14 நாட்கள் வேலிடிட்டி குறைப்பு.. Jio கஸ்டமர்களின் வயிற்றில் அடிக்கும் அம்பானி.. இனி இந்த திட்டம் 70 நாள் தான்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் இருந்து சுமார் 10900000 வாடிக்கையாளர்கள் (10.9 மில்லியன் கஸ்டமர்கள்; அதாவது சுமார் 11 லட்சம் பேர்) வெளியேறி உள்ளனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் முகேஷ் அம்பானிக்கு கவலை இல்லை என்பது போல் தெரிகிறது. ஒருபக்கம் டிஸ்னி உடனான கூட்டணி சக்ஸஸ் ஆகிவிட்டது; இதன் விளைவாக ஜியோ சினிமா ஆப் ஆனது ஹாட்ஸ்டார் உடன் ஒருங்கிணைக்கப்படும் என்பது போல் தெரிகிறது. மறுபக்கம் வழக்கத்திற்கு மாறாக ஜியோ நிறுவனம் எந்த விதமான பெரிய தீபாவளி ஆபரையும் (Diwali Offer) அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் மிகவும் பிரபலமான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியில் இருந்து 14 நாட்கள் "சைலன்ட் ஆக" குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 70 நாட்கள் என்கிற வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. அதென்ன திட்டம்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். இதே விலையில் வோடபோன் ஐடியாவிடமும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது; ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்தது ஆனால் இப்போது அது ரீசார்ஜ் செய்ய கிடைப்பதில்லை. ஏனென்றால் அது ரூ.799 ஆக மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் ஜியோவோ ரூ.666 திட்டத்த்தின் விலையை அதிகரிக்காமல் அதன் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
ஜியோவின் ரூ.666 அது தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி தான் 84 நாட்களில் இருந்து 70 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இனி திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்காது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களுமே 2ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் மட்டுமே தத்தம் இலவச 5ஜி டேட்டா ஆபரை வழங்க முடிவு செய்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை 5ஜி டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பாதிப்பாக இருக்கும்; ஆனால் 14 நாட்கள் என்கிற அளவிலான வேலிடிட்டி குறைப்பானது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களையுமே பாதிக்கிறது.
வோடபோன் ஐடியாவின் கீழ் ரூ.666 க்கு ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று ரீசார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூட, அது ஜியோவை குறைவான வேலிடிட்டி உடன் வருகிறது. இது 64 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனாலும் கூட இது ஜியோவின் ரூ.666-ஐஅசால்ட் ஆக தூக்கி சாப்பிடும் படியான நன்மைகளை வழங்குகிறது. ஆக எப்படியும் ரூ.666 செலவு செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் என்றால்.. உங்களிடம் விஐ சிம் கார்டும் இருந்தால், ஜியோவிற்கு ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக வோடாபோனிற்கு ரீசார்ஜ் செய்யலாம்.
வோடாபோன் ஐடியாவின் ரூ.666 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதுவும் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 64 நாட்கள் ஆகும், அதாவது இது ஜியோவின் திட்டத்தை விட ஆறு நாட்கள் குறைவான வேலிடிட்டி உடன் வருகிறது
ஆனால் இதன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் மிகவும் சுவாரஸ்யமானவைகளாக உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்த அனுமதிக்கும் டேட்டா ரோல்ஓவர், நள்ளிரவில் இலவச டேட்டா நன்மையை வழங்கும் டேட்டா டிலைட்ஸ் மற்றும் பிஞ்ச் ஆல் நைட் போன்ற நன்மைகள் கிடைக்கிறது.
இதெல்லாமே விஐ ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளின் (Vi Hero Unlimited benefits) கீழ் தொகுத்து வழங்கப்படுகிறது. ஜியோவுடன் ஒப்பிடும் போது விஐ-யின் ரூ.666 திட்டமானது 6 நாட்கள் குறைவான வேலிடிட்டியை வழங்கினாலும், கூடுதல் நன்மைகள் என்று வரும் போது, ஜியோவை தூக்கி சாப்பிடுகிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








