Home
News

கேபிள் TV-ஐ க்ளோஸ் செய்த Jio.. 3.3TB டேட்டா, Netflix உடன் பல OTT, 30Mbps, 1000+ TV சேனல்.. எந்த ரீசார்ஜ்?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புறக்கணிக்க முடியாத ஒரு சிறப்பான திட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக நீங்கள் பெரிய அளவிலான டேட்டா நன்மை உடன் சேர்த்து ஓடிடி (OTT) மற்றும் டிவி சேனல்களை (TV Channels) விரும்பும் வாடிக்கையாளராக இருந்தால், இந்த திட்டத்தை நீங்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாடு முழுவதும் இந்த திட்டத்தை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் பேசும் இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. இது அதிக வேகம் இல்லையென்று தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், பெரும்பாலான இந்திய வீடுகளுக்கு இது போதுமானது.

கேபிள் TV-ஐ க்ளோஸ் செய்த Jio.. 3.3TB டேட்டா, Netflix உடன் பல OTT!

நீங்கள் அலுவலக பணிகளை செய்பவராக இருந்தாலும் சரி அல்லது பொழுதுபோக்கிற்காக இணைய இணைப்பு தேவைப்படுபவராக இருந்தாலும் சரி, இந்த திட்டம் உங்களுக்குப் போதுமானதை விட அதிகமாகவே இருக்கும். நாம் இங்கே பேசுவது ஜியோவின் மாதத்திற்கு ரூ.888 கட்டணம் கொண்ட திட்டத்தை பற்றித்தான்!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.888 பிராட்பேண்ட் திட்டம்: ஏன் இது பெஸ்ட் பிளான்? ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்தை மூன்று மாதங்களுக்கான தொகுப்பாக வழங்குகிறது. அதாவது, நீங்கள் ரூ. 888-ஐ 3-ஆல் பெருக்கினால் வரும் தொகையான ரூ.2,664-ஐ செலுத்த வேண்டும். இதனுடன் ஜிஎஸ்டி-யும் (GST) கூடுதலாக சேர்க்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு, நீங்கள் ஃபைபர் (Fiber) இணைப்பை தேர்ந்தெடுத்தால் மாதத்திற்கு 3.3டிபி ஆகவும், ஏர்ஃபைபர் (AirFiber) இணைப்பை தேர்ந்தெடுத்தால் 1டிபி ஆகவும் இருக்கும். ரூ.888 பிராட்பேண்ட் திட்டம் ஏராளமான ஓடிடி பலன்களையும் வழங்குகிறது. இந்தஓடிடி பலன்களில் Netflix (Basic), Amazon Prime Lite, YouTube Premium, JioHotstar, SonyLIV, ZEE5, SunNXT, Hoichoi, Discovery+, TimesPlay, TarangPlus, Eros Now, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win ஆகியவை அடங்கும்.

பயனர்களுக்கு நீண்ட கால பலனாக, 90 நாட்களுடன் கூடுதலாக ஏழு நாட்களுக்கான சேவையையும் ஜியோ எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வழங்குகிறது. இத்திட்டத்துடன் 1000 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் கிடைக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஜீ5 சந்தாவில் பிரீமியம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான அணுகல் இல்லை என்பதை ஜியோ தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான ஜியோ ரூ.798 பிராட்பேண்ட் பிளான்: சமீபத்தில் ஜியோ, தனது ஜியோஃபைபர் (JioFiber) அல்லது ஜியோஹோம் (JioHome) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. நடைபெற்று வரும் பிஃபா உலகக் கோப்பை 2026-ஐ கருத்தில் கொண்டு இந்த புதிய ரூ.798 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது ஒரு வழக்கமான பிராட்பேண்ட் திட்டம் அல்ல, மாறாக ஒரு 'டேட்டா சேஷெட்' (data sachet) அல்லது கூடுதல் டேட்டா பூஸ்டர் (data booster) பேக் ஆகும். அதாவது ஏற்கனவே ஒரு திட்டத்தின் கீழ் உள்ள பயனரின், அவருக்கு கிடைக்கும் எப்யுபி டேட்டா லிமிட் (FUP Data Limit) தீரும் நிலையில் இருந்தால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்தலாம்.

பிஃபா உலகக் கோப்பை 2026-க்கான ஜியோவின் ரூ.798 டேட்டா சேஷெட் திட்டத்தின் நன்மைகள்: உங்களிடம் ஏற்கனவே ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு இருந்தால், இந்த ரூ.798 திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்து கூடுதல் பலன்களை பெறலாம். இத்திட்டத்தில், பயனர்களுக்கு 40ஜிபி டேட்டாவுடன், அந்த டேட்டாவை பயன்படுத்துவதற்கான 40 நாட்கள் செல்லுபடியாகும் காலமும் (validity) கிடைக்கும்.

மேலும், இதில் ஜீ5 (ZEE5) சந்தாவும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் பிஃபா உலக கோப்பை 2026 போட்டிகளை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். இதில் இண்டர்நெட் ஸ்பீட் 100 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இத்திட்டம் தற்போது ஜியோ இணையதளத்தின் 'டேட்டா சேஷெட்' பிரிவில் கிடைக்கிறது.

ஜீ5 சந்தாவை பெற, நீங்கள் மைஜியோ (MyJio) ஆப்பில் உள்ள 'கூப்பன்' (coupon) பகுதிக்கு சென்று, பின்னர் மை வின்னிங்ஸ் (My Winnings) பகுதிக்கு செல்ல வேண்டும். மாற்றாக, ஏற்கனவே ஜீ5 தளத்திற்கான அணுகலை உள்ளடக்கிய ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Why Jio Rs 888 3 Months Subscription Broadband Plan is Best Offer 30 Mbps Speed OTT 1000 TV Channels and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X