Just In
- 7 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 10 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 10 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 11 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
- News
மாட்டிறைச்சி.. மின்கம்பத்தில் கட்டிவைத்து அசாம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. பரபர கர்நாடகா.. ஷாக்
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற சுந்தர் பிச்சை: காரணம் இதுதான்.!
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்திய தூதரகம்
இந்நிலையில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் முதல்முறையாக இந்திய தூதரகத்திற்கு வருகை தந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.

தரன்ஜித் சிங் சந்து
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகத்திற்குச் சென்று தரன்ஜித் சிங் சந்து அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மயமாக்கல்
குறிப்பாக இந்த சந்திப்பில் இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்கள்,டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் சுந்தர் பிச்சை.

அமெரிக்கா தலைநகர்
அதேபோல் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் டிசி நகரத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு விஜயம் செய்த பின்னர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த உரையாடலுக்கு இந்திய தூதர் சந்துவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுந்தர் பிச்சை தூதரகத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா
மேலும் இந்த சந்திப்பில் இந்தியாவுக்கான கூகுளின் அர்ப்பணிப்பு குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், இந்தியாவின்
டிஜிட்டல் எதிர்காலத்திற்கான எங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தரண்ஜித் சிங் கூறியது என்ன?
அதேபோல் இந்த முக்கியச் சந்திப்பு குறித்து இந்திய தூதர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தூதரகத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை விரிவுபடுத்துவது பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளது எனவும், இளைஞர்களுக்கு கூகுள் அளித்து வரும் பயிற்சி போன்ற பல சேவைகள் பாராட்டத்தக்கது எனவும் இந்திய தூதர் சந்து தெரிவித்தார்..

கோவிட்-19
நமது இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு கூகுள் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது என்றும் தரண்ஜித் சிங் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் கோவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு வர கூகுள் நிறுவனம் அதிகமாக உதவியது என்றும்
இந்திய தூதர் சந்து தெரிவித்தார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470