கடைய திறந்த Tim Cook-க்கு இந்த உண்மை தெரியுமா? Apple Store-ல் ஐபோன் வாங்குற ஆசை இருந்தா மறந்துடுங்க! ஏன்னா?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக்கின் (Tim Cook) இந்திய வருகையும்.. அவர் மும்பையில் திறந்து வைத்த ஆப்பிளின் முதல் ரீடெயில் ஸ்டோரும் (First Apple Store in India).. கடந்த வார நிகழ்வுகளாக இருந்தாலும் கூட.. இன்றளவும் பேசுபொருளாக உள்ளன!
ஏனென்றால் இது, இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்க்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். அதுமட்டுமின்றி, இது பெரும்பலான ஆப்பிள் வாடிக்கையாளர்களின் நீண்ட கால வேண்டுகோளாகவும் இருந்தது. முன்னதாக ஆன்லைன் இ-காமர்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் ரீசெல்லர்கள் வழியாக மட்டுமே ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க முடியம் என்கிற சூழ்நிலை இருந்தது.

ஆனால் இனிமேல் அப்படி இல்லை. மும்பையில் திறக்கப்பட்ட (முதல் ஆப்பிள் ஸ்டோர் ஆன) ஆப்பிள் பிகேசி-ஐ (Apple BKC) தொடர்ந்து டெல்லியில் ஆப்பிள் சாக்கெட் (Apple Saket) என்கிற இரண்டாவது ஆப்பிள் ஸ்டோரும் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல விரிவடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இருப்பினும் கசப்பான உண்மை என்னவென்றால் புதிதாக திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும், வழிகளையும் வழங்குமே தவிர அதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடிகளை வழங்க முடியாமல் போகலாம். வரும் நாட்களில் இந்த நிலைமை மாறலாம்; ஆனால் இப்போதைக்கு இதுதான் ஆப்பிள் ஸ்டோர்களின் நிலவரம்!
உதாரணமாக, நீங்கள் ஐபோன் 14-ஐ வாங்க திட்டமிட்டு இருந்தால், அதை ஆப்பிள் ஸ்டோர் வழியாக வாங்குவதை விட ஆன்லைனில் வாங்குவதே நல்லது. ஏனென்றால், ஆப்பிள் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களிலும் ஐபோன் 14-க்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை.
ஐபோன் 14-இன் பேஸிக் ஸ்டோரேஜ், தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே ரூ.71,999 என்கிற தள்ளுபடி விலையில் (Offer Price) வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் அதன் அசல் வெளியீட்டு விலையான (Original Launch Price) ரூ.79,990 க்கே விற்கப்படுகிறது.
தள்ளுபடி மட்டுமல்ல, அமேசான் வழியாக ஐபோன் 14-ஐ வாங்கினால் அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.22,700 கிடைக்கும்; அதே நேரத்தில் பிளிப்கார்ட் வழியாக வாங்கினால் அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.29,250 கிடைக்கும். ஆப்பிள் ஸ்டோர்களிலும் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போனை எக்ஸ்சேன்ஜ் செய்யக்கூடிய டிரேட்-இன் திட்டம் (Trade-In program) இருக்கிறது தான்!
ஆனால் நீங்கள் கொடுக்கும் பழைய ஸ்மார்ட்போனின் இறுதி பரிமாற்ற மதிப்பானது (Final exchange value) குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பிராண்ட், மாடல் மற்றும் ஆப்பிள் ஸ்டோரின் நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் அளவிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ரீடெயில் ஸ்டார்களில் கிடைக்காது!
இருப்பினும் ஆப்பிள் ஸ்டோர் வழியாக ஐபோன் வாங்குவதில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்.. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் அதே வங்கி சலுகைகள் அங்கும் கிடைக்கிறது. அதாவது எச்டிஎப்சி (HDFC) வங்கியின் கிரெடிட் கார்டுகளின் வழியாக ரூ.4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். உடன் 3 அல்லது 6 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications








