Mobile இன்சூரன்ஸில் என்ன சேதங்கள் எல்லாம் கவர் ஆகும்? ஏன் இது எல்லோருக்கும் முக்கியமானது?
இன்றைய காலகட்டத்தில் உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன் தான் மிகவும் முக்கியமான சாதனமாகும். ரூ.10,000 முதல் 1 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட போன்களை இப்போது நாம் பயன்படுத்த துவங்கிவிட்டோம். இத்தகைய விலை உயர்ந்த சாதனங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் தானே!
ஆம், விலை உயர்ந்த போன்களை கைகளில் பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பது பெரிய ரிஸ்க் ஆகும். கை நழுவி போன் கீழே விழுந்தாலோ அல்லது தண்ணீரில் விழுந்தாலோ போனின் கதி அதோகதி தான். இத்தகைய சிக்கல்களில் இருந்து உங்கள் போனை பாதுகாக்கவும், உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் கிடைக்கும் அம்சம் தான் மொபைல் இன்சூரன்ஸ் (Mobile Insurance). கார், பைக் இன்சூரன்ஸ் போல தான் இந்த மொபைல் இன்சூரன்ஸும் செயல்படுகிறது.

மொபைல் இன்சூரன்ஸ் (Mobile Insurance) பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, மொபைல் இன்சூரன்ஸ் உங்கள் போனுக்கு ஏற்படும் பல சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் மொபைல் போன் சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போனாலோ அல்லது களவு போனாலோ, அதற்கு நிகரான செலவை உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவு செய்யாமல், இன்சூரன்ஸ் கவரேஜ் (Mobile Insurance Coverage) மூலம் சரி செய்துகொள்ள அனுமதிக்கிறது.
மொபைல் இன்சூரன்ஸ் பல விதமான கவரேஜ்களை வழங்குகிறது. அவற்றை பற்றி எல்லாம் இப்போது தெரிந்துகொள்ளலாம். முதல் பொதுவான மொபைல் இன்சூரன்ஸ் கவரேஜ் ஆக்சிடென்டல் டேமேஜ் கவரேஜ் (Accidental Damage Coverage) ஆகும். இது உங்கள் போனுக்கு ஏற்படும் பிஸிக்கல் சேதங்களை கவர் செய்கிறது. உங்கள் போனின் டிஸ்பிளே உடைந்தாலோ அல்லது உங்கள் போன் தண்ணீரில் விழுந்து வாட்டர் டேமேஜ் (Water Damage) ஆனாலோ கவரேஜ் தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தெஃப்ட் அல்லது லாஸ் கவரேஜ் (Theft or Loss Coverage) என்பது உங்கள் போன் திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ அதற்கு நிகரான சேதத்தை சரிப்படுத்தும் கவரேஜ் தொகையை உங்களுக்கு வழங்குகிறது. போன் திரும்ப கிடைக்காவிட்டால், உங்களுக்கான புது டிவைஸை வாங்க தேவைப்படும் தொகையை இந்த கவரேஜ் உங்களுக்கு வழங்கும். சில இன்சூரன்ஸ் கவரேஜ் டேட்டா திருட்டிற்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் இன்சூரன்ஸ் இல் இருக்கும் மிக சிறந்த விஷயமே இது குயிக் கிளைம் செட்டில்மென்ட்டை (Quick Claim Settlement) வழங்குகிறது. மொபைல் இன்சூரன்ஸ் இருக்கும் போன்களுக்கு ஏற்படும் சேதங்களை உடனுக்குடன் நாம் சரி செய்துவிட முடியும். கூடுதல் கட்டணம் எதுவுமின்றி சேதமடைந்த பாகங்களை நாம் ரீப்பிளேஸ்மென்ட் (Replacement claims) செய்துகொள்ள முடியும். உங்களுடைய ஸ்மார்ட்போனுக்கு மொபைல் இன்சூரன்ஸ் மிகவும் அவசியமானது என்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
மொபைல் இன்சூரன்ஸ் இல் காம்ப்ரிஹென்சிவ் ப்ரொடெக்ஷன் (Comprehensive Protection) என்ற கவரேஜ் அம்சமும் உள்ளது. இது உங்கள் போன் இயற்கை சீற்றங்கள், நெருப்பினால் சேதம், ஆக்சிடென்டல் டேமேஜ், திருட்டு போன்ற அசம்பாவிதங்களால் ஏற்படும் சேதங்களுக்கு கவரேஜ் தொகையை வழங்குகிறது. மொபைல் இன்சூரன்ஸ்களுடன் கிடைக்கும் ஆட் ஆன்ஸ் சேவை. கூடுதல் பாதுகாப்பிற்காக இது கூடுதல் கட்டணத்துடன் உங்கள் இன்சூரன்ஸ் உடன் சேர்க்கப்படுகிறது. இதை தேர்வு செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.
உதாரணமாக ஆட் ஆன் கவரேஜ் உடன் வொர்ல்டு வைடு கவரேஜ் அம்சம் கிடைக்கிறது. இது இந்தியாவைவிட்டு வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் நபர்களுக்கு பொருத்தமானது. உங்கள் சாதனம் வெளிநாட்டில் இருக்கும் போது சேதமடைந்தால், இந்த அம்சம் உங்களுக்கு கவரேஜ் தொகையை வழங்கும். மொபைல் இன்சூரன்ஸ் எல்லோரிடமும் இருப்பது மிகவும் அவசியமானது. உங்கள் சாதனத்தின் சேதத்தை பெரிய தொகை செலவின்றி சரி செய்ய உடனே மொபைல் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








