Home
News

டெய்லி 2ஜிபி + 20ஜிபி.. Jio SIM இருக்கா.. இந்த பிளானை ரீசார்ஜ் பண்ண 3 மாசத்துக்கு மஜா நன்மைகள்.. எந்த திட்டம்?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கடந்த சில நாட்களுக்குள் பல முக்கிய மாற்றங்களை செய்துவிட்டது என்றே கூறலாம். சில நாட்களுக்கு முன்னர் இந்நிறுவனம் ரூ.199 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கிய ஜியோவின் 1ஜிபி பிளானை நீக்கியது. இது பட்ஜெட் வாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ரீசார்ஜ் விலை உயர்வு எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட "அடிக்கடி மாற்றங்கள் நிகழும் சூழ்நிலையில்" ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) கஸ்டமர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தங்களால் முடிந்த.. தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற.. ஒரு லாங்-வேலிடிட்டி பிளான் ஒன்றை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்வது தான்!

டெய்லி 2ஜிபி + 20ஜிபி.. Jio SIM இருக்கா?

அது குறைந்த பட்சம் 3 மாத திட்டமாக இருக்க வேண்டும். அப்போது தான் திடீரென பட்ஜெட் விலை திட்டங்கள் நீக்கப்பட்டாலோ அல்லது அதிக விலை நிர்ணயம் கொண்ட திட்டங்களின் விலைகள் இன்னும் உயர்த்தப்பட்டாலோ.. குறைந்தது 90 நாட்களுக்கு (3 மாதங்களுக்கு) உங்களுக்கு எந்த கவலையும், அதிக செலவும் இருக்காது.

3 மாத வேலிடிட்டி உடன் வரும் எந்த ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்? உங்களுக்கு "டேட்டா நன்மை" தான் முக்கியம் என்றால்.. டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, எக்ஸ்ட்ரா 20ஜிபி டேட்டா என டேட்டா நன்மைகளை கொட்டிக்கொடுக்கும் ஒரு திட்டம் ஜியோ சேவையின் கீழ் உள்ளது. அது மாதாந்திரம் ரூ.299 செலவின் கீழ் 90 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கும் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான் ஆகும்.

ஜியோ ரூ.899 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முழுதாக 90நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டம் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். கூடவே 20ஜிபி அளவிலான இலவச டேட்டாவையும் வழங்கும். இப்படியாக இது மொத்தம் 200ஜிபி அளவிலான டோட்டல் டேட்டாவை வழங்கும்.

டேட்டா நன்மையை தவிர்த்து இதன் கீழ் அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டாருக்கான 3 மாத மொபைல் சந்தா கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் சேவையின் கீழ் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடைக்கும், ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மா த ப்ரோ பிளான் இலவசமாக கிடைக்கும், இதில் 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பல நன்மைகளும் அடங்கும்.

நீக்கப்பட்ட "கடைசியாக இருந்த ஒரே ஒரு 1ஜிபி பிளான்" எது? ஜியோ நிறுவனம் தனது ஆப்-ஒன்லி ரீசார்ஜ் ஆன ரூ.209 ப்ரீபெய்ட் பிளானை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஜியோ நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், மைஜியோ (MyJio) ஆப்பின் 'மலிவு விலை பேக்குகள்' (Affordable Packs) பிரிவில் உள்ள 'மதிப்பு திட்டங்கள்' (Value Plans) என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்த ரூ.209 திட்டமானது, இப்போது காணப்படவில்லை.

இதன் மூலம் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோவின் ஒரே ப்ரீபெய்ட் திட்டமான ரூ.209 பேக்கை பயனர்கள் இப்போது இழக்க நேரிடும் ஜியோ நிறுவனம் இந்த பிளானை மீண்டும் கொண்டு வருமா என்பதும் தெளிவாக தெரியவில்லை. ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 22 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கியது. அதாவது இது மொத்தமாக 22ஜிபி டேட்டாவை வழங்கியது.

இந்த பேக்கில், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தொகுக்கப்பட்ட ஓடிடி நன்மைகளின் ஒரு பகுதியாக ஜியோ டிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் அணுகல் ஆகியவைகளும் கிடைக்கும். தினசரி அதிவேக டேட்டா தீர்ந்தவுடன், அன்றைய மீதமுள்ள நேரத்திற்கு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைந்தது. ரூ.209 திட்டத்தின் ஒரு நாளைக்கான செலவு ரூ.9.5 ஆகும்.

ஜியோவின் புதிய ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: ரூ.199 திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை ரூ.199 திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. கூடுதலாக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாக்களும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Why Reliance Jio Rs 899 Prepaid Plan is Must Recharge For Jio SIM Card Users Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X