விக்கிப்பீடியாவில் ஒரு சூப்பரான அம்சம் இணைப்பு; இனி நேரம் மிச்சமாகும்.!
ஒரு கட்டத்தில் நீங்கள் எந்த கட்டுரையில் உள்ளீர்கள்.? உங்களின் தேடல் தான் என்ன என்பதையே மறந்துப்போய் விடுவீர்கள்.
பொதுவாக விக்கிபீடியா பக்கங்களை ஒரு "முயல் குழி" என்றே கூறுவார்கள். நீங்கள் தேடி வந்தது ஒன்றாக இருக்கும் அல்லது படிக்க ஆரம்பித்த கட்டுரை ஒன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் எங்கெல்லாமோ கொண்டு செல்லப்படுவார்கள் - அதாவது முயல் குழிக்குள் புகுந்தது போல, போய்க்கொண்டே இருக்கும் - அதற்கு கட்டுரையில் காணப்படும் இன்டர்லின்க்ஸ் (Inter Links) உதவும். ஒரு கட்டத்தில் நீங்கள் எந்த கட்டுரையில் உள்ளீர்கள்.? உங்களின் தேடல் தான் என்ன என்பதையே மறந்துப்போய் விடுவீர்கள்.

இம்மாதிரியான ஒரு ஆய்வு, ஒரு வேடிக்கையான, தகவல் சேகரிப்பு சாகசமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்து கட்டுரையுமே, உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்காது, முக்கியமாக விக்கிப்பீடியாவில் நீங்கள் மிக எளிமையாக திசைதிருப்ப படலாம். அதை மனதிற்கொண்டு தான் உலகின் தகவல் களஞ்சியம் என்று கூறப்படும் விக்கிப்பீடியாவில், இந்த வார தொடக்கத்தில், ஒரு பயனுள்ள புதிய அம்சத்தை இணைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று.!
பேஜ் ப்ரீவியூ (Page Preview) என்று அழைக்கப்படும் இந்த புதிய விக்கிபீடியா அம்சமானது "சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்க்டாப் விக்கிப்பீடியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று" என்று விக்கிமீடியா பவுண்டேஷன் கூறுயுள்ளது. அப்படி புகழும் அளவிற்கு இந்த [பேஜ் ப்ரீவியூ அம்சத்தில் என்ன தான் உள்ளது.?

முன்னோட்டத்தை காணலாம்.!
பேஜ் ப்ரீவியூ என்பது விக்கிப்பீடியா பக்கங்களில் உள்ள கட்டுரைகளில் காணப்படும், இன்டர்லின்க்ஸ் எனப்படும் இதர கட்டுரைகளுக்கான இணைப்புகளை ஒரு பாப்-அப் விண்டோ வழியாக வாசர்களுக்கு காட்சிப்படுத்தும். அதாவது இனி ஒரு குறிப்பிட்ட விக்கிபீடியா கட்டுரையில் இருந்து வேறொரு கட்டுரைக்கு செல்லாமலேயே அந்த கட்டுரையின் முன்னோட்டத்தை காணலாம் என்று அர்த்தம்.

இன்டர்லின்க்ஸ்-ன் மேலே மவுஸ் கர்சரை வைத்தால் போதும்.!
இணைக்கப்பெற்றுள்ள இன்டர்லின்க்ஸ் வழியாக ஒரு புதிய பக்கத்தில் உள்ள படம் மற்றும் சில வாசகங்களின் முன்னோட்டத்தை காண வெறுமனே நீங்கள் அந்த இன்டர்லின்க்ஸ்-ன் மேலே மவுஸ் கர்சரை வைத்தால் போதும். ஒரு பாப்-அப் விண்டோ காட்சிப்படும், அதில் அந்த இணைப்பின் எளிமையான உள்ளடக்கம் காணக்கிடைக்கும். இந்த பேஜ் ப்ரீவியூ அம்சமானது ஒரு குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்யலாமா.? வேண்டாமா.? என்கிற முடிவை எடுக்க உங்களுக்கு உதவும். குறிப்பிட்ட பாப்-அப் விண்டோவில் இருந்து மவுஸ் கர்சரை நகர்த்தியதும் அது மறைந்து விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


சோதனையின் போது.!
ஒரு வெப் பேஜின் அல்லது ஆப்பின் இரண்டு பதிப்புகளை ஒப்பிட்டு நிகழ்த்தப்படும் சோதனையான ஏ/பி டெஸ்டிங் வழிமுறையை, விரிவான முறையில் நிகழ்த்திய பின்னரே இந்த அம்சம் விக்கிப்பீடியாவில் உருட்டப்பட்டுள்ளது. சோதனையின் போது, பெரும்பாலான பயனர்கள் இந்த அம்சத்தினை டிஆக்டிவேட் செய்யவில்லை என்பதும், முன்பை விட அதிக அளவிலான விக்கிபீடியா பக்கங்களை அணுகி உள்ளார்கள் என்பதும், இருந்தாலும் விக்கிப்பீடியாவின் ஒட்டுமொத்த பேஜ் வியூஸ் எண்ணிக்கை குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications