கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை: உடனே இதை அப்டேட் செய்யுங்கள்- பாதுகாப்பு முக்கியம்!

|

கூகுள் க்ரோம் ப்ரவுஸர் அவ்வப்போது அப்டேட் வழங்கி வருகிறது. அதேபோல் தற்போது ஒரு அப்டேட் வழங்கியுள்ளது என அலட்சியம் காட்ட வேண்டும். தற்போதைய அப்டேட் மிக முக்கியமான சில பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்துள்ளது. இந்த தகவல் வந்ததும் க்ரோம் ப்ரவுஸரில் உள்ள குறைபாடு குறித்து கேள்வி வரலாம்.

கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை

கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை

Zero-day vulnerability என்ற பாதுகாப்பு குறைபாடு என ஆண்ட்ராய்டு போலீஸ் வலைதளம் அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியிடுவதன் மூலம் கூகுள் தனது க்ரோம் ப்ரவுசரில் குறைபாடுகளை கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் சரி செய்திருக்கிறது.

அப்டேட் பெறாத அல்லது அப்டேட் செய்யாத சாதனங்கள்

அப்டேட் பெறாத அல்லது அப்டேட் செய்யாத சாதனங்கள்

தற்போதுவரை அப்டேட் பெறாத அல்லது அப்டேட் செய்யாத சாதனங்கள் தற்போதுவரை ஹேக்கரகள் கண்களில் சிக்கி வருகின்றனர் எனவும் புதிய பாதுகாப்பு அம்சம் இல்லா சாதனங்களில் எளிதாக ஹேக்கர்கள் உள்நுழையலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனர்கள் க்ரோம் பரவுஸரை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் கூகுள் நினைக்கிறது காத்திருக்கிறது என அறிக்கை தெரிவிக்கிறது.

அப்டேட் வழிமுறைகள்

அப்டேட் வழிமுறைகள்

க்ரோம் ப்ரவுஸர் ஓபன் செய்வுடன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின் ஹெல்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதற்குள் About Chrome என்ற தேர்வை கிளிக் செய்தால் லேட்டஸ்ட் அப்டேட் பெறலாம். கூகுள் சேவை குறித்து அனைவரும் அறிந்தது. கூகுள் க்ரோம் பயன்படுத்தும் பயனர்கள் அதிகம். பாதுகாப்பாக இணைய சேவை பெற விரும்பும் பெரும்பாலானோர் கூகுள் அணுகலையே நாடுவார்கள். அப்படி பிரபலமடைந்த தளம்தான் கூகுள் க்ரோம். கூகுள் க்ரோம் பயன்படுத்தும் பயனர்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று வாரத்திற்கு பிரவுசரை தினசரியோ, வாரத்திற்கோ, ஏன் மாதத்திற்கு ஒருமுறை கூட ரீஸ்டார்ட் செய்வதில்லை.

பிரவுசர் ரீஸ்டார்ட்

பிரவுசர் ரீஸ்டார்ட்

பிரவுசர் ரீஸ்டார்ட் என்ற பழக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. மாறாக பிரவுசர் செயலிழக்கும்போது கீழே நோட்டிபிகேஷனாக ரீஸ்டார்ட் என காண்பிக்கப்படும் அப்படி கேட்கும் போது மட்டுமே ரீஸ்டார்ட் செய்வார்கள். மேலும் புதுப்பிப்பு நோட்டிபிகேஷன் ஆனது கணினியை மறுதொடக்கம் செய்ய வலியுறுத்தும். இதுபோன்ற காலக்கட்டத்தில் மட்டுமே ரீஸ்டார்ட் செய்வர்கள் ஏராளம்.

பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்

பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்

கூகுள் க்ரோம் பயன்பாடானது பயனர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதுப்பிப்புகளை வழங்குகிறது. இந்த புதுப்பிப்புகளை நிறுவ தாமதப்படுத்துவதால் தங்கள் கணினி தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். கணினி தகவல் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக பயன்படுத்த இந்த ரீஸ்டார்ட் கட்டாயம் செய்ய வேண்டும்.

கூகுள் க்ரோம் முறையான வழிமுறைகள்

கூகுள் க்ரோம் முறையான வழிமுறைகள்

  • முறையான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், வாரத்திற்கு ஒரு சமயத்தை இதற்கென்று குறித்துக் கொள்ள வேண்டும். அதாவது திங்கட்கிழமை காலை வாராந்திர க்ரோம் ரீஸ்டார்ட் நேரத்தை உருவாக்க வேண்டும்.
  • கணினிக்கு சரி., டேப்பில் க்ரோம் பயன்பாட்டை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கையில், டேப்பிள் உள்ள க்ரோம் பயன்பாடானது அலரல் சத்தம் எழுப்பி புதுப்பிப்பு எச்சரிக்கை விடுக்கும்.
  • விண்டோஸ் அல்லது மேக் பக்கத்தில் காட்டப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து செட்டிங்ஸ் என்ற பயன்பாட்டுக்குள் செல்ல வேண்டும். கீழே ஸ்க்ரால் செய்து About Chrome என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  •  பிரவுசர் மறுதொடக்கம் செய்வதன்மூலம் பாதுகாக்கப்படும்

    பிரவுசர் மறுதொடக்கம் செய்வதன்மூலம் பாதுகாக்கப்படும்

    அதன்பின் தங்கள் டேப்களில் பதுக்கல் மறுதொடக்கம் அல்லது பிரவுசர் மறுதொடக்கம் செய்வதில் பாதுகாக்கப்படும். அதேபோல் நீங்கள் மூன்று புள்ளிகள் அமைந்திருக்கும் பட்டனை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக புதுப்பிப்பு என்ற சொல் இருப்பதை கவனிக்கலாம்,. அப்படி கவனிக்கும் பட்சத்தில் புதிய பதிப்பு நிறுவலுக்கு காத்திருக்க வேண்டாம். அதில் காட்டப்படும் மூன்று புள்ளி நிறங்கள் நீங்கள் புதுப்பிப்புக்கு எவ்வளவு பின்தங்கியிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.

    வண்ணங்கள் மூலம் அறிவிப்பு

    வண்ணங்கள் மூலம் அறிவிப்பு

    • பச்சை: கடந்த 2 நாட்களாக புதுப்பிப்பு இருக்கிறது
    • ஆரஞ்ச்: கடந்த 4 நாட்களாக புதுப்பிப்பு இருக்கிறது.
    • சிவப்பு: புதுப்பிப்பு ஒரு வாரமாக இருக்கிறது, நீங்கள் புதுப்பிப்பில் இருந்து ஒரு வாரம் பின்தங்கியிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.
    • பாதுகாப்பாக க்ரோம் பயன்பாட்டை பயன்படுத்த விரும்பினால், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை முழு கணினியையும் ரீஸ்டார்ட் செய்யும் நேரத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் சாதனத்தையும் வேகமாக பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Why Should Regularly Restart and Update Google Chrome?- Here the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X