ரூ.100 பட்ஜெட்ல ஒன்னு.. ரூ.400 பட்ஜெட்ல ஒன்னு.. இலவசங்களை அள்ளி வழங்கும் 2 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் பயனர்களுக்கு, ஸ்னாப்சாட் பிளஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவைகள் ரூ.111 மற்றும் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும்.
இவ்விரு திட்டங்களும் இப்போது ஸ்னாப்சாட் பிளஸ் உடன் வருகின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவையாக உள்ளது. ஒன்று - தனிப்பட்ட சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது, மற்றொன்று அவ்வாறு இல்லை. அதாவது ரூ.111 திட்டம் என்பது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும், இது சர்வீஸ் வேலிடிட்டி உடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது செயல்படுகிறது. மறுகையில் உள்ள ரூ.459 திட்டம் ஆனது தனிப்பட்ட சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.111 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.111 திட்டமானது 5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், ஜியோ நிறுவனத்திடமிருந்து ஏதேனும் ஒரு பிரீமியம் ஓடிடி விருப்ப தொகுப்பை தேர்ந்தெடுக்கலாம்.
முதல் விருப்பம் 56 நாட்களுக்கு ஜியோகேம் மொபைலுடன் வருகிறது, இரண்டாவது விருப்பம் ஜியோகேம் மொபைல், ஃபேன்கோட் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதன்கீழ் கிடைக்கும் சந்தாக்களை மைஜியோ ஆப் (MyJio App) மூலம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது உரிமை கோரலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.459 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459 திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் 5ஜிபி போனஸ் டேட்டா ஆகிய நன்மைகள் உள்ளன. மைஜியோ ஆப் வழியாக ஜியோ கேம்ஸ் மொபைல், ஸ்னாப்சாட் பிளஸ் போன்ற கூடுதல் பலன்களும் உள்ளன.
மேலும் மூன்று மாதங்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் 50ஜிபி இலவச ஸ்டோரேஜ் போன்ற சிறப்பு ஜியோ பலன்களும் இதன் கீழ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்துடன், பயனர்கள் 18 மாதங்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவையும் பெறுகிறார்கள். பயனர்கள் 5000ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பலவற்றை பெறலாம்.
ஸ்னாப்சாட் சந்தாக்களுடன் வரும் இந்த இரண்டு திட்டங்களுமே - ஜியோ நிறுவனத்தின் ஆப் மற்றும் வலைத்தளம் வழியாகவே ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன பயனர்களுக்கு ஸ்னாப்சாட் அணுகலை வழங்கும் இந்த துறையின் முதல் நிறுவனம் ஜியோ ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
OPINION: இது ஒரு சிறந்த தொகுப்பு திட்டமாகும், ஏனெனில் ஏராளமான இளம் இந்தியர்கள் ஸ்னாப்சாட்டை பயன்படுத்துகின்றனர், மேலும் இந்த வாடிக்கையாளர்கள் ஒருமுறை இந்த திட்டங்களிலும் ஜியோவின் நெட்வொர்க்கிலும் இணைந்துவிட்டால், அவர்கள் நீண்ட காலத்திற்கு அந்த நெட்வொர்க்குடனோ அல்லது நிறுவனத்துடனோ தொடர்ந்து இருப்பார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏப்ரல் 2026-க்கான தனது ப்ரீபெய்ட் டேட்டா பேக் தொகுப்பை விரிவுபடுத்தி புதுப்பித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தகது. தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் சீசனை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், கிரிக்கெட்டை மையமாக கொண்ட சலுகைகளுக்கு இதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் தற்போது ரூ.100 மற்றும் ரூ.100 க்குள் ரீசார்ஜ் செய்ய 12 ஜியோ டேட்டா பேக்குகள் உள்ளன. அந்த பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
https://tamil.gizbot.com/news/mukesh-ambani-led-reliance-jio-now-have-12-prepaid-data-packs-under-rs-100-068359.html


Click it and Unblock the Notifications