Home
News

மாட்டிக்கிட்ட பங்கு.. iPhone 16e இல் Apple சீக்ரெட் ஆக பார்த்துள்ள வேலை! விற்பனைக்கு முன் வெளியான பகீர் தகவல்!

ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் முன்பதிவுகள் இன்று (பிப்.21 ஆம் தேதி) மாலை முதல் தொடங்கவுள்ள நிலையில், ஆப்பிள் (Apple) நிறுவனமானது இந்த புதிய மாடலில் "ரகசியமாக" செய்துள்ள ஒரு வேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதென்னது? ஐபோன் 16இ மாடலை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ சீரீஸின் கீழ் ரூ.50,000 பட்ஜெட்டில் புதிய ஐபோன் எஸ்இ 4 மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ, அதன் ஐபோன் 16 சீரீஸின் கீழ் ரூ.60,000 பட்ஜெட்டில் முற்றிலும் புதிய ஐபோன் 16இ மாடலை அறிமுகம் செய்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

iPhone 16e இல் Apple சீக்ரெட் ஆக பார்த்துள்ள வேலை!

இன்று (பிப்.21) மாலை 6.30 மணி முதல் ஐபோன் 16இ மாடலின் முன்பதிவுகள் தொடங்க உள்ள நிலையில், ஐபோன் 16இ மாடலின் சிப்செட் குறித்த சீக்ரெட் ஒன்று வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16இ மாடலில் குறைந்த சக்தி வாய்ந்த ஏ18 சிப்பை பேக் செய்துள்ளது. அதாவது ஐபோன் 16இ மாடலில் உள்ள ஏ18 சிப்செட் ஆனது ஐபோன் 16 மாடலில் உள்ள ஏ18 சிப்செட்
அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இல்லை!

இது பெரிய அளவிலான வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் நிச்சயமாக இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை காண முடியும். ஐபோன் 16இ ஆனது ஐபோன் 16 மாடலில் உள்ள அதே 6-கோர் சிபியு மற்றும் 16-கோர் என்பியு உடனான ஏ18 சிப்செட்டின் மாறுபாட்டை பயன்படுத்துகிறது. ஆனால் ஐபோன் 16இ மாடலில் உள்ள ஜிபியு ஆனது நான்கு செயல்பாட்டு கோர்களை மட்டுமே கொண்டுள்ளது.

இது ஐபோன் 16 மாடலில் உள்ளதை குறைவாகும். ஐபோன் 16 மாடலில் ஜிபியு ஆனது ஐந்து செயல்பாட்டு கோர்களை மட்டுமே கொண்டுள்ளது நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களிலும் கூட இதே ஏ18 சிப்செட் தான் உள்ளது. ஆனால் அவைகள் 6-கோர் ஜிபியு உடன் இன்னும் சக்திவாய்ந்த மாடல்களாக உள்ளன.

ஆக ஆப்பிள் நிறுவனத்தால், அதன் ஐபோன் சீரீஸின் இ வேரியண்ட் ஆன ஐபோன் 16இ மாடல் ஆனது 4-கோர் ஜிபியுவை கொண்டுள்ளதை எளிமையாக நியாயப்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16இ மாடலின் செயல்திறனை பற்றி பேசுகையில், இது ஏ13 பயோனிக் சிப் கொண்டு ஐபோன் 11 உடன் ஒப்பிடும் போது, சிபியு-வில் 80 சதவீதம் வரை வேகமாகவும், என்பியு-வில் 6 மடங்கு வேகமாகவும் இயங்கும் என்கிறது.

வழக்கம் போல் இந்த வெளியீட்டிலும், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16இ மாடலில் உள்ள ரேம் குறித்த எந்த விவரங்களையும் வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸை ஆதரிப்பதால், குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் இருக்கும் என்று நம்பலாம். விற்பனைக்கு வந்த பின்னரே இதுகுறித்த சரியான விவரங்கள் வெளியாகும்.

ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்வது எப்படி? ஐபோன் 16இ மாடலின் ப்ரீ-ஆர்டர் (இன்று) பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு தொடங்கும். இதை ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழியாக முன்பதிவு செய்யலாம். ஃபிளாக்ஷிப் ஆப்பிள் ஸ்டோர்களை தவிர, மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்களின் வழியாகவும் ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்லாம்.

இப்போதைக்கு ஆப்பிள் அதன் ஐபோன் 16இ மீதான முன்பதிவு சலுகைகள் குறித்து எதையும் வெளியிடவில்லை. தற்போதைய நிலையில், ஆப்பிள் இணையதளம் ரூ.4000 உடனடி தள்ளுபடியுடன் 24 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பட்டியலிட்டுள்ளது. கூடவே ரூ.5000 முதல் ரூ.67000 வரையிலான டிரேட்-இன் சலுகையையும் முன்னிலைப்படுத்தியுள்ளது

ஐபோன் 16இ விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 16இ மாடல் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆப்ஷன்களுமே ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும். ஐபோன் 16இ-ன் விற்பனை பிப்ரவரி 28 முதல் தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Less Powerful A18 Chip in iPhone 16e is Completely Normal While Comparing with iPhone 16 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X