அமெரிக்காவிற்கே எச்சரிக்கை : வடகொரியாவிற்கு 'கட்டம்' சரியில்லை..!
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக, தனது அதிநவீன அணு ஆயுதங்களை கட்டவிழ்த்து விட இருப்பதாக வடகொரியா 'பொறுப்பாற்ற முறையில்' எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதுவரை இல்லாத அளவிலான, சுமார் 300,000 போர் வீரர்களை கொண்டு மிகபெரிய ராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளது. இதனால் 'அந்தந்த' பிராந்தியங்களில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தாக்க வரும் ஏவுகணையை தடுத்து அழிக்கும், அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (US missile defence system) நிறுவ நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புதான் 'தாட்' - இதற்கு பிற உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பத்தின் மூலம் இதன் சக்தியை அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறன 'தாட்' பாதுகாப்பு அமைப்பு இருக்கும் வரையிலாக வடகொரியாவின் எச்சரிக்கைகள் எல்லாம் அமெரிக்காவிற்கு 'ஒரு விஷயமே இல்லை' என்பது தான் நிதர்சனம்..!

'ஹிட் டு கில்' தொழில்நுட்பம் :
தாட் - அதாவது டெர்மினல் ஹை ஆல்டிடுயூட் ஏரியா டிபென்ஸ் சிஸ்டம் (Terminal High Altitude Area Defense System) என்பதின் சுருக்கமாகும். அதாவது, தாட் ஒரு அதி உயர பகுதி பாதுகாப்பு அமைப்பு ஆகும். தாக்க வரும் ஏவுகணையை 'ஹிட் டு கில்' தொழில்நுட்பம் பயன்படுத்தி தாக்கி அழிக்கும் ஒரு அதிநவீன ஆயுதமாகும்.

இயக்க ஆற்றல் :
'ஹிட் டு கில்' தொழில்நுட்பம் என்பது இயக்க ஆற்றல் (Kinetic Energy) மூலம் உள்வரும் ஆயுதங்களை, கண்டறிந்து வழியிலேயே தாக்கி அழிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் ஆகியவைகளை தாட் துல்லியமாக துவம்சம் செய்யும்.

100% துல்லியம் :
உலகில் மிக நவீன ஏவுகணை அமைப்பு தாட் மிசைல் சிஸ்டம் என்பதும், தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பததில், இது 100% துல்லியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணினி அமைப்புகள் :
தாட் சிஸ்டம் எதிர் தாக்க வரும் ஏவுகணையை வளிமண்டலத்திற்கு உள்ளே மற்றும் வெளியே சென்று தாக்க கூடியது என்பதும், கணினி அமைப்புகள் அல்லது மென்பொருள் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளும் வசதி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்வரும் ஏவுகணை :
தாட் அமைப்பு ஏவுகணையானது சுமார் 200 கிலோமீட்டர் தூரம் மற்றும் சுமார் 150 கிலோமீட்டர் உயரம் அவரி சென்று உள்வரும் ஏவுகணையை தாக்கி அழிக்கும்.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு :
தாக்க வரும் ஏவுகணையானது முதலில் தாட் அமைப்பின் ரேடார்களில் சிக்கும், அதன் பின்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு (command and control) தளத்திற்கு தகவல் அனுப்பபட்டு இடைமறிப்பு ஏவுகணை ஏவப்பட தயார் நிலை உருவாக்கப்படும்.

அழிக்கும் :
பின்பு 'தாட்' அமைப்பில் இருந்து ஏவுகணை செலுத்தபடும் அது ஹிட் டு கில் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு உள்வரும் ஏவுகணையை வானத்திலே தாக்கி அழிக்கும்.

உள்ளடக்கம் :
தாட் அமைப்பு நிறுவப்பட்டுள்ள 'லாஞ்சர் ட்ரக்'தனில் சுமார் 8 ஏவுகணைகள் வரை உள்ளடக்கம் கொண்டபடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!
அமைதியை பற்றி பேச, அமெரிக்காவிற்கு 'தகுதியே' கிடையாது..!
புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications