மைக்ரோசாப்ட்டிலிருந்து வெளியேறும் ஸ்டீவன் சினோப்ஸ்கி

Posted By: Karthikeyan
மைக்ரோசாப்ட்டிலிருந்து வெளியேறும் ஸ்டீவன் சினோப்ஸ்கி

மைக்ரோசாப்ட் 2 வாரங்களுக்கு முன்பு விண்டோஸ் 8 இயங்கு தளத்தையும் மற்றும் தனது சர்பேஸ் டேப்லெட்டையும் களமிறக்கியது. இந்த இரண்டு தயாரிப்புகளையும் களமிறக்குவதற்கு காரணமாக இருந்தவர் மைக்ரோசாப்ட்டின் தலைவர் ஸ்டீவன் சினோப்ஸ்கி என்றால் மிகையாகாது.

ஆனால் தற்போது பல்வேறு காரணங்களுக்காக ஸ்டீவன் தனது பதவியை மைக்ரோசாப்டிலிருந்து காலி செய்து விட்டு வெளியில் வந்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட்டின் தலைவராக இருந்து மைக்ரோசாப்டை வழிநடத்தியவர் இந்த ஸ்டீவன். கடந்த 1989ல் ஒரு சாப்ட்வேர் டிசைன் பொறியாளராக மைக்ரோசாப்ட்டில் சேர்ந்தார் இவர். இவர் கடந்த திங்கள் முதல் மைக்ரோசாப்ட்டிலிருந்து விலகுவதாக மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இவருடைய பதவி விலகல் கணினி உலகில் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் வேளையில் பலருக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. மைக்ரோசாப்டில் பணிபுரியம் உயர் அதிகாரிகளுக்கும் ஸ்டீவனுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் இருந்து வந்திருக்கிறது. அதோடு ஸ்டீவன் தனது வேலையில் கில்லாடியாக இருந்தாலும் மற்ற உறுப்பினர்களோடு அவர் இணைந்து செயல்படவில்லை என்று தெரிகிறது. இந்த காரணங்களால்தான் அவர் மைக்ரோசாப்ட்டை விட்டு வெளியில் வந்திருக்கிறார் ஆதாரப்பூர்வமாற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஸ்டீவனின் விலகலுக்கு இன்னும் சரியான காரணங்கள் தெரியவில்லை. மைக்ரோசாப்ட்டின் தற்போதைய தலைவரான ஸ்டீவ் பால்மர், ஸ்டீவனுக்கு அவர் இதுவரை மைக்ரோசாப்ட்டை திறம்பட நடத்தி வந்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார். அதோடு அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமையவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நாள்களை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாகவும், மேலும் தன்னோடு பணிபுரிந்த அனைவருக்கும் தான் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஸ்டீவன் தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot