அமெரிக்க அதிபரை 'எப்போதும்' பின்தொடரும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள்..?!

Written By:

'ஃபுட்பால்' (Footbaal) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கருப்பு பெட்டிக்கு - அட்டாமிக் ஃபுட்பால் (Atomic Football), தி பட்டன் (the Button), தி பிளாக் பாக்ஸ் (The Black Box), அதிபரின் எம்ர்ஜென்சி தோள் பை (President's emergency satchel) என பல பெயர்கள் உண்டு..!

இந்த பெட்டியானது அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்னதான் அதற்குள் இருக்கிறது என்று இந்நாள் வரையிலாக தெரிய வந்த விடயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அனுமதி :

அனுமதி :

இந்த கருப்பு லேதர் சூட்கேஸூக்குள் தான், அவசர நிலையில் எந்த இடத்தில் இருந்தபடியும் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த அனுமதி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டளை :

கட்டளை :

வெள்ளை மாளிகையில் இருக்கும் கட்டளை அறையான சுட்சுவேஷன் ரூம் (Situation Room) போன்றவைகளில் அமெரிக்க அதிபர் இல்லாத நேரத்தில் தான் இது பயன் படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பட்டன் :

சிவப்பு பட்டன் :

பெரும்பாலானோர்கள் இந்த கருப்பு பைக்குள் உலகையே அணு ஆயுத தாக்குதல் மூலம் அழிக்கும் வண்ணம் ஒரு சிவப்பு பட்டன் இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் அதில் இருப்பதோ 4 சமாச்சாரங்கள் தானாம்..!

கருப்பு புத்தகம் :

கருப்பு புத்தகம் :

அந்த பெட்டிக்குள், பதிலடி அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்த உதவும் கருப்பு மற்றும் சிவப்பு மையினால் குறிப்புகள் எழுதப்பட்ட 75 பக்கங்கள் கொண்ட கருப்பு புத்தகம் ஒன்று இருக்குமாம்.

வகைப்படுத்தப்பட்ட இடங்கள் :

வகைப்படுத்தப்பட்ட இடங்கள் :

உடன், அமெரிக்க அதிபர் வசிக்கக்கூடிய வகைப்படுத்தப்பட்ட இடங்களின் (classified sites to shelter) பட்டியலை கொண்ட கருப்பு புத்தகம் ஒன்றும் இருக்குமாம்.

விளக்க புத்தகம் :

விளக்க புத்தகம் :

மேலும் அவசரகால அலைபரப்பு அமைப்பு (Emergency Broadcast System) எப்படி இயக்க வேண்டும் என்ற 10 பக்கங்கள் கொண்ட விளக்க புத்தகம் ஒன்றும் அந்த கருப்பு பெட்டிக்குள் இருக்குமாம்.

குறியீட்டு அட்டை :

குறியீட்டு அட்டை :

உடன், அங்கீகார குறியீடுகள் (authentication codes) கொண்ட ஒரு குறியீட்டு அட்டையும் (an index card) அந்த பெட்டிக்குள் இருக்குமாம்..!

பயிற்சி :

பயிற்சி :

இந்த கருப்பு பெட்டியை எடுத்துக்கொண்டும் செல்லும் இராணுவ உதவியாளர்கள், அவசர காலத்தில் உடனடியாக அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்துவது எப்படி என்று அதிபர்களுக்கு கற்றுக்கொடுக்க கூடிய அளவு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்களாம்.

எப்போதும் அதிபர் உடன் :

எப்போதும் அதிபர் உடன் :

இந்த கருப்பு பெட்டியானது, அதிபரின் வீட்டை தவிர்த்து கார், ஹெலிகாப்டர், விமானம், எலிவேட்டர் என எப்போதும் அதிபர் உடன் தான் எடுத்து செல்லப்படுமாம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Why a mysterious black briefcase follows the US president everywhere. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot