Home
News

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்குமா? வெளியானது தகவல்.!

தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் ஆனது வரும் செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் புதிய குடும்ப அட்டைகள் கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு உடேன மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புது ரேஷன்கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. பின்பு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. ஒருவழியாக வரும் செப்டம்பர் 15-ம் தேதி மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

அதேபோல் இந்த திட்டத்திற்கான வரைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களின் பெண்கள் இதற்குத் தகுதியானவர்கள்.

குறிப்பாக குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவியாகக் கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம் குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் 20-ம் தேதி முதல் வீடுதோறும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தான் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் கூட இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாகப் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது.

புது ரேஷன்கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

அதேபோல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது என்னவென்றால், மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் களவு ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். குறிப்பாக வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்குக் கிடைக்கும் என்றும், புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Will new ration card applicants get Rs.1000 women's entitlement immediately? Read full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X