சென்னையை தொடர்ந்து பெங்களூர் ரயில் நிலையத்துக்கும் வைவை வசதி வருகிறது

By Meganathan
|

கடந்தாண்டு அரிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் விரைவில் வைபை கனெக்ஷன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் வைபை வசதி பெற இருக்கும் முதல் ரயல் நிலையம் என்ற பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றதையடுத்து பெங்களூரு ரயில் நிலையத்திற்கும் வைபை வசதி மேம்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

சென்னையை தொடர்ந்து பெங்களூர் ரயில் நிலையத்துக்கும் வைவை

ரூ. 55 கோடி செலவில் உருவாகும் இந்த திட்ட பணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா துவக்கி வைத்தார். ரயில் நிலையங்களோடு இல்லாமல் ராஜ்தானி, ஷதாப்தி என முக்கிய ரயில்களிலும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் வைபை சேவை பயன்படுத்த முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாகவும், அதன் பின் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 30 நிமிடங்களுக்கு ரூ.25, 1 மணி நேரத்திற்கு 35 ரூபாய் என்ற கட்டனம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Wi-Fi soon to Bangalore Railway Station. Find the full details of the wifi hub in Bangalore railway station.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X