ரூ.5 எக்ஸ்ட்ரா கொடுத்தால் அள்ளி கொடுக்கும் அம்பானி.. Jio-வின் 28 நாள் OTT பாஸ் தான் பெஸ்ட்டு.. ஏன்?
முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் பயனர்களுக்காக ரூ.195 மற்றும் ரூ.200 விலையிலான டேட்டா பேக்குகளை வழங்குகிறது. இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களில் ரூ.200 பிளான் ஆனது ஓடிடி பாஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ரூ.200 ஆனது வெறும் ரூ.5 எக்ஸ்ட்ரா பணத்தில் அதிக நன்மைகளையும் கொடுக்கிறது. அப்படி என்ன நன்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கிறது? ரூ.5 கூடுதல் பணம் செலுத்தி ரூ.200 டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யுமாறு நாங்கள் ஏன் பரிந்துரைக்கிறோம்; அதற்கு தகுந்த காரணம் என்ன? இதோ விவரங்கள்:

இது வெறுமனே ஒரு ஓடிடி பிளான் அல்ல.. அம்பானியின் மாஸ்டர் பிளான்: இது போன்ற டேட்டா பேக்குகள், ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க ஜியோவுக்கு உதவுகின்றன. ஓடிடி தளங்களுக்கு ஏற்கனவே மாதாந்திர சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, ஜியோ இந்த ரூ.200 பேக்கை மிகவும் திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. சரி வாருங்கள் இப்போது ஏன் ரூ.200 திட்டம் சிறந்தது என்பதையும், ரூ.195 உடனான ஒரு ஒப்பீட்டையும் பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம் ஆனது ஓடிடி பாஸ் (OTT pass) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் 4ஜி டேட்டாவுடன் ஏராளமான ஓடிடி தளங்களுக்கான அணுகலையும் இது வழங்குவதால், ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை ஓடிடி பாஸ் என்று முன்னிலைப்படுத்துகிறது.
இந்த ரூ.200 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பயனர்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைப்பதுடன், YouTube Premium, Amazon Prime Video, JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன.
எந்தவொரு டேட்டா பேக்கை போலவும், ரூ.200 திட்டமும் கூட, பயனரிடம் ஏற்கனவே சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட பேஸிக் ப்ரீபெய்ட் திட்டம் (base prepaid plan) ஆக்டிவ் ஆக இருந்தால் மட்டுமே, அதற்கு மேல் இதை ரீசார்ஜ் செய்ய முடியும். அதாவது 28 நாள் வேலிடிட்டி என்பது ஓடிடி நன்மைகளுக்கான வேலிடிட்டி ஆகும்; டேட்டா பேக்கின் வேலிடிட்டி அல்ல மற்றும் இதன்கீழ் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் காலிங் நன்மைகள் எதுவும் கிடைக்காது
ஆனால் IPTV மூலம் 1000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுகலாம்; இவைகள் லைவ் டிவி சேனல்கள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.195 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 டேட்டா பேக்கிலும் ஓடிடி பலன் அடங்கியுள்ளது. இருப்பினும், இதில் JioHotstar-க்கான அணுகல் மட்டுமே கிடைக்கிறது. ரூ.195 டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இத்திட்டத்தில் பயனர்களுக்கு 15ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஆனால் இந்த திட்டத்துடன் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் 15ஜிபி டேட்டாவும் 4ஜி டேட்டா ஆகும். மேலும் பயனரிடம் ஏற்கனவே ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் (base prepaid plan) செயல்பாட்டில் இருந்தாலும் மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். வழக்கம் போல இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் எதுவும் இல்லை.
இந்த இரண்டில் ரூ.200 மதிப்பிலான டேட்டா பேக் ஏன் சிறந்தது? ரூ.200 மதிப்பிலான பேக் அதிக டேட்டா மற்றும் கூடுதல் ஓடிடி பலன்களை வழங்குகிறது; அதே சமயம் இதன் விலையும் ஏறக்குறைய ஒன்றுதான். இன்றைய காலகட்டத்தில் யூட்யூப் பிரீமியம் ஒரு சிறந்த ஓடிடி பலனாக கருதப்படுகிறது, ஏனெனில் கிட்டத்தட்ட அனைவரும் யூட்யூப்-ஐ பயன்படுத்துகிறார்கள்; விளம்பரங்கள் காரணமாக உங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரம் வீணாவதை இந்த சந்தா எளிமையாக தடுக்கும்.


Click it and Unblock the Notifications