Home
News

டிக் டாக் பயன்படுத்தக் கூடாது என்று மனைவியைக் கண்டித்த கணவன்: நடந்ததை நீங்களே பாருங்கள்.!

டிக் டாக் செயலியைப் பயன்படுத்தக் கூடாது என்று கணவன் கண்டித்ததைத் தொடர்ந்து, மனமுடைந்து விஷம் குடித்த மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்ததை டிக் டாக் வீடியோவாக பதிவு செய்து, அதை இறுதி வீடியோவாக டிக் டாக்கில் போஸ்டும் செய்துள்ளார்.

பெரம்பலூர் தம்பதியினர்

பெரம்பலூர் தம்பதியினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழனிவேலுவுக்கும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகின்றது. இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பழனிவேலு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதினால், கணவர் குடும்பத்துடன் அனிதா சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

டிக் டாக் வீடியோ

டிக் டாக் வீடியோ

தனது மொபைல் போனில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வந்த அனிதா, முழு நேரமும் அதிலேயே மூழ்கியிருக்கிறார். குழந்தைகளைக் கவனிக்காமல் முழு நேரமும் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது மற்றும் சிலநேரங்களில் அவரே டிக் டாக் வீடியோ செய்வதென்று முழுமையாக டிக் டாக்கில் மூழ்கிப்போயிருக்கிறார்.

கணவன் கண்டித்து ஏன்?

கணவன் கண்டித்து ஏன்?

சிங்கப்பூரில் இருக்கும் பழனிவேலுவிடம், அனிதாவின் செயல்கள் சரியாக இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். குடும்பத்தினர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த பழனிவேலு, அனிதாவைக் கோபத்தில் கடுமையாக கண்டித்திருக்கிறார். இனிமேல் டிக் டாக் செயலி பயன்படுத்தக் கூடாது என்றும் கண்டித்திருக்கிறார்.

மனஸ்தாபத்தில் மனமுடைந்து விஷம் பருகிய அனிதா

மனஸ்தாபத்தில் மனமுடைந்து விஷம் பருகிய அனிதா

கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் மனமுடைந்து அனிதா வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்திருக்கிறார் . இவர் விஷம் பருகும் காட்சியை வீடியோ பதிவாகப் பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுமிருக்கிறார். விஷம் அருந்திய அனிதாவை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Young Wife Commits Suicide For Husband Scolded Her Not To Use Tik Tok Mobile App : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X