Home
News

Google ஊழியர்கள் வாயை திறந்தாலே Demis Hassabis தான்.. யார் இவர்? Sundar Pichai-ஐ தூக்கிட்டு CEO-வாக அமர்வாரா?

நெருப்பில்லாமல் புகையாது என்பதால்.. கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்கிற கேள்வியை சாதாரணமாக கண்டந்துபோக முடியவில்லை. குறிப்பாக "நம்ம சுந்தர் பிச்சையை தூக்கிட்டு அவர் இடத்திற்கு வரப்போவது யார்?" என்கிற கேள்வி கடந்த பல வாரங்களாகேவ அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு தற்போது "கிட்டத்தட்ட" ஒரு விடை கிடைத்துவிட்டது என்பது போல் தெரிகிறது!

டீப் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டெமிஸ் ஹசாபிஸ், கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆன சுந்தர் பிச்சையின் "சாத்தியமான மாற்றாக" இருக்கலாம் என சில கூகுள் ஊழியர்கள் நம்புகிறார்கள். இப்படி யோசிப்பதற்கு அவர்களிடம் சில நல்ல காரணங்களும் உள்ளது. அடுத்த சிஇஓ குறித்து கூகுள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பதை அழுத்தமாக கூறிவிட்டு.. டெமிஸ் ஹசாபிஸ் பற்றி மேற்கொண்டு பேசுவோம்.

Google ஊழியர்கள் வாயை திறந்தாலே Demis Hassabis தான்.. யார் இவர்?

பிஸ்னஸ் இன்ஸைடரின் (Business Insider) சமீபத்திய அறிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் ஹசாபிஸின் விரைவான வளர்ச்சி சுந்தர் பிச்சையின் "உச்சக்கட்ட பயணத்தை" போன்ற ஒரு முறையைப் பின்பற்றிவதாக
கூறுகிறது. "அவரது உயர்வு எனக்கு சுந்தரின் எழுச்சியை நினைவூட்டுகிறது" என்று ஹசாபிஸ் மற்றும் சுந்தர் பிச்சையுடன் நெருக்கமாக பணியாற்றிய நீண்டகால கூகுள் ஊழியர் ஒருவர் பிஸ்னஸ் இன்ஸைடரிடம் கூறியுள்ளார்

திடீரென்று, நீங்கள் சுந்தர் என்ற பெயரை அடிக்கடி கேட்க தொடங்கினீர்கள், மேலும் அவருக்கு - மேலும் மேலும் பொறுப்புகள் இருந்தன, திடீரென்று, அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். டெமிஸின் எழுச்சியும் இதேபோன்றது தான். இப்போது திடீரென்று, கூகுளில் தற்போது மிக முக்கியமான குழுவான டீப் மைண்டிற்கு இப்போது அவர் தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

நினைவூட்டும் வண்ணம் ஹசாபிஸ் கடந்த 2014 இல் கூகுளில் சேர்ந்தார். ஷேன் லெக் மற்றும் முஸ்தபா சுலேமான் ஆகிய இருவரும் இணைந்து நிறுவிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப் மைண்டை கூகுள் வாங்கிய அதே ஆண்டில்! அந்த நேரத்தில் ஹசாபிஸ் ஆராய்ச்சியிலிருந்து தயாரிப்பு மேம்பாடு மற்றும் பெருநிறுவன தலைமைக்கு மாற வேண்டியிருந்தது.

டெமிஸ் ஹசாபிஸ் தான் அடுத்த கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறலாம் என கூகுள் ஊழியர்கள் ஏன் நம்புகிறார்கள்? பிஸ்னஸ் இன்ஸைடரின் அறிக்கையின்படி, ஹசாபிஸ் - தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட கூகுளால் தயார்படுத்தப்படுவதக்க கூகுள் ஊழியர்கள் நம்புகிறார்கள்.

ஏஐ பற்றிய அவரது ஆழமான புரிதலும் நிறுவனத்திற்குள் அதிகரித்து வரும் செல்வாக்கும் அவரை ஒரு இயல்பான வேட்பாளராக ஆக்குகிறது. குறிப்பாக கூகுள் ஏஐ-பர்ஸ்ட் நிறுவனமாக மாறுவதை நோக்கி அதன் மாற்றத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில் ஹசாபிஸ் தான் மிகவும் புத்திசாலித்தனமான தேர்வாக இருப்பார் என்று கூகுள் ஊழியர்கள் நம்புகிறார்கள்.

"இது நடக்கப்போவதில்லை என்பது என் கருத்து," என்றும் ஒரு கூகுள் ஊழியர் கருத்து தெரிவித்துள்ளார். சிலர் - ஹசாபிஸ் இந்த பொறுப்பை விரும்பாமல் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பது, மிகப்பெரிய விளம்பரம் மற்றும் தேடல் வணிகங்களை மேற்பார்வையிடுவது, ஒழுங்குமுறை ஆய்வுகளை கையாள்வது மற்றும் பங்குதாரர்களுக்கு பதிலளிப்பது - அவர் விரும்பும் ஆராய்ச்சிப் பணியிலிருந்து அவரை விலக்கக்கூடிய பொறுப்புகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ்? டெமிஸ் ஹசாபிஸ் ஒரு பிரிட்டிஷ் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர், நரம்பியல் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இப்போது இவர் கூகுள் டீப் மைண்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆக இருக்கிறார். லண்டனில் பிறந்த ஹசாபிஸ் கேம்பிரிட்ஜில் கணினி அறிவியலை பயின்றார் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவாற்றல் நரம்பியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

2010 ஆம் ஆண்டில், மனிதர்களை போல சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் கூடிய செயற்கை பொது நுண்ணறிவு (AGI) இயந்திரங்களை உருவாக்கும் குறிக்கோளுடன் டீப் மைண்ட் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது கூகுள் டீப் மைண்டில் கூகுளின் ஏஐ முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். மேலும் கூகுளின் எதிர்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மாறுவார் என்றும் கருதப்படுகிறார்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Google employees Believe That Demis Hassabis Could be Replace Sundhar Pichai As Next Google CEO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X