வாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு.!

தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது.

|
How to upload driving licence & Vehicle Document in DigiLocker - TAMIL

தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி அலவலகம் நேற்று
வெளியிட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!

போக்குவரத்து காவலர்கள், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாக ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகனங்களின் காப்பீடு போன்ற சில சான்றிதழ்கள் கேட்டபது வழக்கமாக தான் உள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து

மத்திய சாலை போக்குவரத்து

மேலும் இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ( டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை தற்சமயம் அமலில் உள்ளது.

தொழில்நுட்ப சட்டப்படி

தொழில்நுட்ப சட்டப்படி

இதுபோன்று பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் சில மாதங்களாக இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.

கண்டிப்பாக ஏற்கவேண்டும்:

கண்டிப்பாக ஏற்கவேண்டும்:

வாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து போலீசாரோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ. வாகன ஒட்டுனர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜி லாக்கர் மற்றும் எம்-பரிவாஹன்:

டிஜி லாக்கர் மற்றும் எம்-பரிவாஹன்:

எம்-பரிவாஹன் மற்றும் எம்-பரிவாஹன் போன்ற செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து மிக எளிமையாக
பயன்படுத்த முடியும். குறிப்பாக உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான அடையாள ஆவணத்தை இந்த செயலிகளில் சேர்த்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.

டிராபிக் போலீஸிடம்  இதுமட்டும் காட்டுங்க போதும்:மத்திய அரசு உத்தரவு.!

டிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்:மத்திய அரசு உத்தரவு.!

டிராபிக் போலீஸ்ஸிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால், அன்றைய நாள் அதைவிட மோசமாய் போகாதென்று என் பாட்டி கதை சொல்லி நான் கேட்டதுண்டு. அன்று முதல் இன்று வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வுஇல்லாமல் இருந்தது.

இவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.!இவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.!

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமே, ஆனால் வீட்டில் லைசென்ஸ் ஐ மறந்து வைத்துவிட்டு கடைக்கு வந்தால் கூட குற்றம் என்பது, நமது ஊரில் மட்டும் நடக்கிற ஒரு கூத்து. அதற்கு அபராதம் கட்ட வேண்டிய நிலையும் கூட இங்கு மட்டுமே நடந்து வருகிறது.

டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தலாம்

டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தலாம்

லைசன்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு, அதன் டிஜிட்டல் காப்பியைக் காட்டினால் அதை பொதுவாக எந்த மாநில போலீசும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்காகத் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். ஆனால் அந்த நிலை இனி நீடிக்காது. இனி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்டத் தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கீகரித்த லாக்கர் செயலி

அங்கீகரித்த லாக்கர் செயலி

பொதுவாகச் சாலைகள் மற்றும் சிக்னல்களில் வாகனங்களை வழிமறித்து நிறுத்தும் போலீசாரிடம் வெறுமனே சேவ் செய்திருக்கும் காப்பிகளை காட்டினாள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . டிஜி லாக்கர், எம்பரிவாகன் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த லாக்கர் செயலிகளில் பாதுகாப்பாக சேவ் செய்யப்பட்ட ஆவணங்களைக் காட்ட வேண்டும். அப்போது மட்டுமே இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும். அனைத்து மாநிலத்திற்கும் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக இது நடைமுறைக்கு வரவில்லை.

டிஜி லாக்கர்(DigiLocker)

டிஜி லாக்கர்(DigiLocker)

உங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் டிஜி லாக்கர்(DigiLocker) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியில் உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான அடையாள ஆவணத்தை லாக்கர் இல் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த டிஜிலாக்கர் இல் அரசு வழங்கிய அனைத்து தனிப்பட்ட அவங்களையும் சேமித்து வைத்துக்கொள்ளாம் என்பதே தனி சிறப்பு.

எம்பரிவாகன்(mParivahan)

எம்பரிவாகன்(mParivahan)

உங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் எம்பரிவாகன்(mParivahan) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியிலும் உங்கள் ஓட்டினர் உரிமத்திற்கான அடையாள ஆவணங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இனி போலீசாரிடம் இந்தச் செயலிகளில் ஆவணங்களைக் காட்டினாள் போதும்.

லைசென்ஸ் ஆன்லைன் இல் வாங்கலாம்

லைசென்ஸ் ஆன்லைன் இல் வாங்கலாம்

லைசென்ஸ் இல்லையே என்ற கவலை வேண்டாம். இனி உங்கள் லைசென்ஸ் ஐ ஆன்லைன் இல் வாங்கலாம். www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம். கற்றுணர் உரிமம் வாங்கிய அடுத்த 30 நாட்களுக்கு பிறகே ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Will be displayed during vehicle testingThe cellphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X