விமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.!

குறிப்பாக புதிய தொழில்நுட்ப முறையில் இந்த விமானம் உருவாக்கப்படும் என்று அந்த பிரிட்டிஷ் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் கொடுத்துள்ளது.

|

விமானப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் மிகப் பெரிய ஆசை என்னவென்றால் ஜன்னலோர இருக்கை ( விண்டோ சீட்) என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்த அனுபவத்தை விமானத்தில் ஏறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கும் வைகையில் ஒரு பிரிட்டிஷ் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுவகையான மற்றும் வருங்கால விமானத்தை தயார் செய்ய முடிவு செய்துள்ளது.

<strong>விமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.!</strong>விமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.!

விரைவில் இந்த புதிய தொழில்நுட்ப வசதியுடன் விமானத்தில் பறக்கலாம்.!

குறிப்பாக புதிய தொழில்நுட்ப முறையில் இந்த விமானம் உருவாக்கப்படும் என்று அந்த பிரிட்டிஷ் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் கொடுத்துள்ளது. மேலும் இந்த வகையான விமானங்களை உருவாக்க அதிக பொருட் செலவாகும் என ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

ஒஎல்இடி டச் ஸ்கீரின்:

ஒஎல்இடி டச் ஸ்கீரின்:

விரைவில் வரும் இந்த புதிய விமானம்; முழுநீள ஒஎல்இடி (OLED) டச் ஸ்கிரீன்ஸில் மூடப்பட்டிருக்கும், இப்போது இந்த வசதி
எந்த விமானத்திலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மெய்நிகர்அனுபவம் அனைவருக்கும் கிடைக்கும், அப்படியென்றால் அனைவரும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயனிக்கும் அனுபவம் இருக்கம் என்று கூறப்படுகிறது.

விமானங்களில் வெளியே கேமராக்கள்

விமானங்களில் வெளியே கேமராக்கள்

குறிப்பாக இந்த வகையான விமானங்களில் வெளியே கேமராக்கள் பொறுத்தப்படும், அதன்படி விமானத்தை சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்ற உண்மையான காட்சியை உங்களுக்கு மேலே இருக்கும் ஒஎல்இடி ஸ்கிரீனில் காட்ட அனுமதிக்கிறது. பின்பு இடது புறம் மற்றும் வலது புறம் கூட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த பார்க்க முடியும்.

 கணினி

கணினி

பின்பு இந்த ஒஎல்இடி திரையை நீங்கள் கணினியாக கூடப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது, தற்சமயம் இது போன்ற
தொழில்நுட்பங்கள் மொபைல் போன்கள், கணினி, டேப்லெட், டிவி போன்ற சாதனங்களில் பளன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற தொழில்நுட்பங்களை விமானத்தில் பயன்படுத்தினால் மிகவும் அருமையாக தான் இருக்கும்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

இப்போது தெரிவிக்கப்பட்ட இந்த புதிய அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு விமானம் தயார் செய்யப்படும் என்று பிரிட்டிஷ் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எப்போது வரும்:

இந்த புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட விமானம் 10-ஆண்டுகளுக்குள் வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, இது போன்ற விமானங்கள் வந்தாலும் டிக்கெட் விலை இன்னமும் உயர்ந்து கொண்டே தான் போகும்.

Best Mobiles in India

English summary
Windowless planes will give passengers a panoramic view of the sky: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X