தினமும் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் Google.. இதற்கான காரணத்தை கூறிய சுந்தர் பிச்சை..
உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை உள்ளார். சமீபத்தில் சுந்தர் பிச்சை நேர்காணல் ஒன்றில் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை The David Rubenstein Show: Peer to Peer Conversations-இன் இன் நேர்காணலில் தன்னுடைய நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டர்.

இதில் ஊழியர்களுக்கு இலவச உணவை வழங்கும் கூகுளின் வழக்கம் இந்த உரையாடலின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதாவது சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஒரு பெரிய செலவாக இருக்காது எனவும் மாறாக அது நிறுவனத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது என்று கூறியுள்ளார்.
அதாவது இலவச உணவு ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, அவர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. பின்பு கஃபேவில் அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலம் புதிய யோசனைகள் வருகின்றன என்றும் கூறினார். குறிப்பாக இந்த யோசனைகள் நிறுவனத்திற்குப் பல நன்மை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் கூகுள் நிறுவனம் உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. எனவே தான் இந்த கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்வது என்பது தற்போது பலரின் லட்சியமாக உள்ளது என்றே கூறலாம். அதன்படி கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கான தகுதி குறித்தும் சிஇஒ சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.
சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், கூகுள் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் மென்பொறியளர்களை எதிர்பார்க்கிறது என்றும், கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும், கொடுக்கப்படும் புதிய சாவல்களை ஏற்றுக் கொண்டு அதில் பாடம் படித்து முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தற்போது ஆரம்பக் கட்ட தொழில்நுட்ப பணிகளுக்குப் போட்டிகள் கடுமையாக இருக்கிறது, எனவே அந்தப்பணிகளுக்குச் சேர விரும்பும் நபர்கள், தங்களை வேறுபடுத்திக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் வழங்கும் பணியாணைகளை 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். இது வேலைச்சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய வலிமையைக் காட்டுகிறது. அதேபோல் தொழில்நுட்ப துறையில் ஆட்கள் தேர்வு குறைந்துவிட்ட நிலையிலும், கூகுளில் பணிபெறுவது என்பது மதிப்புமிக்க சாதனை தான்.
அதேபோல் சுந்தர் பிச்சை தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றி சில முக்கிய விஷயங்களையும் கூறினார். அதாவது அவர் தனது 82 வயதான தந்தை மற்றும் தாயும் நெருக்கமாகவும் இருப்பதாகவும், அவரின் தந்தை சிறு வயதில் இருந்தே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார். பின்பு கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இளங்கலைப் படிப்பின் போது சந்தித்த தனது மனைவியைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: eazydiner.com, vikasjoshi.in


Click it and Unblock the Notifications








