Home
News

'மேலும்' ஒரு ரகசியத்தை வெளியிட்டது - விக்கிலீக்ஸ்..!

சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ் (Wikileaks) ஆகும். 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த இணையத்தளம் ஆனது பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருவதையே தான் வேலையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியான விக்கிலீக்ஸ் வலைதளம் இன்றுவரை நாசா மறைத்த ஏலியன் ஆதாரம் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் அது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களிதொகுத்துள்ளோம்.

எக்ஸ்ரா டெரஸ்ரியல் :

எக்ஸ்ரா டெரஸ்ரியல் :

இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நமது சூரிய குடும்பத்தில் இடி (ET) எனப்படும் எக்ஸ்ரா டெரஸ்ரியல் (extra terrestrial) உள்ளன' என்பது பற்றிய ரகசிய கேபிள்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தகக்து.

குறிப்புகள் :

குறிப்புகள் :

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணங்களில் ஏலியன்கள் மற்றும் எக்ஸ்ரா டெரஸ்ரியல் ஆகியவைகளின் இருப்பு பற்றிய குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றம் :

குற்றம் :

மேலும், சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா வேற்றுகிரக வாசிகளின் இருப்பு சார்ந்த விடயங்களை மறைப்பதாக குற்றம் சாட்டபட்டது.

ரகசிய கேபிள்கள் :

ரகசிய கேபிள்கள் :

அப்படியாக ஏலியன்கள், எக்ஸ்ரா டெரஸ்ரியல் மற்றும் யூஎஃப்ஓ பற்றி என்னென்ன தகவல்கள் எல்லாம் மறைக்கப்பட்டது என்பது பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய கேபிள்கள் எல்லாம் தற்போது 'தெளிவாக' அம்பலப்படுத்தபட்டுள்ளன.

2006 :

2006 :

அப்படியாக 2006-ஆம் ஆண்டு லித்துவேனியாவின் வில்நீயஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்த ஒரு தகவலில் பறக்கும் தட்டு பற்றி பேசப்பட்டுள்ளது.

ஆதிக்கம் :

ஆதிக்கம் :

அதில் "பிரபஞ்சத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகப்பட்ட பறக்கும் தட்டு குழுக்கள் உள்ளன" என்று பேசப்பட்டுள்ளது.

ஆய்வு - மதிப்பீடு :

ஆய்வு - மதிப்பீடு :

மேலும் "அந்த குழுவானது அறிவுப்பூர்வமாக இருக்கும் நிலையை ஆய்வு செய்யவும், பொதுநிலையில் என்ன நடக்கிறது என்பதை மதிப்பீடு செய்யவும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது" என்றும் பேசப்பட்டுள்ளது.

2007 :

2007 :

மேலும் 2007-ஆம் ஆண்டில் ஜாப்பானில் இருந்து வந்த ஒரு தகவலிலும் பறக்கும் தட்டு பற்றி பேசப்பட்டுள்ளது.

சாத்தியம் :

சாத்தியம் :

அதில் "யூஎஃப்ஓ என்பது உறுதியாக இருக்கிறது, அப்படி இல்லையெனில் நாஸ்கா கோடுகள் (Nazca Lines) எப்படி சாத்தியம்..? என்ன நான் சொல்வது சரி தானே.?" என்று பேசப்பட்டுள்ளது.

2010 :

2010 :

மேலும் 2010-ஆம் ஆண்டில் தஜிகிஸ்தானில் இருந்து வந்த ஒரு தகவலில் எக்ஸ்ரா டெரஸ்ரியல் பற்றி பேசப்பட்டுள்ளது.

அமைதி :

அமைதி :

அதில் "யுத்தம் என்பது மிகவும் ஆபத்தானது. நமக்கு தெரியும் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளது என்று, முதலில் நாம் இங்கே அமைதியை நிலை நிறுத்த வேண்டும்" என்று பேசப்பட்டுள்ளது

வெளிப்படை :

வெளிப்படை :

வேற்றுகிரக வாசிகளின் இருப்பு சார்ந்த விடயங்களை மறைப்பதாக குற்றம் சாட்டபட்ட பின் "இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை. திட்டமிட்டப்படி அனைத்தும் சரியாக சென்றால் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் ஏலியன்களை நாம் சந்திப்போம்" என்று நாசா வெளிப்படையான கருத்தை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட அத்தாட்சிகள் :

ஏகப்பட்ட அத்தாட்சிகள் :

முன்னாள் நாசா விண்வெளி வீரர் ஆன டாக்டர் பிரைன் ஓ'லேரி (Dr Brian O'leary) "வேற்றுகிரக நாகரீகமானது மிக நீண்ட காலமாக வருகை தந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஏகப்பட்ட அத்தாட்சிகள் உண்டு" என்று கருத்து கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தோற்றம் :

தோற்றம் :

மேலும் "மேற்கத்திய பாரம்பரிய கண்களால் பார்த்தால் அவர்களின் தோற்றம் மிகவும் வினோதமான ஒன்றாக இருக்கும் என்றும் டாக்டர் பிரைன் ஓ'லேரி கூறியிருந்தார்.

தெளிவான தொழில்நுட்பம் :

தெளிவான தொழில்நுட்பம் :

"வருகையாளர்களான அவர்கள் மிகவும் தெளிவான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் டாக்டர் பிரைன் ஓ'லேரி விளக்கம் அளித்திருந்தார்.

விளக்கம் :

விளக்கம் :

அந்த விளக்கத்தில் "அவர்கள் - டோராய்டு (Toroid) எனப்படும் கணித முறையிலான மேற்பரப்பு புரட்சி (surface of revolution), பயண முறைமைகளுக்காக இணை சுழல் காந்த வட்டுகள் (co-rotating magnetic disks) போன்றவைகளை பயன்படுத்துகிறார்கள்" என்று டாக்டர் பிரைன் ஓ'லேரி கூறியிருந்தார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Wikileaks Confirmed In 2013, What NASA Was Hiding Till 2015. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X