்பன் ஃபைபர் க்ரூவ்ஸ் மற்றும் பேட்டரி நிலையை வெளிப்படுத்தும் டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ஆம், இது நத்திங் சாதனத்தில் இல்லை. விங்ஸின் பாண்டம் தொடர் கேமர்களுக்கானது. எனவே இது பிரத்யேக கேமிங் மோட் உடன் வருகிறது. இது 40ms அல்ட்ரா-லோ லேட்டன்சியை ஆதரிக்கிறது. எந்த இடையூறும் இல்லாமல் தெளிவான அழைப்புகளுக்கு ENC ஆதரவுடன், நான்கு மைக்ரோஃபோன்களுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹை-ரெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங்கிற்காக இதில் 13mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஆடியோ தரத்தைய் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. விங்ஸ் பாண்டம் 345 இயர்பட்ஸ் சுமார் 50 மணிநேரம் வரை இயங்கக்கூடியதாம். இயர்பட்ஸ்கள் 10 மணிநேரம் வரை நீடிக்கும். சார்ஜிங் கேஸ் உடன் இந்த சாதனம் மொத்த பிளேபேக் நேரத்தை 50 மணி நேரமாக வழங்குகிறது. இது புல்லட் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இதனால், 10 நிமிடங்களில் பாஸ்ட் சார்ஜிங் ஆகிறது.
இது பல டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. கேம் மோட் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் கால் கண்ட்ரோல் ஆகியவற்றுக்கான டச் அம்சங்களை இந்த சாதனம் ஆதரிக்கிறது. Wings Phantom 345 இயர்பட்ஸின் SpeedSync அம்சம் வேகமான இணைப்பை உறுதி செய்கிறது. இது 15மீ ப்ளூடூத் வரம்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, Wings Phantom 345 TWS ஆனது Google Assistant மற்றும் Siri அம்சத்தை ஆதரிக்கிறது.
இது AAC மற்றும் SBC ஆடியோ கோடெக்குகளுக்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் இது ஸ்வெட் ப்ரூப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IPX5 மதிப்பீட்டை வழங்குகிறது. விலை பற்றி பேசுகையில், இந்த Wings Phantom 345 இயர்பட்ஸ் சாதனம் ரூ.1,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இது Amazon, Flipkart மற்றும் நிறுவனத்தின் இணையதளம் வழியாக கிடைக்கும். ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம். இது பிளாக் மற்றும் வைட் நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications