செல்போன் அந்தரங்க தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசு.!

கணிணி மற்றும் செல்போனில் உள்ள தகவல்களை அனைத்தும் கண்காணிக்கவும் மத்திய அரசு 10 முகமைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உங்களின் அன்றாட நிகழ்வுகளையும் மத்திய அரசு கண்காணிக்க துவங்கியுள்ளது.

|

உங்களின் செல்போனில் உள்ள அந்தரங்க தகவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகின்றது.

செல்போன் அந்தரங்க தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசு.!

கணிணி மற்றும் செல்போனில் உள்ள தகவல்களை அனைத்தும் கண்காணிக்கவும் மத்திய அரசு 10 முகமைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உங்களின் அன்றாட நிகழ்வுகளையும் மத்திய அரசு கண்காணிக்க துவங்கியுள்ளது.

தொழில் நுட்ப சட்டம்:

தொழில் நுட்ப சட்டம்:

இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புற பேணுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கணினி, செல்போனில்உள்ள பதிவு செய்யப்பட்டுள்ளது தகவல்களை ஆராய தொழில் நுட்ப சட்டம் 2000ம் 69 (1)-ன் பிரிவின் மத்திய உள்துறை அமைச்சக மின்னனு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரம் பெற்றுள்ள அமைப்புகள்:

அதிகாரம் பெற்றுள்ள அமைப்புகள்:

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் புரிவு நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லி காவல் ஆணையக்கும், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், அசாம் பகுதி சிக்னல் இன்டலிஜென்ஸ் பிரிவு உள்ளிட்டவைகள் இந்த சிறப்பு காரத்தை பெற்றுள்ளன.

செல்போன், கணினிகள்:

செல்போன், கணினிகள்:

செல்போன் மற்றும் கணினிகளின்ல் உள்ள சேமித்து வைத்துள்ள தகவல்கள், வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஆராய இந்த சட்டம் வழி வகுக்கின்றது.

மேலும், தகவல்களை வழிமறித்து கேட்கவும், அதை அழிக்கவும், முழுமையாக கண்காணிக்கவும் முடியும்.

7 ஆண்டு சிறை தண்டனை:

7 ஆண்டு சிறை தண்டனை:

மத்திய அரசின் சட்டத்தின்படி கணினி மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் மத்திய அரசு கண்காணிக்கும் முகமைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுக்கு அதிபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத்சிங் விளக்கம்:

ராஜ்நாத்சிங் விளக்கம்:

பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தாவது:
"கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பாஜ தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு கருதி , எந்த அரசு முகமைகள் மட்டும் இதை பயன்படுத்த முடியும் ஒன்று அறிவித்துள்ளது." என்றார்

பிரச்னையான கைப்பேசிகள்:

பிரச்னையான கைப்பேசிகள்:

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு உலகளவில் 2ம் இடத்தில் உள்ளது. இதில் பல்வேறு தேவைகளுக்காக நாம் பல்வேறு செயிலிகளை பதிவிறக்கம் செய்கின்றோம்.

ஆனால், செயலில்கள் இன்ஸ்டால் செய்யும் முன் அது கேட்டும் நாம் அனுமதியளிப்பதால், அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. இதில் அந்தரங்க தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் பறிபோகின்றன. இதுவே முதல் பிரச்னையாக இருக்கின்றது.

கூகுள் தகவல்களை திருடுகின்றது:

கூகுள் தகவல்களை திருடுகின்றது:

சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தினாலும் கூகுளால் உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று அமெரிக்காவை சேர்ந்த வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

 யாரும் தப்பிக்க முடியாது:

யாரும் தப்பிக்க முடியாது:

நாட்டில் உள்ள அனைத்து கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை முழுமையாக கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதால், இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அந்தரங்கம் முதல் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கும் வரும் என்பதில் சந்தேமில்லை.

Best Mobiles in India

English summary
Will the privacy information on your phone be stolen too shocking facts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X