ஏசியை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? இதனால் ஏசியில் கோளாறு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

|

சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளக் கோடைக் காலத்தில் பெரும்பாலானோர் நம்முடைய வீடுகளில் ஏர் கண்டிஷனர் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். கோடைக் காலம் முழுக்க ஏசியின் தேவை அதிகமாகிறது. கோடைக் காலத்தில் வெப்பத்தின் பிடியில் சிக்காமல் நிம்மதியாக உறங்க ஏசி இப்போது ஒரு முக்கியமான அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களாக மாறிவிட்டது. இப்படி கோடைக் காலத்தில் ஏசிப் பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் சிலர் ஏசியை குளிர்காலத்திலும் பயன்படுத்துகிறார்கள், இதனால் என்ன சிக்கல் எழும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

குளிர் காலத்தில் ஏசிப் பயன்படுத்துவதனால் கோளாறுகள் ஏற்படுமா?

குளிர் காலத்தில் ஏசிப் பயன்படுத்துவதனால் கோளாறுகள் ஏற்படுமா?

கோடைக் காலத்தில் பெரும்பாலும் ஏசியிலேயே தூங்கி எழுந்து பழகியவர்களில் சிலருக்கு, குளிர்காலத்தில் கூட ஏசியின் குளிர்ந்த காற்று தேவைப்படுகிறது. இது அவர்களின் உடல் இயல்பாகவே அதிக குளிர்ச்சியைத் தேடுகிறது மற்றும் ஏசி காற்றை அனுபவிக்க ஆசைப்படுகிறது என்று கூட சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி குளிர்காலத்தில் கூட மக்கள் ஏசி சாதனங்களைப் பயன்படுத்துவது உண்மை நல்லதா? குளிர் காலத்தில் ஏசிப் பயன்படுத்துவதனால் ஏசி இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்படுமா?

இந்த தவறை ஏசி பயனர்கள் கட்டாயம் செய்ய கூடாது

இந்த தவறை ஏசி பயனர்கள் கட்டாயம் செய்ய கூடாது

இது ஏசியின் ஆயுளை ஏதேனும் வழிகளில் பாதிப்படையச் செய்யுமா என்ற கேள்விகள் சிலருக்கு எழுந்திருக்கும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். குளிர் காலத்தில் மக்கள் ஏசி சாதனத்தை இயக்குவது அதன் செயல்பாட்டைச் சேதப்படுத்துமா? என்ற கேள்விக்கான விடையை முதலில் பார்க்கலாம். குளிர்ந்த காலநிலையில் ஏர் கண்டிஷனர்களை இயக்குவது ஒரு மோசமான யோசனை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது கட்டாயம் உங்களின் ஏசி சாதனத்தைக் கோளாறு அடையச் செய்யும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ஏர் கண்டிஷனர் சாதனத்தில் உள்ள கண்டென்சிங் யூனிட்

ஏர் கண்டிஷனர் சாதனத்தில் உள்ள கண்டென்சிங் யூனிட்

உங்கள் ஏர் கண்டிஷனர் சாதனத்தில் உள்ள கண்டென்சிங் யூனிட் குளிர் காலநிலையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பதே இதற்குப் பின்னணியில் உள்ள ஒரு முக்கிய காரணமாகும். உண்மையில், உங்கள் ஏசியில் உள்ள கண்டென்சிங் யூனிட்டில் உள்ள கம்ப்ரசரை உயவூட்டுவதற்காக சில இரசாயன எண்ணெய் ஏசி நிறுவனங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த எண்ணெய் ஒரு கனமான தரத்தைக் கொண்டது என்பதனால், குளிர் காலத்தில் இதைப் பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்கும்.

உங்களுடைய ஏசி குளிர் காலத்தில் சிக்கலை சந்திக்க இது தான் காரணமா?

உங்களுடைய ஏசி குளிர் காலத்தில் சிக்கலை சந்திக்க இது தான் காரணமா?

இந்த இரசாயன எண்ணெய்கள் சூடான நிலையில் சிறப்பாகச் செயல்படக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. குளிர்ந்த காலநிலையில் உங்கள் பகுதியில் உள்ள வானிலை வழக்கத்தைவிடக் குளிர்ச்சியாகத் தான் இருக்கும், இந்த குளிர்ச்சியான நேரத்தில் கம்ப்ரஸர் உள்ளே இருக்கும் ​​எண்ணெய் குளிர் காரணமாக இன்னும் அதிகமாகத் தடிமனாக மாறும். எண்ணெய் அதன் இயல்பு நிலையில் இருந்து தடிமனாக மாறும்போது இது கம்ப்ரஸரை சரியாக உயவூட்டாது. இது உங்களுடைய ஏசி சாதனத்தைக் கோளாறு செய்யக்கூடும்.

LPG சிலிண்டர் மானியம் : உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை எப்படி சரி பார்ப்பது?கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கLPG சிலிண்டர் மானியம் : உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை எப்படி சரி பார்ப்பது?கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

இவை குளிர்காலத்தில் செயல்படக்கூடியவை அல்ல

இவை குளிர்காலத்தில் செயல்படக்கூடியவை அல்ல

கம்ப்ரசர்களில் இலகுவான எண்ணெய் இருந்தால், அவை குளிர்காலத்திலும் வேலை செய்யும், ஆனால் உங்களுக்கு சில எதிர் பிரச்சனைகளும் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம். வீட்டின் வெளியில் ஏற்கனவே குளிர்ச்சியாக இருக்கும்போது பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி இன்னும் அதிகமாகக் குளிர்விக்க விரும்புவதில்லை. இருப்பினும், சிலர் ஏசியை பயன்படுத்த முயல்கின்றனர். ஏசி உற்பத்தியாளர்கள் கம்ப்ரஸரில் எண்ணெய்களைப் பயன்படுத்துவது ஒரு அர்த்தமுள்ளதாகச் செயல்பாடாக இருக்கிறது. இருப்பினும் இவை குளிர்காலத்தில் செயல்படக்கூடியவை அல்ல.

இவை உங்கள் ஏசியை மொத்தமாகச் சேதப்படுத்தக் கூடும்

இவை உங்கள் ஏசியை மொத்தமாகச் சேதப்படுத்தக் கூடும்

குளிரில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், குளிரூட்டும் காயில்களில் ஒடுக்கம் இருந்தால், அது ஏசி யூனிட்டை ஒட்டுமொத்தமாக உறையச் செய்து மொத்தமாகச் சேதப்படுத்தக் கூடும். இதை நீங்கள் மறக்கக்கூடாது. சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஏர் கண்டிஷனர்களுக்கு எந்த வெப்பநிலை மிகவும் குளிராக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த சிக்கலை நீங்கள் சமாளிக்க சில வழிகள் உள்ளது. பொதுவாக நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள வெப்பநிலையை எப்போதும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட "பாறை".. உண்மையில் இந்த பாறை என்னவென்று தெரியுமா? எதற்கு பயன்படும்?

எந்த வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானது?

எந்த வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானது?

உங்கள் பகுதியில் உள்ள வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டை விடக் குறைவாக இருந்தால், பயனர்கள் தங்கள் ஏசி யூனிட்களை நீண்ட காலத்திற்கு இயக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் யூனிட்டை நீங்கள் சோதிக்க வேண்டும் என்றால், முதலில் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 60 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும் வரை காத்திருப்பது சிறப்பானது. காரணம், இது ஏசி கம்பிரஸரில் உள்ள எண்ணெய்யைச் சூடாக்க அனுமதிக்கும் மற்றும் மின்தேக்கியில் உள்ள உறைந்த கட்டிகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய உதவும்.

உங்கள் ஏசியில் இந்த சென்சார் இல்லையென்றால் கூடுதல் கவனம் தேவை

உங்கள் ஏசியில் இந்த சென்சார் இல்லையென்றால் கூடுதல் கவனம் தேவை

உங்கள் ஏர் கண்டிஷனிங் யூனிட்டைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எப்போதும் தயக்கப்படாமல் பழுதுபார்க்கும் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குளிர்ந்த காலநிலையில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டை இயக்க முயலாதீர்கள். பெரும்பாலான நவீன வீட்டு ஏசிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் குளிர்ச்சியைத் தடுக்க சில சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இவை பழைய மாடல் ஏசிகளில் இருக்காது என்பதனால் கூடுதல் கவனம் தேவை. குளிரைக் கட்டுப்படுத்த உதவும் சென்சார்கள் இல்லாத பழைய யூனிட்களை இயங்க நீங்கள் முயற்சிசெய்யும் போது, அவை சரியாகச் செயல்படாது.

வா தலைவா., இனி வீடே தியேட்டர்தான்: 8கே வீடியோ, 1 பில்லியன் வண்ண ஆதரவுடன் ஒப்போ கே9 ஸ்மார்ட்டிவி- குறைந்த விலை!வா தலைவா., இனி வீடே தியேட்டர்தான்: 8கே வீடியோ, 1 பில்லியன் வண்ண ஆதரவுடன் ஒப்போ கே9 ஸ்மார்ட்டிவி- குறைந்த விலை!

இந்த செட்டிங் உங்கள் ஏசியில் இருக்கிறதா?

இந்த செட்டிங் உங்கள் ஏசியில் இருக்கிறதா?

அல்லது நீங்கள் முயற்சிக்கும் செயல்பாட்டின் போது சேதமடையலாம். உங்கள் யூனிட்டைச் சோதிக்க, பராமரிக்க அல்லது பழுதுபார்க்க வசந்த காலத்தின் பிற்பகுதி வரை காத்திருப்பது விலையுயர்ந்த சேதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஏசி கோடை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய செட்டிங்கை கொண்டிருந்தாள் இந்த கவலையே உங்களுக்குத் தேவையில்லை.

ஏசி மின்சார கட்டணம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஏசி மின்சார கட்டணம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இப்போது வரும் சில ஏசி மாடல்களில் ஹீட்டர் வசதியும் இருக்கிறது. இது குளிர் காலத்தில் சூடான காற்றை வழங்க அனுமதிக்கிறது. இது போன்ற இரட்டை காலநிலை மாடல்கள் கொண்ட ஏசியை வாங்குவது பயன்பாட்டிற்குச் சிறப்பானது. ஏசி பயன்படுத்துபவர்களின் பெரிய கவலை மின்சார கட்டணம் அதிகரிப்பது தான், நீங்கள் ஏசி பயன்படுத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அரிய எங்கள் பதிவில் உள்ள மற்ற பதிவை படியுங்கள்.

Best Mobiles in India

English summary
Will Running AC In Cold Weather And In Winter Can Damage It : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X