நிலாவுக்கு ஆபத்தா?- கட்டுப்பாட்டை இழந்த எலான் மஸ்க் ராக்கெட்., மார்ச் மாதம் நிலவில் மோதி வெடிக்கும் அபாயம்!
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் 2015 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் ஆனது வானிலை தொடர்பான ஆய்வுக்கான செயற்கைக்கோள் உடன் அனுப்பிவைக்கப்பட்டது. பால்கன் 9 ராக்கெட் ஆனது வானிலை தொடர்பான செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு தனியாக பிரிந்து சென்றது. பிரந்து சென்ற ராக்கெட் ஆனது ஜனவரி மாதம் சந்திரனுக்கு மிக அருகில் சென்று சுற்றுப்பாதையை மாற்றியது.

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு கடினமான பகுதி
இதுகுறித்து நிபுணர்களின் தகவல் படி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு கடினமான பகுதி அதன் பணியை முடித்த பின் விண்வெளியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ராக்கெட் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு பூமிக்கு திரும்ப எரிபொருள் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ராக்கெட் குழப்பான சுற்றுப்பாதையில் மிதந்து வருகிறது. அதாவது இந்த ராக்கெட் கைவிடப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளாக நிலவு, சூரியன், பூமி ஆகிய வெவ்வேறு ஈர்ப்பு விசை காரணமாக அங்கும் இங்கும் ஈர்க்கப்பட்டு குழப்பமான நிலையில் மிதந்து வருகிறது.

நேரடியாக சந்திரனில் மோத வாய்ப்பு
இந்த நிலையில் விண்வெளி குப்பையில் ஒன்று நேரடியாக சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. எலான் மஸ்க்கால் கைவிடப்பட்டு நிலைக்குழைந்து சுற்றும் ராக்கெட் வருகிற மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நிலவில் மோத உள்ளதே அதனால் நிலவுற்கு ஏதும் ஆபத்து இருக்கிறதா., நிலவில் மோதும் ராக்கெட் எடை என்ன எவ்வளவு பெரியது போன்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம். இதுகுறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

நான்கு டன் எடை கொண்ட பால்கன் 9 ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய பால்கன் 9 ராக்கெட் ஆனது நான்கு டன் எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ராக்கெட் ஆனது 5000 மைல் வேகத்தில் நிலவில் மோத இருப்பதாக கணிக்கப்படுகிறது. 5000 மைல் வேகத்தில் பயணித்து நிலவில் மோதினாலும் நிலவுக்கு பாதிப்பு என்று பார்க்கையில், அது மிக சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என கணித்து தெரிவிக்கப்படுகிறது. கணிக்கும்படி இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிலவில் மோதும் பட்சத்தில் நிலவில் மோதிய முதல் ராக்கெட் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரனின் இருண்ட பக்கத்தில் மோத வாய்ப்பு
சந்திரனின் இருண்ட பக்கத்தில் இது மோதலாம் என கணிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், சரியான நேரம் மற்றும் நிலவு தாக்கத்தின் இடத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என கணிக்கப்பட்டாலும் நிலவின் மோதுவது உறுதி என பரவலான உடன்பாடாக இருக்கிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது சந்திர லேண்டரை உருவாக்கி வருகிறது. இது 2025 ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு நாசா விண்வெளி வீரர்களை அனுப்ப இருக்கிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்
தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

மனிதர்களை ஏந்திக்கொண்டு விண்ணுக்கு சென்ற ராக்கெட்
சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது. முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.


Click it and Unblock the Notifications