Google Pay, PhonePe ஆப்.. வல்லுநர்கள் எச்சரிக்கை.. UPI-க்கு பதிலாக UPI Wallet-ஐ பயன்படுத்தி தப்பிச்சுக்கோங்க!
பால், காய்கறிகள், பழங்கள் போன்ற, தினசரி அடிப்படையில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ பேமண்ட்-க்கு (UPI Payment) பதிலாக யுபிஐ வாலட்-ஐ (UPI Wallet) பயன்படுத்துவது தான் நல்லது மற்றும் அதுதான் பாதுகாப்பானதும் கூட என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இப்படி சொல்வதற்கான 3 முக்கியமான காரணங்களையும் அவர்கள் முன்வைக்கின்றன. யுபிஐ பேமண்ட் மற்றும் யுபிஐ வாலட்டிற்கு இடையே என்ன வேறுபாடு? வல்லுநர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்ன? இதோ விவரங்கள்:
தினசரி பேமண்ட்டுகளுக்கு நீங்கள் எதை பயன்படுத்துகிறீர்கள்? பெரும்பாலான மக்களை போலவே நீங்களும் யுபிஐ பேமண்ட்-ஐ தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தினசரி கொள்முதலுக்கு யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் பயனுள்ளது மற்றும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கூறுகிவது ஏன் என்பதை புரிந்து கொள்ள, முதலில் யுபிஐ மற்றும் யுபிஐ வாலட் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யுபிஐ அல்லது யுபிஐ இடையே உள்ள வேறுபாடு என்ன? யுபிஐ என்பது 2 வங்கி கணக்குகளுக்கு இடையே பணப்பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு கட்டண முறையாகும். இந்த பரிமாற்றமானது ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐஆப்பின் மூலம் செய்யப்படுகிறது. இதில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) ஆகியவைகள் அடங்கும்.
மறுபுறம் உள்ள யுபிஐ வாலட் என்பது ஒரு வகையான ப்ரீ-பெய்டு வாலட் ஆகும், இது யுபிஐ ஆப்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாலட்டில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை, தினசரி மற்றும் சிறிய பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இதற்காக நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கை அணுக வேண்டிய அவசியம் இருக்காது. சரி இப்போது வல்லுநர்கள் முன்வைக்கும் 3 காரணங்களை பற்றி பார்ப்போம்:
1. சிறிய கட்டணங்களுக்கு யுபிஐ வாலட் ஏன் பாதுகாப்பானது? சிறிய தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு யுபிஐ வால்ட் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதற்கு முக்கிய காரணம் - இதன் கீழ் உங்கள் வங்கி கணக்கை அணுக வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாலட்டில் உள்ள தொகையை மட்டுமே நீங்கள் செலுத்த முடியும்.
எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ரூ.500 செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தவறுதலாக நீங்கள் ஒரு கூடுதல் பூஜ்ஜியத்தை போட்டுவிட்டீர்கள் என்றால், அந்த கட்டணம் ரூ.5000 ஆக மாறிவிடும். இது யுபிஐ கட்டணத்தில் சாத்தியமாகும். ஆனால் யுபிஐ வாலட்டில் இதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் யுபிஐ வாலட்டின் வரம்பே ரூ.300 தான்.
2. கேஷ்பேக் மற்றும் வெகுமதிகள் கிடைக்கும்: ஒப்பீட்டளவில் யுபிஐ வாலட்டை பயன்படுத்தும்போது கேஷ்பேக் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்கள் அதிகமாக கிடைக்கும். யுபிஐ கட்டணத்தில் அதிகமாக கிடைப்பதில்லை. பல வாலட் வழங்குநர்கள், கடைக்காரர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். இதன்கீழ் வாலட் வழியாக பணம் செலுத்தும் பயனர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுகிறது.
3. பயன்படுத்த மிகவும் எளிதானது: நீங்கள் யுபிஐ வாலட்டை லோட் செய்ததும், சிறிய கட்டணங்களை செலுத்துவது முன்னெப்போதை விடவும் எளிதாகிவிடும். ஒவ்வொரு கட்டணத்திற்கும் நீங்கள் யுபிஐ பின்னை உள்ளிட வேண்டியதில்லை. இது பரிவர்த்தனையை விரைவாக முடிக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சிறிய பரிவர்த்தனைகளுக்கு இதைப் பயன்படுத்தினால், அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்!
மேலோட்டமாக பார்க்கும் போது மேற்கண்ட 3 காரணங்களும் "சாதாரணமாக" தெரியலாம். ஆனால் பணப்பரிமாற்றம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் தவறாக பணம் அனுப்பிவிட்டு அதை திரும்ப பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகள், பண இழப்பை உண்டாக்கும் மோசடிகள் ஆகியவைகளை சந்திந்த வாடிக்கையாளர்களுக்கு.. மேற்கண்ட 3 காரணங்களும் "அற்புதமானதாக" தோன்றலாம்!


Click it and Unblock the Notifications








