BSNL மீது இந்திய அரசின் ஓர வஞ்சனை? இதையே அம்பானி கிட்ட சொல்லுவீங்களா?

|

BSNL நிறுவனத்தின் திறமைக்கு அதன் தற்போதைய நிலைக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என்பதை, யார் ஒற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ.. பிஎஸ்என்எல் யூசர்கள் கண்டிப்பாக ஒற்றுக்கொள்வார்கள்!

அதே சமயம் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே தெரியும் - அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமானது 5ஜி ஏலத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று!

மறுக்கப்படும் வழிகள்!

மறுக்கப்படும் வழிகள்!

"BSNL நிறுவனத்தால் எப்படி 5ஜி ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்? நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அணுக கிடைக்கும் 4ஜி நெட்வொர்க்கையே கூட இன்னும் அறிமுகம் செய்யாத ஒரு டெலிகாம் ஆப்ரேட்டரால் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் கால் வைக்க முடியும்?" என்கிற கேள்வி மிகவும் நியாயமான கேள்வி தான்!

ஆனால் உண்மை என்னவென்றால், BSNL நிறுவனத்தின் 4ஜி-க்கு வழி இல்லை என்று சொல்வதை விட, எளிமையான மற்றும் வேகமான வழிகள் எல்லாம் மறுக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்!

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

BSNL மீது இந்திய அரசின் ஓர வஞ்சனை?

BSNL மீது இந்திய அரசின் ஓர வஞ்சனை?

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எந்தவிதமான இடைஞ்சல்லும் கொடுக்க கூடாது என்கிற எண்ணத்தின் கீழ் தான்..

BSNL நிறுவனத்திற்கு 4ஜி-க்கான நிதி உதவி, ஆதரவு, ஒத்துழைப்பு என எதுவுமே கொடுக்கப்படவில்லை... அது இந்திய அரசின் ஓர வஞ்சனை என்கிற பேச்சுக்கள் இன்னும் அடிபடுகின்றன.

அதையே ஓர வஞ்சனை என்றால்..

அதையே ஓர வஞ்சனை என்றால்.. "இதை" என்னவென்று சொல்வீர்கள்?

உண்மை என்னவென்றால், BSNL நிறுவனத்தால் கூடிய விரைவில் அதன் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி BSNL 4G-க்காக உதவி செய்வதற்கும் கூட "ஆள்" உண்டு.

அதாவது BSNL 4ஜி-க்கு "தேவையான பொருட்களை" வழங்க தயாராக இருக்கும் சர்வதேச விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால் இந்திய அரசாங்கம் அதற்கு வழி விடவில்லை; வழி விட போவதும் இல்லை!

எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவை அறிமுகமாக வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது.

ஒருவேளை இந்திய அரசாங்கமானது, சீன நிறுவனங்களை புறக்கணித்து இருந்தால் கூட பரவாயில்லை.

மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி-க்காக உதவி செய்யும், ஃபின்னிஷ் டெலிகாம் கியர் விற்பனையாளரான நோக்கியாவை புறக்கணிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை!

வழி விட்டால்.. அடுத்த மூன்று மாதங்களில்!

வழி விட்டால்.. அடுத்த மூன்று மாதங்களில்!

டிஓஐ வழியாக வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, "நோக்கியா உதவி செய்யும் பட்சத்தில் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் BSNL 4G-ஐ அறிமுகம் செய்ய முடியும்" என்று நோக்கியாவின் இந்திய வணிகத் தலைவர் ஆன சஞ்சய் மாலிக் கூறி உள்ளார்!

அதுமட்டுமின்றி "பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி திட்டத்தை செயல்படுத்த நோக்கியா தயாராக இருப்பதாகவும், நிறுவனத்தின் உபகரணங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில் (தெற்கு மற்றும் மேற்கு இந்தியா), வெறும் மூன்று முதல் நான்கு மாதங்களில் 4ஜி நெட்வொர்க்கை தயார் செய்ய முடியும்" என்றும் அவர் கூறி உள்ளார்!

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

இருப்பினும், இது ஒருபோதும் நடக்காது!

இருப்பினும், இது ஒருபோதும் நடக்காது!

BSNL நிறுவனத்தின் 4G நெட்வொர்க்கை பொறுத்தவரை, அது உபகரணங்களாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, இந்த இரண்டுமே புவியியல் எல்லைகளுக்கு வெளியே இருந்து வரக்கூடாது என்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கிறது!

இதே போன்ற கட்டுப்பாடுகளை, ரிலையன்ஸ் ஜியோ போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்க முடியுமா? என்று கேட்டால்.. அதற்கு எந்த பதிலும் கிடைக்காது!

TCS-க்கு முக்கியத்துவம்!

TCS-க்கு முக்கியத்துவம்!

இந்திய அரசாங்கத்தின் இந்த தீர்க்கமான முடிவின் விளைவாகவே, C-DoT (டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம்) தலைமையிலான கூட்டமைப்பில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் BSNL-இன் 4G வெளியீட்டு திட்டங்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், TCS ஏற்கனவே அதன் 4G தொழில்நுட்பத்திற்கான Proof of concept-ஐ வழங்கியுள்ளது, இப்போது ஆர்டருக்கான இறுதி ஒப்பந்தம் மட்டுமே நிலுவையில் உள்ளது!

Best Mobiles in India

English summary
Why Indian Government Do Not Want Nokia to Help BSNL For 4G Rollout

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X