எம்மா நீ வேற லெவல்- இதுவரை இந்தமாதிரி எந்த மனைவியும் பரிசு கொடுத்துருக்கு மாட்டாங்க: உறைந்துபோன கணவர்!

|

காதலர்தினத்தன்று காதலர் காதலிக்கும், காதலி காதலருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் வித்தியாசமான சர்ப்ரைஸ் அன்பளிப்பை வழங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இதில் சிலர் நூதனமான மெய்சிலிர்க்க வைக்கும் அன்பளிப்பை வழங்குவது உண்டு.

மனைவி கணவருக்கு அன்பளிப்பு

மனைவி கணவருக்கு அன்பளிப்பு

அன்பளிப்பு என்பது எதிர்பாராத வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் அனைவரின் கவனமும் இருக்கும். இதற்கு சிலர் இணையதளத்தை அலசி ஆராய்ந்து ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பார்கள். சிலர் அவர்கள் கூறிய ஆசை வார்த்தையை அன்றைக்கு நிறைவேற்றி வைப்பார்கள். இதிலும் சற்று வித்தியாசமாக இங்கு ஒரு மனைவி கணவருக்கு அன்பளிப்பு வழங்கியுள்ளார்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அன்பளிப்பு

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அன்பளிப்பு

அன்பளிப்பு என்பது எந்த அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சர்ப்ரைஸ் செய்கிறது என்பதில் தான் அதன் மதிப்பு இருக்கிறது. பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக சமூகவலைதளங்களில் நமக்கு பிடித்த புகைப்படத்தை பார்த்ததும் லைக், கமெண்ட் செய்வது வழக்கம்.

இன்ஸ்டா புகைப்படம்

இன்ஸ்டா புகைப்படம்

பொதுவாக ஒருவருக்கு பிடித்த நபர் பிறரை பாராட்டும்போதும் புகழும் போதும் தங்களுக்குள் ஒருவித பொறாமை உணர்வு தோன்றும். அதேபோல் தனது கணவன் மற்ற பெண்களின் இன்ஸ்டா புகைப்படத்தை லைக் செய்வதை கவனித்து வந்துள்ளார்.

வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவன் லைக் பெண்களின் புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து அதை காதலர்தின பரிசாக மனைவி கணவருக்கு வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கலவையான கமெண்ட்கள்

பதிவிட்ட இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதை காட்டுமிராண்டித்தனம் என சிலர் விமர்சித்தாலும் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த அன்பளிப்பு தொடர்பான வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

கணவருக்கு பிடிக்கும் என நம்பிக்கை

கணவருக்கு பிடிக்கும் என நம்பிக்கை

அழகான சின்ன பெட்டியை பெற்று இன்ஸ்டாகிராமில் தனது கணவர் லைக் செய்த பெண்களின் புகைப்படங்களை நிரப்பி வழங்கினேன் எனவும் அதை அவர் விரும்புவார் என நம்புவதாகவும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 விநாடிகள் இருக்கும் இந்த வீடியோ டிக்டாக் குளோரியா என்ற பயனரால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த கணவர் உறைந்து போகியிருப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Pic, Video Courtesy: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Wife Gifted the Photos that the Husband liked on Instagram

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X