Home
News

மொத்த மார்க்கெட்டும் காலி.. வெறும் ரூ.899க்கு TWS இயர்பட்ஸ்.. கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்.. ஏன்னா?

ரூ.1000 க்குள்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.900 க்குள் ஒரு ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo) இயர்பட்ஸை தேடுகிறீர்கள் என்றால்.. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 100 (Wings Flobuds 100) இயர்பட்ஸ் உங்களுக்கானது தான்!

இந்த மாத தொடக்கத்தில் ஃப்ளோபட்ஸ் 200 இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து விங்ஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனமானது ஃப்ளோபட்ஸ் 100 இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 200 இயர்பட்ஸ் ஆனது ரூ.899 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த மார்க்கெட்டும் காலி.. வெறும் ரூ.899க்கு TWS இயர்பட்ஸ்!

மிகவும் மலிவான டிடபுள்யூஎஸ் ஆக இருந்தாலும் கூட, இதன் இயர்பட்ஸ் கேஸில் (Earbuds Case) டிஜிட்டல் பேட்டரி டிஸ்பிளே (Digital battery display) ஒன்று உள்ளது. இது பிரீமியம் லுக்கை வழங்குவதோடு சேர்த்து இயர்பட்ஸின் பேட்டரி லெவலையும் (Battery Level) கண்காணிக்கும் திறனையும் வழங்குகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 200 இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) ஆதரவுடன் வருகிறது மற்றும் இது ஏஏசி கோடெக்கையும் (AAC codec) ஆதரிக்கிறது. ஃப்ளோபட்ஸ் 100 இயர்பட்ஸ் ஆனது 13மிமீ ஹை-ஃபெட்டிலிட்டி ட்ரைவர்களை (13mm High-fidelity Drivers) கொண்டுள்ளது.

பேட்டரி கேப்பாசிட்டியை பொறுத்தவரை, இந்த இயர்பட்ஸ் ஆனது கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 50 மணிநேரம் வரையிலான பிளேடைமை (Up to 50 Hours Total Playtime) வழங்குகிறது. மேலும் சிங்கிள் சார்ஜில் இதன் இயர்பட்ஸ் ஆனது 10 மணிநேரம் வரையிலான பிளேடைமை வழங்குகிறது.

டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஆனது ஸ்மார்ட் இஎன்சி (Smart ENC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Smart Environmental Noise Cancellation) அம்சத்துடன் வருகிறது. இது பின்னணியில் ஏற்படும் இரைச்சலை குறைப்பதன் மூலம் உங்கள் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும்.

கேமிங் ஆர்வலர்களான அம்சங்களை பொறுத்தவரை, ஃப்ளோபட்ஸ் 100 இயர்பட்ஸ் ஆனது பிரத்யேகமான கேமிங் மோட் (Gaming Mode) உடன் வருகிறது. விங்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 40எம்எஸ் வரையிலான அல்ட்ரா-லோ லேடன்சியை (Up to 40ms Ultra-low Latency) வழங்கும்.

வாய்ஸ் அசிஸ்டென்ஸ் (Voice Assistance) ஆதரவுடன் வரும் விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 100 இயர்பட்ஸ் ஆனது டச் கண்ட்ரோல்களையும் (Touch Controls) கொண்டுள்ளது . கடைசியாக இது ஐபிஎக்ஸ்5 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான ரேட்டிங்கையும் (IPX5 Sweat and Water Resistance Rating) பெற்றுள்ளது.

1 ஆண்டு உத்தரவாதத்துடன் வரும் விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 100 இயர்பட்ஸ் ஆனது (முன்னரே குறிப்பிட்டபடி) சிறப்பு வெளியீட்டு விலையான ரூ.899 க்கு வாங்க கிடைக்கிறது. இது மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களில் - ப்ளூ, பிளாக் மற்றும் ஒயிட் - வாங்க கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் இதை அமேசான்.இந்த (Amazon.in) மற்றும் விங்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் இணையதளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒருவேளை விங்ஸ் ஃப்ளோபட்ஸ் 200 ஆனது உங்களை ஈர்க்கும்படி இல்லையென்றால், ரூ.1000 க்குள் வாங்க கிடைக்கும் மற்ற சில பெஸ்ட் இயர்பட்ஸ்களின் பட்டியல் இதோ: ரூ.900 க்குள் என்கிற பட்ஜெட்டில் போல்ட் ஆடியோ கே20 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (ரூ.899) மற்றும் நாய்ஸ் பட்ஸ் ஏரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை (ரூ.899) கருத்தில் கொள்ளலாம்.

ரூ.900 என்கிற பட்ஜெட்டை பொறுத்தவரை ரூ.949 க்கு கிடைக்கும் யூட்ரோனிக்ஸ் டியோபாட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், ரூ.999 க்கு கிடைக்கும் ஸெப்ரானிக்ஸ் ஸெப்-சவுண்ட் பாம்ப் என்1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ரூ.999 க்கு கிடைக்கும் போட் ஏர்டோப்ஸ் 161 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவைகளை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Wings Flobuds 100 TWS Earbuds With 50 Hours Total Playtime Launched Introductory Price Rs 899
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X