Home
News

கூகுளில் இந்த இரண்டு வார்த்தைகளை அதிகம் தேடித் திரிந்த இந்தியர்கள்.!

காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல் அதிகரித்தளாதக ஐக்கிய நாடுகள் சபை முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

By Prakash S

நேற்றைய முன்தினம் (14-6-2018) கூகுள் வலைதளத்தில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை இந்தியர்கள் மிக அதிகமாக தேடியுள்ளனர், அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். நேற்றைய முன்தினம் கூகுளில் Fallacious மற்றும் tendentious என்ற இரண்டு வார்த்தைகள் அதிமான இந்தியர்களால் தேடப்பட்ட வார்தைகளாக திகழ்ந்தன.

இவை காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை கடுமையாக சாடியிருந்ததாக அந்த அறிக்கை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

மேலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை கடுமையாக சாடிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில் இந்தியா சார்பில் வெளியிட்ட அறிக்கையில் Fallacious (தவறான), tendentious (சார்புடைய), motivated (உள்நோக்கம்), overtly prejudiced (வெளிப்படையாக பாரபட்சம்), false narrative (தவறான விளக்கம்)ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தியா

இந்தியா

அதன்பின்பு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது, சரிபார்க்கப்படாத தகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகும்,அதில்
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும்விதமாகவும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர்:

காஷ்மீர்:

குறிப்பாக காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது, இதன் குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு அறிக்கை

மறுப்பு அறிக்கை

பின்னர் வெளியுறவுத் துறையின் மறுப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த Fallacious மற்றும் tendentious என்ற அந்த இரண்டு வார்த்தைகளே கூகுளில் இந்தியர்களால் நேற்று அதிகம் தேடப்பட்ட வார்த்தகளாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Why India spent the day googling for these two words : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X