நோக்கியா - ஏர்டெல் கூட்டணி : ஜியோவிற்கு வரப்போகும் 5 சிக்கல்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல் - நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் மீண்டும் பின்னிஷ் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது. இம்முறை நாட்டில் மேலும் 3 வட்டங்களில் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்த நோக்கியா ஒத்துழைக்க இருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8மெகாஹெர்ட்ஸ்ஸ்பெக்ட்ரம் தனை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது மற்றும் இப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது.
அப்படியான நோக்கியா - ஏர்டெல் கூட்டணியின் விளைவாக ரிலையன்ஸ் ஜியோ சந்திக்க போகும் 5 சிக்கல்கள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

3 புதிய வட்டாரங்கள்
ஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்வதினால் நிறுவனத்தின் முன்னிலையை இது உறுதிப்படுத்துகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நல்ல கவரேஜ்
நாட்டில் தரவு பயன்பாடு அதிகரித்து வ்ருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த நல்ல கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.

வேகமாக மொபைல் இணைய அணுகல்
மேலும்,ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2ஜி, 3ஜி வலையமைப்புகள் விரிவாக்கம்
இந்தியாவில் ஒரு நல்ல எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் 4ஜி நெட்வொர்க்குதனுக்கு நகர்ந்துவிட்ட போதிலும் கூட மறுபக்கம் நல்ல அளவிலான பயனர்கள் 2ஜி மற்றும் 3ஜி வலையமைப்புகளில் சிக்கி உள்ளன. இதை மனதில் வைத்து "மரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட" ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது

மேம்பட்ட ஸ்பெக்ட்ரம்
மேலே குறிப்பிட்டுள்ளது போல், பார்தி ஏர்டெல் நாட்டில் அதன் ஸ்பெக்ட்ரம் தடத்தை விரிவாக்கும் 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம்தனை கைப்பற்றியுள்ளது. அதன் இருப்பை அதிகமாக்க உதவும் 1800மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 230மெகாஹெர்ட்ஸ் பட்டைகள் முழுவதும் பெற மொத்தம் ரூ.14,244 கோடி செலவு செய்துள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
இலவசமாக 1ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?


Click it and Unblock the Notifications