Home
News

போட்டு தாக்கிய Vodafone.. அன்லிமிடெட் 4G, 5G டேட்டா.. போட்டி போட்டு ரீசார்ஜ் செய்யப்படும் 2 திட்டங்கள்!

கசப்பான உண்மை என்னவென்றால்.. கையில் இருக்கும் கஸ்டமர்களை தக்கவைக்க வேண்டும் (காப்பாற்றி கொள்ள வேண்டும்) என்கிற கட்டாயம் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை விட வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கே அதிகம் உள்ளது. ஏனென்றால் இந்திய தனியார் டெலிகாம் துறையில் கடைசி இடத்தில் உட்காந்து இருப்பது விஐ (Vi) தான்!

எனவே தான் வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது அதன் கஸ்டமர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்க முடியுமோ அதையெல்லாம் கொடுக்கிறது. அப்படிப்பட்ட சலுகைகளில் இந்நிறுவனத்தின் 2 நான-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் மிகவும் கவனிக்கத்தக்க திட்டங்களாக உள்ளன. அதென்ன திட்டங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

அன்லிமிடெட் 4G, 5G.. போட்டி போட்டு ரீசார்ஜ் செய்யப்படும் 2 திட்டங்கள்!

நாம் இங்கே பேசும் இரண்டு நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்களுமே இந்நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் திட்டங்கள் ஆகும் . அதாவது நிறைய கஸ்டமர்களால் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களின் விலை ரூ.649 மற்றும் ரூ.979 ஆகும். சுவாரசியமாக இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள விஐ வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கின்றன.

ஜியோ மற்றும் ஏர்டெல் என்கிற 2 ஜாம்பவான்களுக்கு மத்தியில் இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு பெரிய சந்தை பங்கை பிடிக்கவே இந்த நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறியாதோர்களுக்கு நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்களுடன், 5ஜி கவரேஜின் கீழ் இருக்கும் மற்றும் தகுதியான 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டிருக்கும் விஐ கஸ்டமர்களுக்கு வரம்பற்ற 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.649 ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி விவரங்கள்: வோடபோன் ஐடியாவின் ரூ.649 திட்டமானது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் வரம்பற்ற டேட்டாவுடன் வருகிறது இருப்பினும், அதிவேக டேட்டா 300ஜிபி ஆக வரையறுக்கப்பட்டு உள்ளது.

ரூ.649 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். டேட்டா நன்மையை தவிர்த்து, மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்ஸ் ஆகியவைகளையும் வழங்கும். இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) போன்ற எந்த கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.

வோடபோன் ஐடியா ரூ.649 ப்ரீபெய்ட் நான்-ஸ்டாப் ஹீரோ திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி விவரங்கள்: வோடபோன் ஐடியாவின் ரூ.979 திட்டமானது 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் இது வரம்பற்ற டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய முக்கிய நன்மைகளை வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிவேக டேட்டாவும் 300ஜிபி என்று வரையறுக்கப்பட்டு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஓடிடி சந்தா ஒன்றும் உள்ளது. அது விஐ மூவீஸ் அண்ட் டிவி (Vi Movies & TV) சந்தா ஆகும். விஐ மூவீஸ் அண்ட் டிவி சந்தா வழியாக இந்த திட்டத்தின் பயனர்கள் 19 வெவ்வேறு ஓடிடி தளங்களிலிருந்து 84 நாட்களுக்கு கன்டென்ட்களை பார்த்து மகிழலாம்.

இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைத் தவிர, வோடபோன் ஐடியா வழங்கும் இன்னும் பல நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் உள்ளன. இந்த பிரிவின் கீழ் வழங்கப்படும் அடிப்படை திட்டம் ரூ.365 ஆகும். இது தான் இந்த பிரிவில் மிகவும் மலிவான திட்டமாகும், இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வெளிட்டி உடன் வருகிறது. மேற்கண்ட ரூ.649 மற்றும் ரூ.979 ஆனது உங்களுக்கு விலை உயர்ந்த திட்டமாக தெரிந்தால், நீங்கள் ரூ.365-ஐ தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Vodafone Idea Customers Likes Rs 649 and Rs 979 Non Stop Hero Plans Benefits Validity Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X