ஸ்மார்ட்போன்கள் ஏன் சூடாகின்றன, அதை எப்படி சமாளிக்க வேண்டும்?

By Prakash
|

பொதுவாக ஸ்மார்ட்போன்கள் விளையாட்டுகள் மற்றும் வீடியோ பார்ப்பதற்க்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, இதனால் சாதனங்கள் அதிகஅளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் அதிக இன்டர்நெட் வசதியை உபயோகப்படுத்துவதால் ஸ்மார்ட்போன்கள் செயல்படாமல்போக வாய்ப்பு அதிகமாய் உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் அதிகளவு சூடாகும் போது, கருவியினுள் இருக்கும் பாகங்கள் சீக்கிரம் பழுதாகக்கூடும், மேலும் அதன் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக குறையும் எனக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் எஸ்ஓசி'கள் கருவிகளில் ஏற்படும் வெப்பத்தைத் தாங்குமளவு வடிவமைக்கப்படும், ஆனால் இவை ஓரளவு வெப்பத்தை மட்டுமே கட்டுப்படுத்தும். ஒரு வேலைக் கருவி அதிகளவு வெப்பமாகும் நிலையில் கருவியின் பிராசஸர் வேகம் குறையும், இதனால் கருவியின் செயல் வேகமும் குறையும்.

ஜி.பி.எஸ் & ப்ளூடூத்:

ஜி.பி.எஸ் & ப்ளூடூத்:

ஜி.பி.எஸ், ப்ளூடூத், வைஃபை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை அதிகஅளவுப் பயன்படுத்த கூடாது. ஜிபிஎஸ் பொதுவாக உங்களது பேட்டரி ஆயுளைக் குறைத்துவிடும். ஜி.பி. எஸ் சிக்னல் தேட தொடர்ந்து வெப்பம் ஏற்படுத்தும் இதனால் இதை தவிர்ப்பது நல்லது.

ஆப்ஸ்:

ஆப்ஸ்:

ஸ்மார்ட்போன்களில் தேவைக்கு அதிகமாய் ஆப்ஸ் உபயோகப்படுத்துவதால் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது, குறைந்த எண்ணிக்கையில் ஆப்ஸ் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அப்டேட்:

அப்டேட்:

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒஎஸ் பொறுத்தமட்டில் அவ்வப்போது அப்டேட் செய்தல் வேண்டும், மேலும் பழைய ஒஎஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

எஸ்ஒசி :

எஸ்ஒசி :

எஸ்ஒசி அதிகளவு சூடாவதை தடுக்கச் சக்தி வாய்ந்த அதிக மெமரி கொண்ட கேம்களை விளையாடுவதை நிறுத்த வேண்டும். பொதுவாக இது போன்ற கேம்கள் அதிகளவு பிரசாஸர் சக்தியைப் பயன்படுத்தும்.

சார்ஜ் :

சார்ஜ் :

உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது, வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் மற்றும் விளையாட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம்
அல்லது தரவைப் பயன்படுத்த வேண்டாம், இவற்றினால் ஸ்மார்ட்போன் வெப்பமடைய அதிகவாய்ப்பு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Why smartphones heat up and how to deal with it ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X