Wi-Fi Dabba: 1 ஜிபிபிஎஸ் வேகத்தில், 1ஜிபி டேட்டா வெறும் 1 ரூபாய்! சூப்பர்நோட்ஸ்க்கு நன்றி!

|

பொது வைஃபை ஹாட்ஸ்பாட் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2017-ல் துவங்கப்பட்ட வைஃபை டப்பா நிறுவனத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள் அல்லவா? தெரியாதவர்களுக்கு எளிதில் புரியும்படி சொன்னால் 1 ஜிபி டேட்டாவை வெறும் 1 ரூபாயில் வழங்கிய முதல் இந்திய நிறுவனம் வைஃபை டப்பா மட்டும் தான்.

1 ரூபாயில், 1 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு

1 ரூபாயில், 1 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு

வைஃபை டப்பா நிறுவனம் இப்போது தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுவதுமாக, 1 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு வேகத்தில், 1 ஜிபி டேட்டாவிற்கு வெறும் 1 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. வைஃபை டப்பாவின் புதிய சூப்பர்நோட்களைக் கொண்டு இந்த மலிவு விலையில், அதிவேக டேட்டா சேவையை வழங்க முடியும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக சூப்பர்நோட்ஸ்

ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக சூப்பர்நோட்ஸ்

வைஃபை டப்பா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1.7 மில்லியன் முதலீட்டுத் தொகையை சூப்பர்நோட் உருவாக்கத்திற்காகச் செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. வைஃபை டப்பா நிறுவனத்தின் கூற்றுப்படி, சூப்பர்நோட்கள் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக உள்ளது, இவை தற்போது இந்தியாவில் இணையச் சேவை வழங்குநர்களின்(ISPs) அமைப்புகளுக்கு முதுகெலும்பாக இருக்கின்றனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

சூப்பர் வேகத்தில், சூப்பர் டேட்டா

சூப்பர் வேகத்தில், சூப்பர் டேட்டா

​​வைஃபை டப்பா நிறுவனம், அதன் சேவையை முதல் கட்டமாகப் பெங்களூரு நகரில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சூப்பர்நோட்களை நிறுவப் பெங்களூரின் மெய்நிகர் இடவியல் வரைபடத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மலிவான விலையில், சூப்பர் வேகத்தில்,சூப்பர் டேட்டா சேவையை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

பெங்களூரில் களைகட்டும் வைஃபை டப்பா!

பெங்களூரில் களைகட்டும் வைஃபை டப்பா!

இப்போதைக்கு, வைஃபை டப்பா நிறுவனம் பெங்களூரில் சுமார் 1,000-க்கும் அதிகமான ஹாட்ஸ்பாட் டப்பாக்களை நகரத்தின் பெரும்பாலான இடங்களில் நிறுவியுள்ளது. வைஃபை டப்பா நிறுவனத்தின் படி, 1ஜிபி டேட்டாவுக்கு ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், இது நகரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட இணை-வாழ்க்கை (Co-Living) இடங்களுக்கான இணைப்பையும் வைஃபை டப்பா வழங்குகிறது.

Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!

புதிய முயற்சி விரைவில் அமல்படுத்தப்படும்

புதிய முயற்சி விரைவில் அமல்படுத்தப்படும்

இந்த ஆண்டு, வைஃபை டப்பா நிறுவனம் புதிய முயற்சியுடன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி 1 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வெறும் 1 ரூபாயில் வழங்க அதன் சூப்பர்நோட்ஸ்களை மேம்படுத்தி வருகிறதென்று கூறப்பட்டுள்ளது. சூப்பர்நோட்ஸ் தொழில்நுட்பத்திற்கு நன்றி தெரிவித்து, வைஃபை டப்பா விரைவில் 1 ஜிபிபிஎஸ் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெங்களூரில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை டப்பா தயாராகிவிட்டது

வைஃபை டப்பா தயாராகிவிட்டது

சூப்பர்நோட்ஸ் தொழில்நுட்பத்திற்கு நன்றி தெரிவித்து, வைஃபை டப்பா விரைவில் 1 ஜிபிபிஎஸ் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெங்களூரில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பொது மற்றும் கார்ப்பரேட் நிறுவங்களை குறிவைத்து, 1 ஜிபி டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்க வைஃபை டப்பா தயாராகிவிட்டது.

இனிமேல் சிரமம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்: சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.இனிமேல் சிரமம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்: சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.

விரைவில் இந்திய முழுதும் 1 ரூபாயில் 1 ஜிபி டேட்டா

விரைவில் இந்திய முழுதும் 1 ரூபாயில் 1 ஜிபி டேட்டா

வைஃபை டப்பாவின் இந்த சேவை, மற்ற பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டைப் போலவே செயல்படுகிறது. எந்தவொரு உள்ளூர் வைஃபை டப்பா கடையிலும் இதற்கான ரீசார்ஜ் பேக்குகள் கிடைக்கிறது. கூடிய விரைவில் பெங்களூர் மட்டுமில்லாமல் இந்தியா முழுதும் அதன் சேவையை துவங்கவுள்ளதென்று வைஃபை டப்பா நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Wi-Fi Dabba Is Ready To Offer 1 Gbps High Speed Data At Just Rs.1 Per GB : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X