டுவிட்டருக்கு குட்பை., கூ-வுக்கு வெல்கம்- வெளிநாட்டில் சிறகு விரிக்கும் இந்தியாவின் கூ ஆப்: காரணம் தெரியுமா?

|

டுவிட்டர் பயன்பாட்டை தடை செய்த நைஜீரியா அரசு கூ செயலியுடன் இணைந்துள்ளது. இதையடுத்து இந்திய கூ செயலியின் இணை நிறுவனர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் நைஜீரியாவில் டுவிட்டர் தடை செய்வதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளம்

இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளம்

கூ இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளமாக இருந்தது. கூ செயலி குறுகிய காலத்தில் சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் நைஜீரியா அரசு நாட்டில் டுவிட்டரை தடை செய்து கூ செயலிக்கு அங்கீகாரம் வழங்கியதுதான்.

டுவிட்டர் தடைக்கு காரணம் என்ன

டுவிட்டர் தடைக்கு காரணம் என்ன

நைஜீரிய நாட்டின் அதிபராக இருப்பவர் முகமது புஹாரி. நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக சிவில் போர் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் 1967-70 வரை நைஜீரியாவில் நடந்த உள்நாட்டு சண்டையை மேற்கோள்காட்டி நைஜீரியா அதிபர் டுவிட் ஒன்று செய்தார். அதிபரின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

அதிபரின் டுவிட்டர் பதிவு

இதையடுத்து அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நைஜீரிய அரசு டுவிட்டர் பயன்பாட்டுத்து தடை விதித்தது. அதுமட்டுமின்றி நைஜீரியா நாட்டு பொதுமக்களும் டுவிட்டர் பயன்பாட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மீறி டுவிட்டர் பயன்படுத்துவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூ செயலிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல்

கூ செயலிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல்

டுவிட்டருக்கு தடை விதித்த பிறகு நைஜீரிய அரசு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கூ செயலிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கி, கூ செயலியில் நைஜீரிய அரசு கணக்கையும் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி நைஜீரிய அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இனி கூ செயலி மூலமாகவே வெளியாகும் என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பான வரவேற்பு என டுவிட்

அன்பான வரவேற்பு என டுவிட்

நைஜீரிய அரசு கூ-வுடன் இணைவது குறித்து கூ இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா நைஜீரிய அரசின் உத்யோகப்பூர்வ அறிவிப்புக்கு "அன்பான வரவேற்பு" என டுவிட் செய்துள்ளார். அதேபோல் கூ செயலி தற்போது இந்தியாவுக்கு வெளியேயும் சிறகுகளை விரிக்கத் தொடங்கியுள்ளது என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நைஜீரியாவில் கூ செயலி

அதேபோல் நைஜீரியாவில் கூ செயலி கிடைக்கிறது எனவும் உள்ளூர் மொழிகளை இயக்குவது குறித்து அவர்கள் சிந்தித்து வருவதாகவும் ஜூன் 5 அன்று பதிவிட்ட டுவிட்டில் தெரிவிக்கப்பட்டது. டுவிட்டரை தடை செய்த நைஜீரிய அரசு டுவிட்டருக்கு இரட்டை தரநிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டியது. கூ செயலி இந்தியாவிலும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. கூ பயன்பாட்டுக்கு பயனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

டுவிட்டர் போன்று செயல்படும் Koo

டுவிட்டர் போன்று செயல்படும் Koo

டுவிட்டர் போன்று செயல்படும் Koo என்ற செயலி இந்தியாவில் மட்டுமின்றி பலபகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது. மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளவந்துள்ளன. அதன்படி வெளியான முக்கிய செயலியே கூ ஆகும். Koo செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

தமில், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா மற்றும் அஸ்ஸாமி போன்ற பிற மொழிகளிலும் Koo செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Why Nigerian Govt Ban twitter and Joined India's Koo APP?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X