வை-பை பாஸ்வேர்ட் : இனி ஒரு பயலும் கண்டுப்பிடிக்க முடியாது..!
முட்டாளாகுவது மிகவும் சுலபம், அதே போல் பிறரை முட்டாளாய் ஆக்குவதும் சுலபம் தான். அட ஆமாங்க.. அதிலும் நம் வை-பையை நமக்கே தெரியாமல் தினம் திருடி, இலவச இன்டர்நெட்க்கு அலையும் வைபை திருடர்களை முட்டாளாக்கி ஏமாற்றும் போது அந்த பீலிங் - "அடடா... அது ஒரு தனி இன்பம்..!"
என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தாச்சு.. ரொம்ப கஷ்டமான வை-பை பாஸ்வேர்ட் வைத்தும் பார்த்தாச்சு.. இருந்தாலும் கூட 'வைபை திருடர்'களை தடுக்க முடியவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள் கவலையை விடுங்கப்பா...!
இந்த தொகுப்பு, உங்களை 'மங்காத்தா' அஜீத் போல.. 'தனி ஒருவன்' அரவிந்த்சாமியை போல - வைபை திருடர்களுக்கு எதிரான - ஒரு 'ஆன்ட்டி ஹீரோ'வாக மாற்றி விடும்..!!

கத்தி ஸ்டைல் :
எழுத்துக்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தி பாஸ்வேர்ட் வைத்தால் தானே கண்டுபிடிக்க முடியும். இப்படி 'குண்டக்க மண்டக்க' கத்தி ஸ்டைலில் பாஸ்வேர்ட் செட் பண்ணினால் எப்படி கண்டுப்பிடிக்க முடியும்..?!!

ஸ்மைலி :
இப்படி ஸ்மைலிக்களை பாஸ்வேர்டாக செட் செய்தால் ஒரு பயலும் உங்கள் வைபையை திருட முடியாது.

திருடப்படுவது தெரியும் :
"இதை முயற்சி செய்து கூட பார்க்க வேண்டும்" என்பது போல உங்கள் வைபை திருடப்படுவது தெரிவது போலவும் அதை நீங்கள் காட்டிக் கொள்வது போன்றும் பாஸ் வேர்ட் வைக்கலாம்.

திட்டி பாஸ்வேர்ட் :
"சாத்தான் உன்னை நேசிக்கிறான்" என்பது போல திருடர்களை திட்டி பாஸ்வேர்ட் வைக்கலாம்.

சிக்கலான வைபை பாஸ்வேர்ட் :
இது போல சிக்கலான வைபை பாஸ்வேர்ட் வைக்கலாம் கூடவே உங்கள் காதலையும் வெளிப்படுத்தலாம்.!!

கிலி :
போலிஸ், சிபிஐ, எப்பிஐ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திருட நினைப்பவர்களுக்கு கிலி கிளப்பி விட்டு விலகி ஓட வைக்கலாம்.

திரும்ப திரும்ப :
ஒரே வார்த்தையை 'திரும்ப திரும்ப திரும்ப திரும்ப' பயன்படுஹ்டி வைபை திருடர்களை குழப்பலாம்.

முழு வாக்கியம் :
எளிமையாக ஒரு முழு வாக்கியத்தை பாஸ்வேர்ட் ஆக வைக்கலாம்.

மேலும் படிக்க :
ஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.!!
மொபைல் போன் பாதுகாப்பு : அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications