உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!

|

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் என்ற தலைப்பில் பல செய்திகளை படித்திருப்போம். அதேபோல் இங்கு ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த முறை ஆப்பிள் வாட்ச் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறது. இந்த நிகழ்வு வாஷிங்டன்னில் அரங்கேறி இருக்கிறது. முழுத் தகவலை விரிவாகப் பார்க்கலாம்.

கல்லறையில் இருந்து வெளியேறிய பெண்

கல்லறையில் இருந்து வெளியேறிய பெண்

இதுகுறித்து டெல்லிமெயிலில் வெளியான தகவலை பார்க்கலாம். பெண் ஒருவர் அவரது கணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருடன் டக்ட் டேப் சுத்தி புதைக்கப்பட்டுள்ளார். ஏறத்தாழ கல்லறையை அடைந்த பெண் சொந்த முயற்சியால் ஆப்பிள் வாட்ச் உதவியுடன் கல்லறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

கணவர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்

கணவர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்

கல்லறைக்குள் கணவரால் தாக்கப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அந்த பெண் சாதுர்யமாக கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் 911க்கு டயல் செய்துள்ளார். கணவரால் தாக்கப்பட்டு பல தீவிர காயங்களுக்கு உள்ளான அந்த பெண் சியாட் எனும் நகரப்பகுதியில் இருந்து தென்மேற்கே 60 மைல் தொலைவில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் வயது தோராயமாக 42 இருக்கும் என கூறப்படுகிறது.

கல்லறைக்குள் இருந்த பெண் சாதுர்யமாக 911க்கு டயல் செய்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அந்த பெண்ணை கல்லறையில் இருந்து மீட்டனர். வெளியே வந்ததும் அந்த பெண் "என் கணவர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்" என்று கூறியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்

கல்லறையில் இருந்து மீட்கப்பட்ட போது அந்த பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கழுத்து, முகம், கணுக்கால் உள்ளிட்ட பகுதிகளில் டக்ட் டேப் சுற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் பாதிப்புக்குள்ளான போது அவரது இதயத்துடிப்பு அதிகமாகி இருக்கிறது. இதையடுத்து ஆப்பிள் வாட்ச் அந்த பெண்ணின் 20 வயது மகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அறிந்த அவரது கணவர் ஆப்பிள் வாட்ச்சை ஒருமுறை சுத்தியலால் அடித்தார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு பிறகும் ஆப்பிள் வாட்ச் நன்றாக செயல்பட முடிந்த காரணத்தால் அந்த பெண்ணால் தப்பிக்க முடிந்திருக்கிறது.

அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தாக கூறப்படுகிறது.

உயிர்களை காப்பாற்றும் ஆப்பிள் வாட்ச்

உயிர்களை காப்பாற்றும் ஆப்பிள் வாட்ச்

எதிலும் தனித்து நிற்கும் ஆப்பிள், ஸ்மார்ட் வாட்ச் பிரிவிலும் தனித்தே நிற்கிறது. பல்வேறு மேம்பட்ட அம்சங்கள், தனித்துவ செயல்பாடுகள் என கூட்டத்தில் இருந்த தன்னை வேறுபடுத்தி காட்டுகிறது ஆப்பிள் வாட்ச்கள். ஆப்பிள் என்றால் அம்சங்களும் உயர்வு தான் விலையும் உயர்வு தான் என்பதை அனைவரும் அறிந்ததே.

ஆனால் எந்த விலையும் ஒரு உயிரின் மதிப்புக்கு இணையாகாது. அதன்படி ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படியான மற்றொரு நிகழ்வை பார்க்கலாம்.

இதயத் துடிப்பு கண்டறிதல் அம்சம்

இதயத் துடிப்பு கண்டறிதல் அம்சம்

ஒரு சிறுமிக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிய ஆப்பிள் வாட்ச் பேருதவியாக இருந்திருக்கிறது. வாட்ச் அசாதாரணமான இதயத் துடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இதயத் துடிப்பு அம்சமானது வாட்ச் எஸ்இ, வாட்ச் 7 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ச் 8, வாட்ச் அல்ட்ரா ஆகிய அனைத்து வாட்ச்களிலும் இருக்கிறது.

கேன்சர் கட்டி கண்டறிய உதவிய ஆப்பிள் வாட்ச்

கேன்சர் கட்டி கண்டறிய உதவிய ஆப்பிள் வாட்ச்

Hour Detrout தகவலின்படி, இமானி மைல்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது அசாதாரணமான உயர் இதயத் துடிப்பு குறித்து ஆப்பிள் வாட்ச் மூலம் கண்டறிந்து இருக்கிறார். 12 வயது சிறுமியின் தாயார் ஜெசிகா கிச்சனும் தனது மகளின் இதயத்துடிப்பு வித்தியாசமாக இருந்ததைக் கண்டிருந்திருக்கிறார். முன்பு இதைபோல் இத்தனை அதிகமான இதயத்துடிப்பு தனது மகளுக்கு இருந்தது இல்லையே என்றும் இந்த முறை மிக அதிகமாக இருக்கிறது எனவும் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.

குடல் அழற்சி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள்

குடல் அழற்சி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள்

தொடர்ந்து ஜெசிகா கிச்சன் இதுகுறித்து கூறுகையில், இதயத் துடிப்பு அதிகமானது குறித்து பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த 12 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்துடிப்பு அதிகமான காரணம் குறித்து சோதனை செய்த மருத்துவர், சிறுமி இமானிக்கு குடல் அழற்சி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அங்கு பிரச்சனை அதோடு முடியவில்லை.

வாட்ச்சை பாராட்டிய தாயார்

வாட்ச்சை பாராட்டிய தாயார்

மருத்துவர்களின் தொடர் சோதனையில் அந்த சிறுமிக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் அந்த தாயாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கட்டி குழந்தைகளுக்கு அரிதானவை எனவும் இமானியின் உடலில் மற்ற பாகங்களுக்கும் கட்டி பரவி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கட்டியினால் இதயத்துடிப்பு அளவு மாறுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியின் கையில் ஆப்பிள் வாட்ச் இருக்கும் காரணத்தால் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது எனவும் இதன்மூலமாக கட்டி இருப்பது தெரியவந்தது எனவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். கையில் வாட்ச் இல்லாவிட்டால் கட்டியை கண்டறிய இன்னும் தாமதமாகி இருக்கும் என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். ஆப்பிள் வாட்ச் இரண்டு நாட்களாக இதுகுறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்ததாகவும் சிறுமியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

File Images

Best Mobiles in India

English summary
Wife buried alive! A Woman Rescue From Grave With the Help of Apple Watch..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X