Just In
- 8 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 9 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 9 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 10 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சோனமுத்தா போச்சா.. Elon Musk-க்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! கதிகலங்கி சொன்ன பதில்.!
Elon Musk ட்விட்டரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளில் பெரும்பாலானவை எலான் மஸ்க்கிற்கு எதிராக அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எலான் மஸ்க் இன்று (திங்கட்கிழமை) ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில் நான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன் என குறிப்பிட்டார். இதில் ஏராளமானோர் விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகளில் 57 சதவீத பயனர்கள் மஸ்க் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேபோல் இந்த வாக்கெடுப்பில் 42 சதவீத பயனர்கள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியை தொடர வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
அதேபோல் மஸ்க், இனி ட்விட்டரில் உள்ள அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளும் வாக்களிப்பின் அடிப்படையில் தான் நிறைவேற்றப்படும் என ட்வீட் செய்துள்ளார். எலான் மஸ்க் விரைவில் Twitter தலைமை நிர்வாக பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், மஸ்க் இந்த வாக்கெடுப்பு குறித்த ட்வீட்டில், மக்கள் முடிவுக்கு கட்டுப்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என மஸ்க் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். இந்த பணிக்கு வேறு ஒருவரை மஸ்க் தேர்ந்தெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தான் தற்போது மஸ்க், இந்த வாக்கெடுப்பை நடத்தி உள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் பல நிறுவனங்கள் பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை என பல நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் மஸ்க். இதையடுத்து தற்போது ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக மஸ்க் முடிவு செய்துள்ளார்.
பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவை சந்தித்தார். இந்த நிலையில் மஸ்க் தற்போது வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்த இருக்கிறார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்கி அதை கண்காணிப்பில் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க், இனி டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை போன்றவற்றில் பெரிய அளவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நிர்வாக பதவியில் இருந்து மஸ்க் விலகினாலும், அதில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் துரிதமாக செயல்பட்டு செய்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. அதாவது, பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு எலான் மஸ்க் இறுதியாக Twitter ப்ளூ சந்தா சேவையை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார். ப்ளூ டிக் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்த பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ட்விட்டரின் ப்ளூடிக் சேவைக்கு சந்தா கட்டணம் என்ற முறையை கொண்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்து அதை செயல்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து இந்த முடிவில் பின்வாங்கி வந்தார். இந்த நிலையில் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு ப்ளூடிக் சந்தா கட்டணத்தை செயல்படுத்தி இருக்கிறார் மஸ்க்.
உலகளவில் ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை $8 முதல் கிடைக்கிறது. அதேபோல் iPhone பயனர்களுக்கு $11 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐபோன் பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக்கு ரூ.999 செலுத்த வேண்டும். இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான உறுதியான விலை இன்னும் தெரியவில்லை. இந்த சந்தா சேவையானது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470