காலத்தால் மறைக்கப்பட்ட இரகசியம்: நியூட்டன், ஐன்ஸ்டீனை விட அதிக IQ! மறைக்கப்பட்ட மர்மம் இதுதான்!

|

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மதிப்பிடப்பட்ட ஐ.க்யூ (IQ) அளவு 160, ஐசக் நியூட்டனின் மதிப்பிடப்பட்ட ஐ.க்யூ அளவு 190 , மற்றும் மார்க் ஜுக்கர்பர்க்கின் மதிப்பிடப்பட்ட ஐ.க்யூ அளவு 152 ஆகும். இந்த பிரபலமான ஆண்கள் தான் பூமியில் அதிக அளவு ஐ.க்யூ உடன் பிறந்த முழுமையான மேதைகளாக அறியப்படுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இவர்களைவிட அதிக ஐ.க்யூ அளவு கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

IQ அளவு என்பது என்ன?

IQ அளவு என்பது என்ன?

நுண்ணறிவு அளவு (IQ) என்பது மனித நுண்ணறிவை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட சோதனைகள் அல்லது துணைத் தொகுதிகளின் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மொத்த மதிப்பெண் ஆகும். இந்த சோதனையின் அடிப்படையில் தான் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் போன்றவர்களின் ஐ.க்யூ கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் பூமியில் வாழ்ந்த ஒருவரின் ஐ.க்யூ அளவு 250 முதல் 300 வரை சென்றிருக்கிறது.

நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை விட மிகப்பெரிய மேதையா?

நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை விட மிகப்பெரிய மேதையா?

எது? ஐ.க்யூ அளவு 250 முதல் 300க்குள் இருந்ததா! என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், உண்மையில் இப்படி ஒரு மனிதன் பூமியில் வாழ்ந்திருக்கிறார். ஐ.க்யூ அளவின் படி பார்த்தால் இவர் தான் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை விட மிகப்பெரிய மேதை. வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ் என்பவர் தான், பூமியில் அதிக ஐ.க்யூ அளவுடன் வாழ்ந்த மனிதர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை, காலம் இவரின் ரகசியத்தை மறைத்துவிட்டது.

மேகத்திற்குள் போர் விமானத்தை மறைத்து ஓட்டுபவர்களின் கவனத்திற்கு!

இவரைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்

இவரைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்

யார் இந்த வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ்? அப்படி இவரைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்று பார்க்கலாம், பூமியில் இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய புத்திசாலித்தனமான மனிதர் இவர் தான், தனது குழந்தைப் பருவத்திலேயே பல அதிசயங்களைச் செய்தவரும் இவர் தான், சிறுவயது கணிதவியலாளரும் இவர் தான். இவர் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் மற்றும் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் இருந்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவரைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

 பூமியில் அதிக IQ உடன் பிறந்த ஒரே குழந்தை

பூமியில் அதிக IQ உடன் பிறந்த ஒரே குழந்தை

வில்லியம் நியூயார்க் நகரில் 1898 இல் பிறந்தார். அவரது தந்தை போரிஸ் ஒரு முன்மாதிரியான உளவியலாளர், அவர் ஹார்வர்டில் இருந்து 4 டிகிரி பெற்றார். அவரது தாயும் எம்.டி. முடித்திருந்தார், இவரின் பெற்றோர் மேதைகளாக இருந்ததால், வில்லியம் ஜேம்ஸ் சிடிஸும் புத்திசாலித்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரின் ஐ.க்யூ அளவு எதிர்பார்க்கப்பட்ட சாதாரணத்தை விட மிக-மிக அதிகமாக இருந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வில்லியம் குழந்தை பருவத்தில் செய்த நம்பமுடியாத விஷயங்கள்

வில்லியம் குழந்தை பருவத்தில் செய்த நம்பமுடியாத விஷயங்கள்

வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ் பிறந்து வெறும் 18 மாத வயதில், தி நியூயார்க் டைம்ஸ் நியூஸ்பேப்பர் நாளிதழைப் படிக்கத் துவங்கி இருக்கிறார். இவரின் 8 வயதிற்குள் இவர் சுமார் 8 மொழிக்கும் மேலாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருக்கு லத்தீன், கிரேக்கம், பிரஞ்சு, ரஷ்ய, ஜெர்மன், ஹீப்ரு, துருக்கியா மற்றும் ஆர்மோனிய மொழிகள் என 8 மொழிகளுக்கும் அதிகமாகத் தெரியும். அதேபோல், இவர் கற்றுக்கொண்ட மொழிகளைப் போல தனக்கென்று ஒரு புதிய மொழியையே உருவாக்கி இருக்கிறார்.

இந்த 10 விஷயம் தெரியலான ஸ்மார்ட்போன் யூஸ் பண்றது வேஸ்ட்! 'சீக்ரெட் டிப்ஸ' மிஸ் பண்ணாம படிங்க!

8 வயதில் கல்லூரி படிப்புக்கு தயார்

8 வயதில் கல்லூரி படிப்புக்கு தயார்

வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ், தனது சொந்த கண்டுபிடிப்பாக "வெண்டர்குட்" (Vendergood) என்ற மொழியை உருவாக்கியிருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தையும் 8 வயதிற்குள் இவர் செய்திருக்கிறார். இவரின் திறன்களை அறிந்த இவரது தந்தை, அவரை ஹார்வர்டில் சேர்க்க முயன்றார், ஆனால் அந்த நேரத்தில் வில்லியம் 9 வயதாக இருந்ததால் அவரின் முயற்சி மறுக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஹார்வர்டு அவரை ஏற்றுக்கொண்டது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடம் எடுத்த அதிசய சிறுவன்

கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடம் எடுத்த அதிசய சிறுவன்

வில்லியம், 1909 ஆம் ஆண்டில் ஹார்வர்டில் சேர்க்கப்பட்டார், ஹார்வர்டில் சேர்க்கப்பட்ட முதல் இளைய நபர் இவராவார். 1910 வாக்கில், கணிதத்தைப் பற்றிய அவரது அறிவு மிகவும் உயர்ந்தது, இதனால், இவர் படிப்பதற்குப் பதிலாக அவரின் கணித பேராசிரியர்களுக்குப் பாடம் எடுப்பது, சொற்பொழிவு செய்வது என்று தொடங்கிவிட்டார். இதனால் அவர் "child prodigy" என்ற பட்டத்தைப் பெற்றார். 16 வயதில் தனது கலை பட்டம் இளங்கலை படிப்பை முடித்தார்.

பெண்கள் இவரை பெரிதும் ஈர்க்கவில்லை

பெண்கள் இவரை பெரிதும் ஈர்க்கவில்லை

அதிகளவு புகழ்ச்சியை இவர் தனது இளம் வயதிலேயே பார்த்துவிட்டதால், இவருக்குப் புகழ் என்பது ஒரு சோர்வாக மாறிவிட்டது. குறிப்பாக அவர் பட்டப்படிப்பை முடித்த சிறிது காலத்திலேயே "சரியான" வாழ்க்கையை வாழ விரும்புவதாகச் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, குறிப்பாகப் பெண் துணை இல்லாமல் தனிமையில் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். பெண்கள் பெரிதும் இவரை ஈர்க்கவில்லை என்ற உண்மையையும் அவர் அப்போது கூறியிருக்கிறார்.

தந்தையை குற்றம் சாட்டியது ஏன்?

தந்தையை குற்றம் சாட்டியது ஏன்?

இவரின் முடிவு பிறப்பிலிருந்து அவர் எதிர்கொண்ட அழுத்தத்தையும் பிரதிபலித்தது. வில்லியமின் தந்தை தனது மகனை ஒரு நட்சத்திரத்தைப் போலப் பிரகாசிக்க வைப்பதில் ஆர்வமாக இருந்தார். அதை அடைய, அவர் தனது மகனை வளர்ப்பதற்குத் தனது சொந்த உளவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. சிறு வயதில் அதிக அழுத்தம் கொடுத்ததாகத் தனது தந்தையைக் இளம் வயதில் குற்றம் சாட்டினார். 1923 இல் வில்லியமின் தந்தை போரிஸ் காலமானபோது, ​​வில்லியம் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

வேற லெவல்- 5000 இன்க்ரிமெண்ட்: ட்ரோன் இயக்கி அசத்தும் சிம்பா., அட்டகாச வீடியோ

புகழை விரும்பாமல் ஓடிய நபர்

புகழை விரும்பாமல் ஓடிய நபர்

குறைந்த சுயவிவரத்தைப் பராமரிப்பதற்காக வழக்கமாக மேதைகளைப் போலவே, வில்லியம் குறைந்த ஊதியம் பெறும் எழுத்தர் வேலைகளையும் செய்தார். அப்படியிருந்தும், இவர் மக்களால் அங்கீகரிக்கப்பட்டார், பார்த்துவந்த வேலையை மீண்டும் புறக்கணித்துவிட்டு, வாரத்திற்கு 23 டாலர் சம்பளம் கிடைக்கும் வேளையில் சேர்ந்திருக்கிறார். புகழை விரும்பாமல் ஓடிய இவரைப் பத்திரிகைகள் மீண்டும் தலைப்புச் செய்திகளாக அமைத்தது.

உலகிற்கே தெரியாமல் அவர் மறைத்த உண்மை

உலகிற்கே தெரியாமல் அவர் மறைத்த உண்மை

ஆனால், இந்த முறை மட்டும் இவரின் நுண்ணறிவு திறன் குறைந்துவிட்டது என்று பத்திரிகைகள் கேலி செய்தது, மேலும் அவர் ஒரு குழந்தையாகச் செய்த ஆசாரதான விஷயங்களை இனி இவர் செய்ய முடியாது என்றும் கூறியிருந்தது. ஆனால், அது உண்மை இல்லை, புகழை விரும்பாத வில்லியம் பல்வேறு புனைபெயர்களைப் பயன்படுத்திப் பல மதிப்புமிக்க புத்தகங்களை எழுதியிருந்தார் என்பதே காலத்தால் மறைக்கப்பட்ட உண்மை. இவர் ஒரு சோசலிஸ்ட் மற்றும் முதலாம் உலகப் போரை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினரால் அடைத்து வைக்கப்பட்ட வில்லியம்

குடும்பத்தினரால் அடைத்து வைக்கப்பட்ட வில்லியம்

வில்லியம், 1919 ஆம் ஆண்டில் போஸ்டனில் நடந்த ஒரு வன்முறை போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டார், இதற்காக இவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவரது பெற்றோர் அவரை சிறையிலிருந்து வெளியேற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தனர், சிறையிலிருந்து வெளியேற்றப்பட்ட வில்லியம் 2 ஆண்டுக் காலம் ஒரு சுகாதார நிலையத்தில் தனது குடும்பத்தினரால் அடைத்து வைக்கப்பட்டார். வில்லியம் தனது வாழ்க்கையை முற்றிலுமாக தனிமையில் கழித்தார்.

சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!

தந்தைப்போலவே இறந்தார் என்பது நம்பமுடியாத உண்மை

தந்தைப்போலவே இறந்தார் என்பது நம்பமுடியாத உண்மை

குடும்பத்திலிருந்து பிரிந்த வில்லியம், இயந்திர ஒட்டினராக பணிபுரிந்தார், மேலும் அவ்வப்போது வேலைகளை மாற்றி சிறிய-சிறிய வேலைகளைச் செய்து நாட்களைக் கடத்தியிருக்கிறார். உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய நபர் 46 வயதில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் இறந்துவிட்டார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அவரின் தந்தைக்கு ஏற்பட்ட அதே பெருமூளை ரத்தக்கசிவினால் அவதிப்பட்டு இவரும் 1944 இல் மரணமடைந்துள்ளார். புகழை விரும்பாத காரணத்தினால் இவரின் உண்மைகள் காலத்தால் மறைக்கப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
William James Sidis The Smartest Person On Earth Whose IQ Is Beyond Albert Einstein And Isaac Newton : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X