இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போது ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து, அவற்றை நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை செய்தும் வருகிறது. உண்மையில் மக்கள் 5ஜி என்ற வார்த்தையைப் பார்த்ததும், ஆஹா இது அடுத்த தலைமுறை நெட்வொர்க்கில் இயங்கும் போன் தானே, உடனே நம்மை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இப்போதிலிருந்தே வாங்கத் துவங்கிவிட்டனர். ஆனால், இதனால் இப்போதைக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை.

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் சிறந்தது இல்லை

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் சிறந்தது இல்லை

உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் பயனளிக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அனைவருக்கும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் இப்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் சிறந்தது இல்லை என்றும், ஏன் இது அவ்வளவு பயனளிக்காது என்பதையும் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். ஸ்மார்ட்போன்கள் இன்றைக்கு அவசியமாகிவிட்டன என்பதைப் பலர் ஒப்புக்கொள்வார்கள். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டப் போகிறதா 5ஜி?

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டப் போகிறதா 5ஜி?

இன்னும் துல்லியமாகச் சொல்ல போனால், அடுத்த தலைமுறை இணைப்புக்கான ஆதரவுடன் கூடிய சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களின் தேவை அவசியமாகிவிட்டன. 5ஜி இணைப்பு அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டப் போகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு விலை வரம்பிலும் 5G சாதனங்கள் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விளம்பரம் டிவி பார்க்கும் அனுபவத்தை மோசமாக்குகிறது.. உயர் நீதிமன்றத்தில் TRAI புகார்..அதிக விளம்பரம் டிவி பார்க்கும் அனுபவத்தை மோசமாக்குகிறது.. உயர் நீதிமன்றத்தில் TRAI புகார்..

இப்போதைக்கு இது ஏன் சிறந்த முடிவாக இருக்காது?

இப்போதைக்கு இது ஏன் சிறந்த முடிவாக இருக்காது?

நீங்கள் இந்தியாவில் இப்போது ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். முதல் விஷயம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 5G நெட்வொர்க்குகள் உங்களுக்கு வராமல் போகலாம், அதற்கான வாய்ப்பே இங்கு அதிகமாக இருக்கிறது. உங்கள் கைகளில் 5G ஸ்மார்ட்போன் வேண்டும் என்பதற்காக மட்டுமே நீங்கள் மேம்படுத்துகிறீர்கள் என்றால், அது இப்போதைக்குச் சிறந்த முடிவு அல்ல. இது சில பல முக்கிய காரணங்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் தற்போது நேரடி 5G நெட்வொர்க்குகள் இல்லை

இந்தியாவில் தற்போது நேரடி 5G நெட்வொர்க்குகள் இல்லை

முதலாவதாக, இந்தியாவில் தற்போது நேரடி 5G நெட்வொர்க்குகள் இல்லை. மேலும், நீங்கள் ஒரு மெட்ரோ நகரத்தில் இல்லை என்றால், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5G சேவைகளைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கவே வேண்டாம். பின்னர், 5G வந்தாலும், நிச்சயமாக, அதன் திட்டங்கள் அதிக நன்மைகளுடன் அதிக விலையில் தான் தொகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இவை விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் நல்ல வேகத்தைப் பெற்றிருந்தால் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்றிருந்தால், நீங்கள் 4G திட்டங்களை வாங்கலாம்.

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

5ஜி போனில் 4ஜி பயன்படுத்தி என்ன பயன் மக்களே

5ஜி போனில் 4ஜி பயன்படுத்தி என்ன பயன் மக்களே

வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இணைப்பு இருப்பதை உறுதிசெய்யும் ஆபரேட்டர்களுடன் பேசிய பிறகு பொருத்தமான பேண்ட் ஆதரவுடன் சாதனங்களை வெளியிடுகிறோம் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இந்த நேரத்தில் 5G சாதனத்தின் விலை அதிகமாக இருந்தால் அதை ஏன் பயன்படுத்த வேண்டும்? உண்மையைச் சொன்னால், வரையறுக்கப்பட்ட அம்சங்களைக் கொண்ட 5G ஃபோனுக்குப் பதிலாக வலுவான விவரக்குறிப்புகள் கொண்ட 4G சாதனத்தைப் பெறுவது சிறப்பானது.

5G வெளியீடு விரிவுபடுத்தப்பட இன்னும் பல காலமாகலாமா?

5G வெளியீடு விரிவுபடுத்தப்பட இன்னும் பல காலமாகலாமா?

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 4G நெட்வொர்க்குகளை பரப்புவதற்கு இந்தியா பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4Gயை விரிவுபடுத்தும் பணியில் இன்னும் ஈடுபட்டுத் தான் வருகிறது. 5ஜி அறிமுகத்திற்குப் பின்னர் ஒரு வருடத்தில் 5G வெளியீடு விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பில்லை.5G நெட்வொர்க்குகள் உங்களை அணுகுவதற்குக் கணிசமான நேரம் எடுக்கும் என்பதே உண்மையாக இருக்கிறது.

JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?

இதுவே சிறந்த முடிவாக இருக்கும்

இதுவே சிறந்த முடிவாக இருக்கும்

வெறும் பெயருக்காக ஒரு 5G சாதனத்தை ஆடம்பரமாக வாங்கி, பயனளிக்கலாம் இருப்பதற்குப் பதிலாக நீங்கள், 4ஜி உடன் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போனை அதே விலையில் வாங்கி பயன்படுத்தலாம். இதுவே இப்போதைக்கு சிறந்த முடிவாக அமையும். அடுத்தபடியாக 5ஜி உங்கள் வட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் உங்களை மேம்படுத்திக்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்பதே இயல்பு.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Why It Is Not Best To Buy 5G Phones In India Right Now Know The Reason Before You Buy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X